யேகோவா யீரே #1 Grass Valley, California, USA 62-07-05 1. நாம் சற்று நேரம் நின்ற வண்ணமாக, ஜெபத்துக்காக தலை வணங்குவோம். இன்றிரவு எத்தனை பேர் ஜெபத்தில் நினைவு கூரப்பட விரும்புகிறீர்கள்? தேவன் உங்களுக்கு செய்ய வேண்டுமென்று உங்கள் இருதயத்தில் ஏதாவதொன்றை நீங்கள் வைத்திருப்பீர்களானால்: உங்கள் கரங்களையுயர்த்துங்கள். நமது தலைகளையும் நமது இருதயங்களையும் அவருக்கு முன்னால் நாம் வணங்கப் போகும் இந்நேரத்தில், கர்த்தர் தாமே இந்த விண்ணப்பங்களை நிறைவேற்றுவாராக. 2 எங்கள் பரலோக பிதாவே, மறுபடியுமாக நாங்கள் மகத்தான தேவனுடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால் உமது கிருபாசனத்தை அணுகுகிறோம். நாங்கள் கேட்பதற்கு நீர் செவி கொடுத்து உத்தரவு அருளுவீர் என்னும் உறுதியுடன் வரக்கூடிய தருணத்துக்காக நாங்கள் உமக்கு நன்றி செலுத்துகிறோம். பிதாவே, எங்கள் பாவங்களை, அதாவது எங்கள் அவிசுவாசத்தை, மன்னிக்குமாறு ஜெபிக்கிறோம். பிதாவே, இன்றிரவு எங்களுக்கு விசுவாசத்தை - அபரிமிதமான விசுவாசத்தை தந்தருள வேண்டுமென்று ஜெபிக்கிறோம். உயர்த்தப்பட்ட ஒவ்வொரு கரத்துக்கும் பின்னால், இருதயத்தில் என்ன இருந்தது என்பதை நீர் அறிவீர். கர்த்தாவே, அவர்களுக்கு ஏதோ ஒன்று தேவையாயுள்ளது. அவர்கள் உம்மிடத்திலிருந்து ஒன்றை எதிர்பார்த்து, தங்கள் கரங்களை பயபக்தியோடு உயர்த்தினர். பரலோகப் பிதாவே, அது என்னவாயிருப்பினும், அது ஜனங்களுக்கு அருளப்பட வேண்டுமென்று வேண்டிக்கொள்கிறேன். நேற்று மாலை எங்களை நீர் சந்தித்ததற்காக உமக்கு நன்றி செலுத்துகிறோம். இன்றிரவும் நீர் அளவில்லாத வல்லமையுடனும் கிருபையுடனும் எங்களிடம் திரும்ப வந்து, எங்கள் இருதயத்தின் வாஞ்சையை அருள வேண்டுமென்று ஜெபிக்கிறோம். உண்மையில், உமது சித்தத்தை செய்வதும், உமது சித்தத்தை நிறைவேற்றுவதைக் காண்பதுமே எங்கள் வாஞ்சையாயுள்ளது. வியாதியஸ்தர்களைக் குறித்தும் உமது சித்தம் என்னவென்பதை நாங்கள் அறிவோம். நாங்கள் சுகமாக வேண்டுமென்பதற்காக உமது முதுகு வாரினால் அடிக்கப்பட்டு தழும்புகளைப் பெற்றது. ''அவருடைய தழும்புகளால் நாங்கள் குணமானோம். பிதாவே, உமது மகத்தான சித்தம் இன்றிரவு நிறைவேற ஜெபிக்கிறோம். அதை விசுவாசிக்க அபரிமிதமான விசுவாசத்தை எங்களுக்களித்து, வியாதியாயுள்ள ஒவ்வொரு நபரும் சுகமடையவும், இழக்கப்பட்ட ஒவ்வொரு நபரும், அவர் நமது மீறுதல்களினிமித்தம் காயப்பட்டார் என்பதை நினைவு கூர வேண்டுமென்றும் வேண்டிக் கொள்கிறோம். கர்த்தாவே, இதை அருள்வீராக. அவர்களுக்காக இரத்தம் தோய்ந்த பலி அங்குள்ள வரைக்கும், அவர்களுடைய பாவங்களை தேவனால் காணமுடியாது என்பதை அவர்கள் அறிந்து கொள்வார்களாக. ஆனால் அவர்களுடைய பாவங்களை அவர்கள் பகிரங்கமாக அறிக்கையிடாமல் அதை ஏற்றுக்கொண்டு மறுபிறப்பு அடைவார்களானால், தேவனுடைய இராஜ்ஜியத்தில் பிரவேசிக்க அவர்களுக்கு ஒரு வழியும் இல்லை. ஒவ்வொரு நபரும் இரத்தத்தின் கீழ் வரக்கூடிய இரவாக இன்றிரவு அமைந்திருப்பதாக. கர்த்தராகிய இயேசுவின் நாமத்தில் உமக்கு துதியை ஏறெடுக்கிறோம். ஆமென். 3 மறுபடியுமாக இன்றிரவு இங்கு வந்து பேசும்படியான வாய்ப்பினை மிகுந்த சிலாக்கியமாகக் கருதுகிறேன். நேற்று மாலை நமக்கு மகத்தான தருணம் உண்டாயிருந்தது - கர்த்தர் நம்மை சந்தித்தார். ஆனால் நான் உங்களை நீண்ட நேரம் பிடித்து வைத்துவிட்டேன். நேரத்தோடு முடிக்க என்னால் எப்படியும் முடியவில்லை . இன்று சிறிது அதிகமாகவே சூரிய வெப்பம் உள்ளது. நான்... என் சிறிய மகன் ஜோசப், நீச்சலுக்கு செல்ல உத்தரவு பெற என் பின்னால் வந்து கொண்டேயிருந்தான். நாங்கள் வசிக்கும் இடத்திற்கு பின் பாகத்தில் ஒரு சிறு குளம் உள்ளது, அது வேலியடைக்கப்பட்டுள்ளது. அவன், ''அப்பா, வந்து பாருங்கள், என்னால் நீச்சலடிக்க முடியும்“ என்று தொந்தரவு செய்து கொண்டிருந்தான். நான், “சரி'' என்றேன். இன்று காலை, சில குறிப்புகள் எழுதுவதற்கென, என் வேதாகமத்துடன் அங்கு சென்றேன். நான் படித்துக் கொண்டிருந்தபோது அவன்... அவன் நீச்சல் கால்சட்டையை அணிந்து அங்கு வந்து, ''அப்பா, என்னைப் பாருங்கள். என்னால் நீரில் குதித்து மூழ்க முடியும் (dive)'' என்றான். ஒரு தவளை தண்ணீரில் குதிப்பதை நான் எப்பொழுதாகிலும் கண்டிருந்தால் அவன் தண்ணீரிலிருந்து வெளியே வந்தபோது, அவனுடைய மூக்கிலிருந்தும், வாயிலிருந்தும் தண்ணீர் வெளியே வந்தது. அவன், “எப்படி என் நீச்சல்?'' என்றான். நான் “மிகவும் நன்றாயிருந்தது'' என்றேன். 4 ஒரு முறை இதே போன்று என் தந்தையிடம் நான் கூறினது என் நினைவுக்கு வந்தது. நாங்கள் ஆற்றில் சென்று குளிக்கும் நாட்களுக்கு முன்பு, சிறுவர்களாகிய நாங்கள் ஒரு குளத்திற்கு செல்வது வழக்கம். அதில் மிதந்து கொண்டிருந்த பச்சை நிற பாசி எங்கள் மேல் படாதவாறு நாங்கள் கவனித்துக் கொள்வோம். நாங்கள்... அந்த குளத்தில் தண்ணீர் ஆறு அங்குலம் ஆழத்துக்கு மேல் கிடையாது, நான் என் தந்தையிடம், ''எனக்கு நீந்தத் தெரியும்'' என்று சொல்லிக் கொண்டேயிருந்தேன். ஒரு ஞாயிறன்று பிற்பகல் அவர் அங்கு வந்தார். அங்கு ஒரு தற்காலிக மேடை கட்டப்பட்டிருந்தது. நான் புதர்களுக்குப் பின்னால் சென்று உடைகளை அவிழ்த்தேன். அங்கு அவிழ்ப்பதற்கு என்ன இருந்தது! உடையிலுள்ள ஆணி போன்ற ஒன்றை இழுத்து விடவேண்டியது தான். எத்தனை பேர் அப்படிபட்ட உடைகளை கண்டிருக்கிறீர்கள்? பரவாயில்லையே. அது ஒரு மேலாடை. அதற்கு எலாஸ்டிக் நாடா (Suspenders) எதுவும் கிடையாது. ஒரு நூலும் ஒரு ஆணியும் மாத்திரமே இருக்கும்! அந்த ஆணியை இழுத்து விட வேண்டியதுதான். அதன் பிறகு அதை மாட்டிக் கொள்ளலாம். எனவே நான் அந்த தற்காலிக மேடையின் மேலேறி, என் மூக்கைப் பிடித்துக்கொண்டு தண்ணீருக்குள் குதித்தேன். குளத்திலிருந்த சேறு இவ்வளவு உயரம் சிதறினது. என் தந்தை அங்கு உட்கார்ந்து கொண்டு என்னைக் கவனித்துக் கொண்டிருந்தார், அவரிடம், “எப்படி என் நீச்சல்?'' என்றேன். அவர், ''இங்கிருந்து ஓடி போய் குளி“ என்று அதட்டினார். அது நடந்து எவ்வளவு காலமாகிவிட்டது என்று நினைத்தேன். 5 காலம் வேகமாக நம்மை விட்டு கடந்து செல்கிறது. இல்லையா? வேலைகளை செய்வதற்கு நமக்கு இனி நேரமில்லை என்பது போல் தோன்றுகிறது. நேரம் யாருக்கும் காத்திருக்காது. எனவே நம்மால் முடியும் போதே நாம் வேலை செய்ய வேண்டும். ஏனெனில் இந்த சந்ததி கடந்து போய், மற்றொரு சந்ததி தோன்றும் நேரம் வரவிருக்கிறது - மற்றொரு சந்ததி இருக்குமானால். உண்மையாகவே என் இருதயப் பூர்வமாக இதை கூறுகிறேன் (அவர் எப்பொழுது வருவாரென்று எனக்குத் தெரியாது; நமக்கு யாருக்குமே அது தெரியாது). ஆனால் மற்றொரு சந்ததி இருக்காது என்று நான் உண்மையாக நம்புகிறேன். கிறிஸ்து இந்த சந்ததியில் வருவாரென்று நம்புகிறேன். எந்த நேரத்தில் என்று எனக்குத் தெரியாது. ஒருக்கால் இன்றிரவு வரலாம், அல்லது பத்து ஆண்டுகள் கழித்து வரலாம், அல்லது இருபது ஆண்டுகள் கழித்து வரலாம். ஆனால் இந்த சந்ததியில் வருவாரென்று நான் நம்புகிறேன். அவ்வாறு நான் விசுவாசிக்கிறேன். அப்படி அவர் வராமற்போனால், அவரை போல நான் வாழ விரும்புகிறேன். ஏனெனில் இதுவே என் கடைசி நாளாக இருக்கக்கூடும், அல்லது உங்கள் கடைசி நாளாக இருக்கக்கூடும். 6 இதை ஞாபகம் கொள்ளுங்கள். அவர் வருவதற்கு முன்பு நாம் மரித்துப் போனால், மற்றவர்கள் மறுரூபப்படுவதற்கு முன்பு நாம் உயிரோடெழுந்து அவருடைய பிரசன்னத்தில் இருப்போம். ''கர்த்தருடைய எக்காளம் தொனிக்கும். அப்பொழுது கிறிஸ்துவுக்குள் மரித்தவர்கள் முதலாவது எழுந்திருப்பார்கள். பின்பு உயிரோடிருக்கும் நாமும் ஒரு இமைப்பொழுதில் மறுரூபமாகி, அவர்களோடு கூட ஆகாயத்தில் எடுக்கப்பட்டு கர்த்தரை சந்திப்போம்''. உயிர்த்தெழுதலின் வரிசைக் கிரமத்தை பாருங்கள். நமக்கு அருமையானவர்களை நாம் காண ஆவல் கொண்டுள்ளோம் என்பதை தேவன் அறிவார். அவரைச் சந்திக்க நாம் முதலில் அங்கு செல்வோமானால், தாய் அல்லது தந்தை அல்லது மற்றவர்கள் அங்குள்ளனரா என்று நாம் சுற்று முற்றும் தேடிப் பார்ப்போம், எனவே பரிசுத்த ஆவியின் ஞானத்தைப் பாருங்கள். நாம் முதலில் ஒருவரையொருவர் சந்திக்கிறோம். அதன் பிறகு நாம் அங்கு சென்று ''ஆச்சரியமான கிருபை'' என்று பாடுகிறோம் - அங்கு ஆராதனைக்கான நேரம் வரும்போது. நான் பைத்தியக்காரத்தனமாக இப்பொழுது நடந்து கொள்கிறேன் என்று நினைக்கிறீர்களா? என்னை அங்கு கவனியுங்கள், நாம் அங்கு அடையும் போது, எனக்கும் நம் அனைவருக்கும் அது மகத்தான தருணமாயிருக்கும். 7 இன்றிரவு ஆசீர்வதிக்கப்பட்ட வேதாகமத்திலிருந்து ஒரு பாகத்தைப் படிப்போம். நாம் ரோமர்: 4-ம் அதிகாரத்துக்கு திருப்பி, அதிலிருந்து ஒரு பாகத்தை வாசிப்போம். இன்றிரவு வேதாகமத்தில் இரண்டு இடங்களிலிருந்தும் - வாசிக்க விரும்புகிறேன். ஆதியாகமத்திலிருந்தும், ரோமர் நிருபத்திலிருந்தும். இப்பொழுது ரோமர் 4-ம் அதிகாரம், 17-ம் வசனம்: அநேக ஜாதிகளுக்கு உன்னைத் தகப்பனாக ஏற்படுத்தினேன் என்று எழுதியிருக்கிறப்படி, அவன் தான் விசுவாசித்தவருமாய், மரித்தோரை உயிர்ப்பித்து, இல்லாதவைகளை இருக்கிறவைகளைப் போல் அழைக்கிறவருமாயிருக்கிற தேவனுக்கு முன்பாக நம்மெல்லாருக்கும் தகப்பனானான். உன் சந்ததி இவ்வளவாயிருக்கும் என்று சொல்லப்பட்டபடியே, தான் அநேக ஜாதிகளுக்குத் தகப்பனாவதை நம்புகிறதற்கு ஏதுவில்லாதிருந்தும், அதை நம்பிக்கையோடே விசுவாசித்தான். அவன் விசுவாசத்திலே பலவீனமாயிருக்கவில்லை; அவன் ஏறக்குறைய நாறு வயதுள்ளவனாயிருக்கும் போது, தன் சரீரம் செத்துப் போனதையும், சாராளுடைய கர்ப்பம் செத்துப் போனதையும் எண்ணாதிருந்தான் தேவனுடைய வாக்குத்தத்தத்தைக் குறித்து அவன் அவிசுவாசமாய் சந்தேகப்படாமல், தேவன் வாக்குத்தத்தம் பண்ணினதை நிறைவேற்ற வல்லவராயிருக்கிறாரென்று முழு நிச்சயமாய் நம்பி, தேவனை மகிமைப் படுத்தி, விசுவாசத்தில் வல்லவனானான். ஆகையால், அது அவனுக்கு நீதியாக எண்ணப்பட்டது. அது அவனுக்கு நீதியாக எண்ணப்பட்டதென்பது, அவனுக்காக மாத்திரமல்ல நமக்காகவும் எழுதப்பட்டிருக்கிறது. நம்முடைய கர்த்தராகிய இயேசுவை மரித்தோரிலிருந்து எழுப்பினவரை விசுவாசிக்கிற நமக்கும் அப்படியே எண்ணமப்படும். அவர் நம்முடைய பாவங்களுக்காக ஒப்புக் கொடுக்கப்பட்டும், நாம் நீதிமான்களாக்கப்படுவதற்காக எழுப்பப்பட்டும் இருக்கிறார். ரோமர் 4: 17-25. 8 ஓ, அது எனக்கு எவ்வளவு பிரியம்! இது வேதாகமத்திலே எனக்கு மிகவும் பிடித்தமான பாகங்களில் ஒன்று. ஏனெனில் தேவன் யாரென்றும், அவர் என்ன செய்வதாக வாக்களித்து ஆணையிட்டுள்ளார் என்பதைக் குறித்தும் இது உறுதியாக உரைக்கிறது. இந்த பொருளை நான் தெரிந்து கொண்ட காரணம் என்னவெனில், நேற்றிரவு ஜனங்கள் விசுவாசம் கொண்டிருந்து, பலவீனமுள்ள ஒருவரும் நமது மத்தியில் இராதபடி சுகமடைந்த கூட்டத்தைப் போல் வேறொரு கூட்டம் இல்லையென்று கருதுகிறேன். தேவனுடைய வல்லமை இறங்கி வந்து அவர் என்ன செய்தார். அப்பொழுது நான், ''நாம் மாத்திரம் உறுதியான ஒன்றை ஆதாரமாகக் கொண்டு கட்டி, ஒரு நோக்கத்தை நாம் சாதிக்க முடியுமானால், அந்த மகத்தான இரவை, அல்லது உச்ச நிலையைடையும் அந்த நேரத்தை நாம் அடையும் போது, அது எவ்வளவு அற்புதமாயிருக்கும்'' என்று எண்ணினேன். 9 விசுவாசமில்லாமல் எதையுமே செய்ய முடியாது என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். முதலாவதாக விசுவாசம் அறிக்கை செய்யப்பட வேண்டும். அவரே விசுவாசத்தை துவக்குபவர், அதை நாம் அறிவோம். விசுவாசமில்லாமல் எதையுமே செய்ய முடியாது. விசுவாசமில்லாமல் தேவனுக்குப் பிரியமாயிருப்பது கூடாத காரியம். (எபி. 11:6). நாம் அறிக்கை பண்ணுகிற பிரதான ஆசாரியராய் அவர் இருக்கிறார். (எபி. 3:10). ஜேம்ஸ் அரசனின் வேதாகமத்தில், எபிரெய புத்தகத்தில், நாம் வெளிப்படையாகக் கூறும் (Profession) பிரதான ஆசாரியர் அவர் என்று எழுதப்பட்டுள்ளது. வெளிப்படையாகக் கூறுதலும் அறிக்கை பண்ணுதலும் ஒன்றே. அறிக்கை பண்ணுதல் என்றால், “அதையே திரும்பக் கூறுதல்” என்று பொருள். ''அவருடைய தழும்புகளால் நான் குணமானேன்“. பாருங்கள், ''அவருடைய ஜீவனால் நான் இரட்சிக்கப்பட்டேன்''. முதலாவதாக, நாம் அறிக்கை பண்ண வேண்டும். அவர் மத்தியஸ்தராய் உட்கார்ந்து கொண்டிருக்கிறார். தேவனுக்கும் மனிதனுக்குமிடையே அவர் ஒருவர் மாத்திரமே மத்தியஸ்தர். அவர் செய்துள்ளதை நாம் அறிக்கை பண்ணும் போது, அதன் பேரில் பரிந்து பேசுவதற்காக அவர் அங்கு உட்கார்ந்து கொண்டிருக்கிறார். அது எவ்வளவு உறுதியான திடமான காரியம்! 10 இப்பொழுது நான் வேறொரு வேதபாகத்தை வாசிக்க விரும்புகிறேன். அது ஆதியாகமம் 22-ம் அதிகாரத்தில் உள்ளது. நாம் 7-ம் வசனத்திலிருந்துபடிப்போம். அப்பொழுது ஈசாக்கு தன் தகப்பனாகிய ஆபிரகாமை நோக்கி: என் தகப்பனே என்றான்; அதற்கு அவன்: என் மகனே, இதோ, இருக்கிறேன் என்றான்; அப்பொழுது அவன்: இதோ, நெருப்பும் கட்டையும் இருக்கிறது, தகனபலிக்கு ஆட்டுக்குட்டி எங்கே என்றான். அதற்கு ஆபிரகாம்: என் மகனே, தேவன் தமக்குத் தகன பலிக்கான ஆட்டுக்குட்டியைப் பார்த்துக் கொள்வார் என்றான்; அப்புறம் இருவரும் கூடிப்போய், தேவன் அவனுக்குச் சொல்லியிருந்த இடத்துக்கு வந்தார்கள்; அங்கே ஆபிரகாம் ஒரு பலிபீடத்தை உண்டாக்கி, கட்டைகளை அடுக்கி, தன் குமாரனாகிய ஈசாக்கைக் கட்டி, அந்தப் பலிபீடத்தில் அடுக்கிய கட்டைகளின் மேல் அவனைக் கிடத்தினான். பின்பு ஆபிரகாம் தன் குமாரனை வெட்டும்படிக்குத் தன் கையை நீட்டிக் கத்தியை எடுத்தான். அப்பொழுது கர்த்தருடைய தூதனானவர் வானத்திலிருந்து ஆபிரகாமே, ஆபிரகாமே என்று கூப்பிட்டார். அவன்: இதோ, அடியேன் என்றான். அப்பொழுது அவர்: பிள்ளையாண்டான் மேல் உன் கையைப் போடாதே, அவனுக்கு ஒன்றும் செய்யாதே; நீ அவனை உன் புத்திரன் என்றும், உன் ஏகசுதன் என்றும் பாராமல் எனக்காக ஒப்புக் கொடுத்தப்படியினால் நீ தேவனுக்குப் பயப்படுகிறவன் என்று இப்பொழுது அறிந்திருக்கிறேன் என்றார். ஆபிரகாம் தன் கண்களை ஏறெடுத்துப் பார்க்கும்போது, இதோ, பின்னாக புதரிலே தன் கொம்புகள் சிக்கிக்கொண்டிருந்த ஒரு ஆட்டுக்கடாவைக் கண்டான்; அப்பொழுது ஆபிரகாம் போய், கடாவைப் பிடித்து, அதைத் தன் குமாரனுக்குப் பதிலாகத் தகனபலியிட்டான். ஆபிரகாம் அந்த இடத்துக்கு யேகோவாயீரே என்று பெயரிட்டான்; அதினாலே கர்த்தருடைய பர்வதத்திலே பார்த்துக் கொள்ளப்படும் என்று இந்நாள் வரைக்கும் சொல்லப்பட்டு வருகிறது. ஆதி: 22: 7-14. 11 இதிலிருந்து நான் தெரிந்துகொள்ள விரும்பும் பொருள் என்னவெனில் - அது பொருள் என்று அழைக்க முடியுமானால் - யேகோவா - யீரே.இந்த சொல்லுக்கு, “கர்த்தர் தமக்கென்று ஒரு பலியைத் தந்தருளுவார்'' என்று அர்த்தம். அவருக்கு பலி செலுத்த ஒன்று இல்லாமல் போனால், அவர் ஒன்றைத் தந்தருளுவார். அதற்காக நான் மிகவும் நன்றியுள்ளவனாயிருக்கிறேன். இந்த மகத்தான பொருள். இங்கு, ”ஆபிரகாம் தேவனுடைய வாக்குத்தத்தத்தைக் குறித்து அவிசுவாசமாய்ச் சந்தேகப்படாமல், தேவனை மகிமைப்படுத்தி, விசுவாசத்தில் வல்லவனானான்'' என்று வாசிக்கிறோம். (ரோமர் 4:20-21). தேவன் ஆபிரகாமிடம் உடன்படிக்கை செய்து கொண்டு, அவனுக்கு வாக்குத்தத்தத்தைக் கொடுத்தார். அது ஆபிரகாமுக்கு மாத்திரமல்ல, அவனுக்குப் பின் வருகிற சந்ததிக்கும். ''ஆபிரகாமுக்கும் அவனுடைய சந்ததிக்கும்'' இதை இப்பொழுது நினைவில் கொள்ளுங்கள். நாம் கிறிஸ்துவுக்குள் மரித்தால், நாம் மறுபடியும் பிறந்தால், நாம் ஆபிரகாமின் சந்ததியாராகின்றோம். இந்த பாடத்தை நாம் படிக்கும் போது, இதை அறிந்து கொள்ள நாம் கவனமாயிருப்போம். நீங்கள் கூர்ந்து கவனித்தால், பரிசுத்த ஆவியானவர் உங்களுக்கு வெளிப்படுத்துவார். அந்த நம்பிக்கையை நீங்கள் பற்றிக் கொள்வீர்கள். அப்பொழுது அது இந்த நகரத்தையும், உங்களைச் சுற்றிலுமுள்ள எல்லாவற்றையும் பிரகாசிக்கச் செய்யும் - பரிசுத்த ஆவியானவர் நம்மிடம் என்ன கூற முயல்கிறார் என்பதைக் குறித்த கருத்தை நாம் மாத்திரம் நமது நேரத்தை எடுத்துக் கொண்டு கிரகித்துக் கொள்வோமானால் ஆபிரகாம் அழைக்கப்பட்டு, அவனுக்கு வாக்குத்தத்தம் கொடுக்கப்பட்டது - அவனுக்கும் அவனுடைய சந்ததிக்கும். 12 நண்பர்களே, கிறிஸ்தவ மார்க்கம் அல்லாத எத்தனையோ இன்று கிறிஸ்தவ மார்க்கம் என்று அழைக்கப்படுகின்றது. இதைக் கூற எனக்கு விருப்பமில்லை. வேண்டுமானால் நான் ஜனங்களிடையே கீர்த்தி வாய்ந்தவனாக இருந்து, எல்லோரும் என் முதுகில் தட்டிக் கொடுத்து என்னை பாராட்டும் நிலையில் இருக்கக் கூடும். ஆனால் அந்த குழுவை நான் நியாயத்தீர்ப்பின் போது சந்தித்து, அதற்கு கணக்கொப்புவிக்க வேண்டும். எனவே நான் உத்தமமாக இருக்க வேண்டியது அவசியம். இன்று கிறிஸ்தவர்கள் என்று தங்களை அழைத்துக் கொள்ளும் உலகம் முழுவதிலுமுள்ள சபைகளை நாம் பார்ப்போமானால், அவை கிறிஸ்தவ மார்க்கத்திலிருந்து லட்சக்கணக்கான மைல்கள் விலகியுள்ளதை நாம் காணலாம். அது அவ்விதமாக இருக்குமென்று வேதாகமத்தில் முன்னுரைக்கப்பட்டுள்ளது. அநேகர், ''நான் அவரை விசுவாசிக்கிறேன்'' என்று கூறி கிறிஸ்துவை ஏற்றுக் கொள்கின்றனர். ஏன், பிசாசும் கூட அப்படித்தான் விசுவாசிக்கின்றான். பாருங்கள்? அநேகர் உணர்ச்சி வசத்தினால் அவரை ஏற்றுக்கொள்ள முனைந்து, ''நான் அந்நிய பாஷைகள் பேசினேன், நான் ஆவியில் நடனமாடினேன்'' என்கின்றனர். ஆப்பிரிக்காவிலுள்ள மந்திரவாதிகளும், பிசாசு முன்னிலையில் நடனமாடுகிறவர்களும் அதையே செய்வதை நான் கண்டிருக்கிறேன். நிச்சயமாக அவர்கள் மண்டை ஓட்டிலுள்ள இரத்தத்தை குடித்து, அந்நிய பாஷைகள் பேசி, பிசாசைக் கூப்பிடுகின்றனர். என் தாயார் பாதி இந்தியர் (சிகப்பு இந்தியர் - தமிழாக்கியோன்) - அவளுடைய ஜனங்கள் அவர்கள் ஒரு பென்சிலை எடுத்து, அதை இப்படி கீழே வைத்து, அது தானாகவே அந்நியபாஷைகளில் எழுதி, அவர்கள் அங்கு நின்று கொண்டு அதற்கு அர்த்தம் உரைத்து, பிசாசைக் கூப்பிடுவதை நான் கண்டிருக்கிறேன். நிச்சயமாக. 13 பாருங்கள், நீங்கள் உணர்ச்சியை ஆதாரமாகக் கொண்டு செல்ல முடியாது. பாருங்கள், நீங்கள் வாழும் வாழ்க்கையே நீங்கள் யாரென்று சாட்சி பகருகின்றது. பாருங்கள்? அது எத்தகைய உணர்ச்சியாயிருந்தாலும் கவலையில்லை. நீங்கள் கிறிஸ்தவ மார்க்கத்தை உணர்ச்சியின் மேல் ஆதாரப்படுத்த முடியாது. அது ஜீவன் இயேசு, ''அவர்களுடைய கனிகளினாலே அவர்களை அறிவீர்கள்'' என்று கூறியுள்ளார். (மத் 7:16, 20) அவர்கள் எதை வெளிப்படையாக அறிக்கை செய்கிறார்கள் என்பதன் மூலமாய் அல்ல. இயேசு மேலும், ''நீங்கள் என்னிடத்தில் சேர்ந்து உங்கள் உதடுகளினால் என்னைக் கனம்பண்ணுகிறீர்கள்; உங்கள் இருதயமோ எனக்குத் தூரமாய் விலகியிருக்கிறது'' என்றார். (மத் 15:8) அதுதான் அவர்கள் வாயினால் செய்யும் அறிக்கை. பாருங்கள், உங்கள் வாழ்க்கை நீங்கள் யாரென்பதை எடுத்துக் காட்டுகின்றது. ஒருவன், ''நான் தேவனை விசுவாசிக்கிறேன்'' என்று சொல்லி, இந்த வேதாகமத்திலுள்ள ஒரு வார்த்தையை மறுதலித்தால், அல்லது அதை வேறெந்த வழியிலாவது மாற்றினால், அது தவறாக இருக்க வேண்டும். 14 நீங்கள், ''இந்த சிறு காரியங்களினால் ஒரு பாதகமுமில்லை'' எனலாம். ஆனால் நிச்சயமாக பாதகமுண்டு. ஒரு சிறு வார்த்தை தான் நம்மை இத்தனை தொல்லைக்குள் ஆழ்த்தியது; அதை அவிசுவாசிக்க வேண்டும் என்பதல்ல, அதை தவறான இடத்தில் பொருத்தினால் போதும். ஏவாள் அதை இழக்கும்படி சாத்தான் செய்து, அவளுக்கு யோசனையை அருளினான். சாண்டா மரியாவிலுள்ள சகோ. வில்லியம்ஸின் இடத்தில், இதைக் குறித்து நான் பேசினேன். இதுதான் ஏதேன் தோட்டத்திலிருந்து நமக்கு கொண்டு வரப்பட்டு, ஒவ்வொரு குழந்தையும் வியாதிப்படும்படி செய்தது. அங்கு கிடந்திருந்த மூளை பாதிக்கப்பட்ட குழந்தைக்கு நான் சற்று முன்பு உள்ளே வந்தபோது ஜெபித்தேன். அதன் காரணம் என்ன? ஏவாள் அதை அவிசுவாசிக்கவில்லை, ஆனால் அவள் யோசிக்கத் தொடங்கி, இது தான் நியாயமானது என்று அதை ஏற்றுக் கொண்டாள். அதன் காரணமாக ஒவ்வொரு மரணமும், ஒவ்வொரு வியாதியும், ஒவ்வொரு துன்பமும், ஒவ்வொரு மன வேதனையும் உண்டாயின. ஆறாயிரம் ஆண்டு காலமாக அதன் காரணமாக இவைகளை நாம் பெற்றிருப்போமானால், ஒவ்வொரு வார்த்தையையும் அது எழுதப்பட்டுள்ள விதமாக நாம் பரிபூரணமாக விசுவாசிக்காமல், நாம் எப்படி பழைய நிலைக்குள் செல்லமுடியும்? 15 மானிடவர்க்கத்துக்கு யோசிக்கும் தன்மையை (reasoning) அளித்து, பிசாசு மானிட வர்க்கத்தின் மேல் வெற்றி சிறந்தான். “ஏன், இதுதான் நியாயமானது”. நீங்கள் நியாயமானதென்று யோசிப்பது தேவனுடைய வார்த்தைக்கு முரணாயிருக்குமானால், உங்கள் யோசனை தவறு. வார்த்தை மாத்திரமே அது எழுதப்பட்ட விதமாக சரியாயுள்ளது. உங்கள் சொந்த வியாக்கியானத்தை அதற்கு அளிக்காதீர்கள். அது எழுதப்பட்டுள்ள விதமாக அதைக் கூறி, அதே விதமாக அதை விசுவாசியுங்கள். பாருங்கள்? தேவன் அதை கவனித்துக்கொள்ள வேண்டும். அது எவ்வாறு இருக்க வேண்டுமோ, அவ்வாறே அது எழுதப்பட்டுள்ளது. எனவே அதை அதே விதமாக நாம் விசுவாசிப்போம். இப்பொழுது, அது வார்த்தை, ஒவ்வொரு வார்த்தை! ஒவ்வொரு... பரிசுத்த ஆவி ஒரு மனிதனுக்குள் இருக்குமானால், உங்களுக்குள் இருக்கும் பரிசுத்த ஆவி வேதாகமத்திலுள்ள ஒவ்வொரு வாக்கியத்தையும் ''ஆமென்“ என்று கூறி உறுதிப்படுத்தும்; ஏனெனில் பரிசுத்த ஆவிதான் வேதாகமத்தை எழுதினது. அவர் உங்களுக்குள் இருப்பாரானால், அவர் எப்படி, ''நல்லது, அது வேறொரு காலத்துக்கு, அது இந்த காலத்துக்கு, இது அந்த காலத்துக்கு'' என்று சொல்ல முடியும்? அவர் அவ்விதம் கூறி உங்களுக்குள் பரிசுத்த ஆவியாய் எப்படி இருக்கமுடியும்? அவர் அவ்வாறு செய்ய முடியாது. அவர் அதற்கு ஆமென் என்றுரைக்க வேண்டும். 16 நான் அன்றொரு நாள் கூறினது போன்று, முதலாவதாக, தேவன் தமது ஜனங்களுக்கு அரணாக அளித்தது வார்த்தையே. அவர் மாறவேயில்லை. அவர் மாற முடியாது. கோட்பாடுகள் ஒன்றும் கிரியை செய்யாது, ஸ்தாபனங்கள் ஒன்றும் கிரியை செய்யாது, கல்வி ஒன்றும் கிரியை செய்யாது, இவையனைத்தும் கிரியை செய்யவே செய்யாது. இவை ஒவ்வொன்றும் முழுவதுமாக தோல்வியடைந்துவிட்டன, இனிமேலும் தோல்வியடையும். ஒன்று மாத்திரமே கிரியை செய்யும், அது தான் வார்த்தை. நாம் வார்த்தைக்கு வரக் கூடிய ஒரே வழி இரத்தத்தின் மூலம் மாத்திரமே. தேவனை ஆராதித்த ஒரே ஸ்தலத்திற்கு எவரும் அந்த இரத்தத்தின் கீழ் வர வேண்டியவராயிருந்தனர். வேறு எந்த ஆயத்தமும் கிடையாது. நீங்கள் மெதோடிஸ்டு நாமத்திலோ, அல்லது பெந்தெகொஸ்தே நாமத்திலோ, அல்லது கத்தோலிக்க நாமத்திலோ வரமுடியாது. கத்தோலிக்க சபைகள் டஜன் கணக்கில் உள்ளன. ஒன்று மற்றொன்றிலிருந்து வேறுபட்டது - வைதீக சபை. கிரேக்க சபை, ரோம சபை போன்றவை. அவை பிராடெஸ்டெண்டுகள் போல் பிளவுபட்டுள்ளன. பிராடெஸ்டெண்டுகள், மெதோடிஸ்டுகள், பாப்டிஸ்டுகள், பிரஸ்பிடேரியன்கள், கத்தோலிக்கர்கள், ஓ, அவை வெவ்வேறு விதமானவை. அதோ அவை, பார்த்தீர்களா? ஆனால் ஐக்கியப்படுவதற்கு ஒரு ஆதாரம் மாத்திரமேயுள்ளது, அது தான் இரத்தத்தின் கீழ் இரத்தம் என்பது ஜீவன். அது எப்பொழுதும் வார்த்தையுடன் இணங்கும், எப்பொழுதுமே வார்த்தையுடன். 17 ஜீவன் ஆண் இனத்தில் உள்ளது என்று நாமறிவோம். அது இரத்தத்தில் உள்ளது - ஹிமோக்ளோபின். பெட்டை கோழி முட்டையிடக் கூடும். ஆனால் அது சேவலுடன் சேராமல் இருந்தால், அந்த முட்டை பொறிக்காது. நிச்சயமாக. அதில் கரு கிடையாது. இப்படித் தான் நான் அநேக வெறுப்பூட்டும் சொற்களை கூறியிருக்கிறேன் - அதாவது ஒரு பெட்டைக் கோழி கூடு நிறைய முட்டைகள் இடக்கூடுமென்றும், அதனால் முட்டைகளிடம் எவ்வளவு உத்தமமாக இருக்கக் கூடுமோ, அவ்வளவு உத்தமமாக அது இருக்கலாமென்றும், அது தன் செட்டைகளின் கீழ் முட்டைகளை அடைகாத்து, அவை பொறிக்க வேண்டும் என்பதற்காக சில நிமிடங்களுக்கு ஒரு முறை அவைகளை திருப்பலாமென்றும், அந்த முட்டைகளிடம் உத்தமமாயிருக்க வேண்டும் என்பதற்காக அது கூட்டில் இருக்கும்போது உபவாசித்து, அதற்கு பசியெடுத்து, அதனால் கூட்டிலிருந்து பறக்க முடியாத அளவுக்கு பலவீனமடையலாம். ஆனால் அது ஆண் பறவையுடன் சேராத வரைக்கும், அந்த முட்டைகளில் கரு இல்லாதவரைக்கும், அவை கூடுகளில் கிடந்து அழுகிப் போகும். அது முற்றிலும் உண்மை . நமது சபைகளும் அந்நிலையையடைந்துள்ளன. அவை குளிர்ந்து போன சடங்காச்சாரங்களை ஏற்றுக்கொண்டு, ஏதோ ஒரு விதமான நடனத்தை அல்லது உணர்ச்சியை கொண்டுள்ளன. அவை என்ன செய்கின்றன? வார்த்தையை அவிசுவாசிக்கின்றன. அதன் விளைவாக நாம் ஒரு கூடு நிறைய அழுகின முட்டைகளைப் பெற்றுள்ளோம். கூட்டை சுத்தம் செய்து மறுபடியும் துவங்குவதற்கு நேரம் வந்துவிட்டது. அவர்கள் ஆணாகிய கிறிஸ்து இயேசுவுடன் தொடர்புகொண்டு, வார்த்தையினால் மறுபடியும் பிறந்தாலொழிய அவர்களால் ஒன்றும் செய்யமுடியாது. அப்படி செய்தால் அவர்கள் பொறிக்க வேண்டும், ஏனெனில் அது ஜீவன். 18 சில நாட்களுக்கு முன்பு நான் ஒரு வயோதிப மெதோடிஸ்டு போதகருடன் பகல் உணவு அருந்திக் கொண்டிருந்தேன். அப்பொழுது லூயிவில்லிலிருந்து ஒலிபரப்பான “விவசாய நேரம்” வானொலி ஒலிபரப்பை கேட்டேன். 4- H சங்கம் அப்பொழுது பேசிக் கொண்டிருந்தது. வயலில் விளைவது போன்ற தானியத்தை உற்பத்தி செய்ய அவர்களிடம் ஒரு இயந்திரம் உள்ளதாகவும், இந்த தானியத்திலிருந்து அதே விதமான தானியச் சீவல் (Corn flakes), ரொட்டி போன்றவைகளைச் செய்யலாமென்று அது கூறினது - அதே தானியம். அதை இவ்விதமாக வெட்டி, வெளிச்சத்தின் கீழ் வைத்து, ஆய்வுக் கூடத்துக்கு எடுத்துச் சென்று அதை ஆராய்து பார்த்தால், அதன் மையம் சரியான இடத்தில் அமைந்துள்ளது, அது இயற்கை தானியத்தில் உள்ளது போல் அதே அளவு ஈரப்பசை, சுண்ணாம்புச்சத்து, பொட்டாஷ் ஆகியவைகளைக் கொண்டுள்ளது, இயற்கை தானியத்தில் என்னென்ன உள்ளதோ, அது அனைத்தும் இதில் உள்ளது. அது தொடர்ந்து, ''நீங்கள் வயலில் விளைந்த தானியத்தை சாக்கிலிருந்து ஒரு கைப்பிடி எடுத்து, இயந்திரத்தினால் உற்பத்தி செய்யப்பட்ட தானியத்தையும் சாக்கிலிருந்து ஒரு கைப்பிடி எடுத்து, இவ்விரண்டையும் கலந்துவிட்டால், உங்கள் இயற்கை கண்களினால் ஒரு வித்தியாசத்தையும் கண்டு பிடிக்க முடியாது. அதை நீங்கள் வெட்டிப் பார்த்தாலும் ஒரு வித்தியாசமும் தெரியாது. விஞ்ஞானமும் ஒரு வித்தியாசத்தையும் கண்டுபிடிக்க இயலாது. ஆனால் உங்களால் வித்தியாசத்தைக் கண்டு கொள்ள ஒரே வழி, அதை நிலத்தில் புதைப்பதன் மூலமே'' என்றது. அது வித்தியாசம் என்னவென்று புலப்படுத்திவிடுகிறது. 19 அது போன்று, ஒரு மனிதன் காண்பதற்கு கிறிஸ்தவனைப் போல் இருக்கலாம். அவன் கிறிஸ்தவனைப் போல் நடிக்கலாம், அவன் கிறிஸ்தவனைப் போல் பாவனை செய்யலாம். ஆனால் அவன் ஜீவ அணுவைப் பெற்றிராமல் போனால், அவனால் உயிரோடெழ முடியாது. அவன் ஜீவ அணுவைப் பெற்றிருக்க வேண்டும். நித்திய ஜீவனை பெற்றிருக்க வேண்டும். கிரேக்கமொழி படித்துள்ள எவரும், “நித்தியம்” என்னும் சொல் “சோ” (Zoe) என்னும் சொல்லிலிருந்து வந்தது என்பதை அறிவர். அதன் அர்த்தம் “தேவனுடைய சொந்த ஜீவன்”. அது அவருடைய ஒரு பாகம். அதை நீங்கள் பெறும் போது, நீங்கள் உங்கள் தகப்பனின் ஒரு பாகமாக இருப்பது போல், தேவனுடைய ஒரு பாகமாகிவிடுகின்றீர்கள். தேவனுடைய சொந்த ஜீவன் பகிர்ந்தளிக்கப்பட்டு உங்களுக்குள் வைக்கப்படுகின்றது. அது மரிக்க முடியாது, ஏனெனில் அது நித்தியமானது. துவக்கமுள்ள எதற்கும் முடிவுண்டு. ஆனால் அவரோ துவங்கவில்லை, எனவே அவருக்கு முடிவு இருக்கமுடியாது. அவர் நித்தியமானவர், நீங்கள் அவருடன் நித்தியமாயிருக்கிறீர்கள். அவர் எப்படி மரிக்க முடியாதோ, அப்படியே நீங்களும் மரிக்க முடியாது. ஏனெனில் நீங்கள் அவருடைய ஒரு பாகமாகிவிடுகின்றீர்கள். நீங்கள் அவரால் பிறக்கின்றீர்கள். ஆமென். இதைக் குறித்து நான் பேசிக் கொண்டேயிருந்தால், நான் இந்த பாடத்துக்கு செல்லவே முடியாது. ஓ, நான் கிறிஸ்தவனாயிருப்பதற்காக மிகுந்த மகிழ்ச்சி கொள்கிறேன். நான் உலகத்தில் யாரோடும் என் இடத்தை மாற்றிக் கொள்ளவே மாட்டேன் - அது ஜனாதிபதிகளாயிருந்தாலும் சரி, ராஜாக்களாயிருந்தாலும் சரி; அவர்கள் எனக்கு உலகம் முழுவதையும் அளித்தாலும் சரி, நான் பத்து லட்சம் ஆண்டுகள் வாழ்ந்து பின்பு மரிப்பேன் என்று கூறினாலும் சரி, இப்பொழுது பத்து லட்சம் ஆண்டுகள் ஒன்றுமேயில்லை, நாம் வாழ்ந்து கொண்டேயிருக்கிறோம், மரணம் கிடையாது. எனவே கிறிஸ்தவனாயிருப்பதென்பது மிகப் பெரிய சிலாக்கியம்! 20 நாம் ஆபிரகாமைக் குறித்து பேசிக் கொண்டிருந்தோம். அதற்கு மீண்டும் செல்வோம். நாம் கிறிஸ்துவுக்குள் இருந்தால், ஆபிரகாமின் சந்ததியாகிவிடுகிறோம். நீங்கள் ஆபிரகாமின் சந்ததியாக இருந்தால் ஆபிரகாமுக்கு இருந்த அதே விசுவாசம் உங்களுக்கும் இருக்கும். அவனுடைய விசுவாசத்தைக் குறித்து தான் நாம் பேசிக் கொண்டிருக்கிறோம். முக்கியமாக இப்பொழுது உண்மையான சபையில் உள்ளது ஆபிரகாமின் ராஜரீக சந்ததி, ஆபிரகாமுக்கு இரண்டு சந்ததிகள் உள்ளன. ஒன்று மாம்ச சந்ததி. ஈசாக்கு; மற்றது கிறிஸ்து, வாக்குத்தத்தம். ஈசாக்கின் மூலம் இஸ்ரவேலர் ஆசீர்வதிக்கப்பட்டனர். கிறிஸ்துவின் மூலம் ஆபிரகாம் அநேக ஜாதிகளுக்கு தகப்பனானான். பாருங்கள்? எனவே ஆபிரகாமின் ராஜரீக சந்ததி, அவனுடைய மாம்ச சந்ததியைக் காட்டிலும் எவ்வளவு மேன்மையானது? நீங்கள் கிறிஸ்துவுக்குள் இருந்தால், ஆபிரகாம் இருந்ததைக் காட்டிலும் உன்னத சந்ததியாயிருக்கிறீர்கள். ஏனெனில் நீங்கள் ராஜரீக சந்ததியாகிய கிறிஸ்துவின் மூலம் வருகிறீர்கள். நீங்கள் கிறிஸ்துவுக்குள் மரித்திருந்தால், நீங்கள் ஆபிரகாமின் புத்திரர். நீங்கள் ஆபிரகாமின் சந்ததியாய் ஆபிரகாமின் விசுவாசத்தைப் பெற்றிருக்கிறீர்கள். ஆபிரகாமின் விசுவாசம், என்ன நடந்த போதிலும், தேவனுடைய வார்த்தையின் மேலிருந்தது. அவன் இல்லாதவைகளை இருக்கிறவைகள் போல் அழைத்தான். ஏனெனில் தேவன் அவ்வாறு கூறினார். என்ன ஒரு வாக்குத்தத்தம்! 21 நாம் சிறிது பின் சென்று, நமது கருத்துக்களை அதன் மேல் ஆதாரமாகக் கொள்வோம். நாம் யேகோவா - யீரே என்னும் பொருளை அணுகும் முன்பு, சற்று பின் சென்று ஆபிரகாமை நோக்குவோம். வேத பாகத்தில் நாம் சிறிது பின் செல்வோம். நாம் இப்பொழுது 12-ம் அதிகாரத்துக்கு செல்வோம். நாம் இங்கு 22-ம் அதிகாரத்தை படித்தோம். இப்பொழுது 12-ம்அதிகாரத்துக்கு சென்று, ஆபிரகாமுடன் செய்யப்பட்ட உடன்படிக்கையை காண்போம். மூன்று... இரண்டு உடன்படிக்கைகள் உண்டாயிருந்தன. தேவன் மூன்று என்னும் எண்ணிக்கையில் பரிபூரணப்படுகிறார். தேவனுடைய இலக்கங்களை நாமறிவோம். மூன்று, பரிபூரணம்; ஏழு, பன்னிரண்டு, ஆராதனை; நாற்பது, சோதனை; ஐம்பது, யூபிலி; இப்படியாக தேவனுடைய இலக்கங்கள் உள்ளன. தேவன் மூன்றில் பரிபூரணப்படுகிறார் - பிதா, குமாரன், பரிசுத்தஆவி; நீதிமானாக்கப்படுதல், பரிசுத்தமாக்கப்படுதல், பரிசுத்த ஆவியின் அபிஷேகம் போன்று. 22 இரண்டு உடன்படிக்கைகள் உண்டாயிருந்தன. ஒன்று ஆதாமுடன் செய்து கொண்ட உடன்படிக்கை. தேவன் மனிதனுடன், ''நீ செய்தால், நான் செய்வேன்'' என்னும் உடன்படிக்கை செய்து கொண்டார். அவனோ அதை முறித்து போட்டான். பின்பு தேவன் நோவாவுடன் ஒரு உடன்படிக்கை செய்து கொண்டார். அது நோவாவின் உடன்படிக்கை. அதுவும் முறித்து போடப்பட்டது. இப்பொழுது அவர் ஆபிரகாமுடன் ஒரு உடன்படிக்கை செய்து கொள்கிறார். ஆபிரகாமின் உடன்படிக்கை, ஆதியாகமம் 12-ம் அதிகாரத்தின்படி, எவ்வித நிபந்தனையுமின்றி அளிக்கப்பட்டது. அது நிபந்தனையின்றி அளிக்கப்பட்ட காரணத்தால் நித்தியமாயுள்ளது. அது, ''நீ செய்தால், நான் செய்வேன்'' என்றல்ல. அவர், ''நான் ஏற்கனவே அதை செய்துவிட்டேன்'' என்றார். “நான் செய்வேன்” என்றல்ல, “நான் செய்து விட்டேன்''. ஓ, அதுதான் விசுவாசத்தை ஆதாரப்படுத்துகிறது. பாருங்கள்... தேவன் மனிதனை இரட்சிக்க தீர்மானம் கொள்கிறார். அவர், ''நீ செய்தால், நான் செய்வேன்” என்னும் உடன்படிக்கை செய்தார், அவன் அதை முறித்துப் போட்டான். மற்றொன்றும், “நீ செய்தால், நான் செய்வேன்'' என்றிருந்தது. அதையும் அவன் முறித்துப் போட்டான். மனிதனால் அவன் செய்த உடன்படிக்கையை கைக்கொள்ள முடியாது. எனவே தேவன் மனிதனை அவருடைய கிருபையினால், நிபந்தனையற்ற ஒரு உடன்படிக்கையின் கீழ் இரட்சிக்கிறார். ஓ, என்னே! அதற்கு முடிவில்லை, அவ்வளவுதான். மூன்று, பரிபூரணம். நோவா, ஆபிரகாம்... அதாவது ஆதாம், நோவா, ஆபிரகாம் ஆகியோரின் உடன்படிக்கை. அதன் காரணமாகத்தான் நாம் ஆபிரகாமின் பிள்ளைகளாயிருக்கிறோம். அந்த உடன்படிக்கைக்கு முடிவேயில்லை, ஏனெனில் அது நிபந்தனையற்றது. அது... அது நீங்கள் ஒன்றைச் செய்ததனால் அல்ல; அது தேவன் ஒன்றைச் செய்ததனால்! நீங்கள் தேவனைத் தெரிந்து கொண்டதனால் அல்ல; தேவன் உங்களைத் தெரிந்து கொண்டார் நீங்கள் அதை விசுவாசிக்கிறீர்களா?(சபையோர் ”ஆமென்'' என்கின்றனர்- ஆசி). 23 ஜனங்கள், “ஓ, சகோ. பிரன்ஹாமே, நான் தேவனைத் தேடினேன், தேவனைத் தேடினேன்'' என்கின்றனர். நீங்கள் அவரைத் தேடவில்லை. அதை உங்களிடம் கூற எனக்கு விருப்பமில்லை. நீங்கள் தேடவில்லை, தேவன் உங்களைத் தேடினார். அது தேவன் உங்களைத் தேடுவதாகும். இயேசு, ''நீங்கள் என்னைத் தெரிந்து கொள்ளவில்லை, நான் உங்களைத் தெரிந்து கொண்டேன். என் பிதா ஒருவனை இழுத்துக் கொள்ளாவிட்டால் அவன் என்னிடத்தில் வரமாட்டான். பிதாவானவர் எனக்குக் கொடுக்கிற யாவும் என்னிடத்தில் வரும்'' என்றார். இப்பொழுது பாருங்கள், அது நீங்கள் அல்ல. எந்த ஒரு மனிதனும் எதிலும் மேன்மை பாராட்ட முடியாது. அது தேவன்! ஓ, தேவனுடைய உண்மையான கிருபையைக் காண்பதென்பது எவ்வளவு அற்புதமாயுள்ளது! ஜனங்கள் கிருபையின் (grace) செய்தியை எடுத்து அதை அவமதித்து (disgrace) விட்டார்கள். விலையேறப்பெற்ற என் சபைக்கும், விலையேறப்பெற்ற பாப்டிஸ்டு மக்களாகிய உங்களுக்கும் இதை கூறுகிறேன். நீங்கள் கிருபையை அவ்வாறு குழப்பும் போது, நீங்கள் உண்மையில் குழப்பத்தில் ஆழ்ந்துவிடுகின்றீர்கள். 24 அண்மையில் ஒருவர், “சகோ. பிரன்ஹாமே, நீங்கள் ஒரு நல்ல பாப்டிஸ்டாக இருந்தீர்கள் என்று இப்பொழுது அறிந்து கொண்டீர்கள்” என்றார். நான், “இப்பொழுது நான் அவ்விதம் உணருகிறேன். ஆனால் அதைக் காட்டிலும் சற்று உயர்த்தப்பட்டிருக்கிறேன்'' என்றேன். அவர், ''நல்லது, கவனியுங்கள். ஆபிரகாம் தேவனை விசுவாசித்தான். அது அவனுக்கு நீதியாக எண்ணப்பட்டது. விசுவாசிப்பதைக் காட்டிலும் ஆபிரகாம் வேறென்ன அதிகம் செய்ய முடியும்?'' என்று சொல்லிவிட்டு, “நாம் தேவனை விசுவாசிக்கும் போது, பரிசுத்த ஆவியைப் பெற்றுக் கொள்கிறோம்'' என்றார். நான், “அது பரி. பவுல் கூறினதைக் காட்டிலும் எவ்வளவு வித்தியாசமாயுள்ளது!அப்போஸ்தலர் 19-ம் அதிகாரத்தில் பரி. பவுல், ''நீங்கள் விசுவாசிகளான பிறகு பரிசுத்த ஆவியைப் பெற்றீர்களா?'' என்று கேட்டான். ''விசுவாசிகளான போது” அல்ல, ''விசுவாசிகளான பிறகு'' என்றேன் (ஆங்கில வேதாகமத்தில் since ye believed என்பதை “விசுவாசிகளான போது'' என்று தமிழ் வேதாகமத்தில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. சரியான மொழி பெயர்ப்பு விசுவாசிகளான பிறகு” என்பதே - தமிழாக்கியோன்). அவர், ''நல்லது, ஆபிரகாம் தேவனை விசுவாசித்தான், அவ்வளவுதான் அவனால் செய்ய முடிந்தது'' என்றார். நான், ''உண்மைதான். ஆனால் அவனுடைய விசுவாசத்தை தேவன் ஏற்றுக் கொண்டார் என்பதை உறுதிபடுத்த, தேவன் விருத்தசேதனம் என்னும் ஒழுங்கை அவனுக்குக் கொடுத்தாரே'' என்றேன். 25 அவர் உங்களை இதுவரைக்கும் பரிசுத்த ஆவியினால் விருத்தசேதனம் செய்யாமலிருந்தால், அவர் உங்கள் விசுவாசத்தை இன்னும் ஏற்றுக் கொள்ளவில்லை என்று அர்த்தமாகிறது. அது உண்மை. அது தான் இருதயம், ஆவி என்பவைகளின் விருத்தசேதனம். தேவன் உங்கள் விசுவாசத்தை ஏற்றுக் கொண்டார் என்பதை உறுதிப்படுத்த பரிசுத்த ஆவியை அருளுகிறார். நீங்கள் விசுவாசிப்பதை நிறுத்திவிட்டு குழம்பிக் கொண்டிருந்தால்; தேவனை விசுவாசியுங்கள். அப்பொழுது தேவன் அந்த இருதயத்தை விருத்தசேதனம் செய்வார். அது எல்லா அவிசுவாசத்தையும் போக்கிவிடும். அது உலகத்தையும், அவிசுவாசத்தையும் விருத்தசேதனம் செய்து உங்களிலிருந்து அகற்றிவிடும், அப்பொழுது நீங்கள் வார்த்தையில் தனிமையில் நிற்கிறீர்கள். இயேசு, ''நீங்கள் என்னிலும் என் வார்த்தைகள் உங்களிலும் நிலைத்திருந்தால், நீங்கள் கேட்டுக் கொள்வதெதுவோ அது உங்களுக்குச் செய்யப்படும்'' என்றார். (யோவான். 15:7). 26 இன்றைய சபையிலுள்ள தொல்லை அதுவே. அது உணர்ச்சியின் கீழும், கல்வியின் கீழும், கோட்பாட்டின் கீழும் உள்ளது. அது மூச்சுத் திணறிக் கொண்டிருப்பதில் வியப்பொன்றுமில்லை. பாருங்கள்? எனவே எல்லாவற்றையும் வெட்டி புறம்பாக்க நமக்கு விருத்தசேதனம் அவசியமாயுள்ளது. தேவனிடத்திலும் அவருடைய வார்த்தையிடத்திலும் திரும்புங்கள். இங்கு எழுதப்பட்டுள்ள விதமாகவே வார்த்தையை விசுவாசியுங்கள். அதனுடன் விவாதம் செய்ய வேண்டாம். அதில் நிலைத்து நில்லுங்கள். தேவன் வாக்குத்தத்தம் ஒன்றை செய்தால், அதை நிறைவேற்றுவார். அவருடைய வாக்குத்தத்தத்தை நிறைவேற்றுவதைத் தவிர வேறொன்றைச் செய்து, அவர் தேவனாக இருக்க முடியாது. 27 இப்பொழுது, இந்த நிபந்தனையற்ற உடன்படிக்கை. ''நீ செய்தால், நான் செய்வேன். ஆனால் பின்னால் செய்வேன்“ என்பது போன்ற ஒன்றல்ல. ''நான் உனக்கும், உனக்குப் பின் வரும் சந்ததிக்கும் இந்த தேசத்தை ஏற்கனவே கொடுத்துவிட்டேன்”. பாருங்கள், ஏற்கனவே அதை செய்துவிட்டார். அது முடிவு பெற்ற ஒரு கிரியை. நீங்கள், “ஆபிரகாமுக்கு அவர் அவ்வாறு செய்தார்” எனலாம். ஆம், ஆபிரகாமுக்கு மாத்திரமல்ல, அவனுக்குப் பின்வரும் சந்ததிக்கும். நாம் ஆபிரகாமின் சந்ததியாயிருந்தால், அது முடிவு பெற்ற ஒன்று. “தேவன் எவர்களை முன் குறித்தாரோ அவர்களை அழைத்துமிருக்கிறார்; எவர்களை அழைத்தாரோ அவர்களை நீதிமான்களாக்கியுமிருக்கிறார்; எவர்களை நீதிமான்களாக்கினாரோ அவர்களை மகிமைப்படுத்தியுமிருக்கிறார்''. (ரோமர் 8:30) அப்படியானால் நீங்கள் எதைக் குறித்து பயப்படுகிறீர்கள்? வெளிப்படுத்தின விசேஷம் புத்தகத்தின்படி, ''உலகத்தோற்ற முதல்... (கடைசி எழுப்புதல் நடந்த முதற்கா? இல்லை)... உலகத்தோற்ற முதல் ஆட்டுக்குட்டியானவரின் ஜீவ புஸ்தகத்தில் பேரெழுதப்பட்டிராத பூமியின் குடிகள் அனைவரையும் அந்திக் கிறிஸ்து மோசம் போக்கினான். அப்பொழுதுதான் உங்கள் பெயர் ஆட்டுக்குட்டியானவரின் ஜீவபுஸ்தகத்தில் எழுதப்பட்டது - உலகத் தோற்றத்துக்கு முன்பு. அப்பொழுதுதான் ஆட்டுக்குட்டியானவர் அடிக்கப்பட்டார். தேவன் வார்த்தையை உரைத்தார். அதற்கு முன்பு அது அவருடைய சிந்தையில் இருந்தது. அவர் வார்த்தையை உரைத்தார். எல்லாமே அந்தந்த நேரத்தில் தோன்றினது. இது தேவனுடைய வித்து தோன்றுவதாகும், அவ்வளவுதான், அவருடைய வார்த்தைகள் இறங்கி வருதல். தேவனுடைய வெளிச்சம் அதன் மேல் படும்போது அந்த வித்து விரைவில் அதை அடையாளம் கண்டுகொள்கிறது. ஏனெனில் அது தேவனால் பிறந்தது. அது ஆபிரகாமின் சந்ததி. அது தேவனால் முன்னறியப்பட்டது. அந்த வித்தைப் பிடிப்பதற்காகவே வெளிச்சம் பிரகாசிக்கின்றது. 28 நமக்கு ஒரு எழுப்புதல் உண்டாயிருந்ததென்று. யோவேல் கூறினான். நாம் பின்மாரியைக் குறித்து வீண் சந்தடி செய்கிறோம். நமக்கு பின்மாரி, முன்மாரி, இடைமாரி, வெளிமாரி என்றழைக்கப்படும் இயக்கங்கள் உண்டாயிருந்தன. நான் அன்றொரு நாள் படித்துக் கொண்டிருந்தேன். முன்மாரி, என்பதற்கு எபிரெய மொழியில் என்ன அர்த்தம் தெரியுமா? அது இப்பொழுது என் ஞாபகத்துக்கு வரவில்லை. நான் அதை எழுதி வைக்கவில்லை, அது எனக்கு மறந்துவிட்டது. முன்மாரி, முதலாம் மழை என்பதற்கு ''போதிக்கும் மழை'' என்று பொருள். இரண்டாம் மழை என்பது ஏற்கனவே போதிக்கப்பட்டதன் மேல் வரும் ஆவி, அது பயிரை முளைப்பிக்கிறது. நமக்கு ஏன் இப்படிப்பட்ட எழுப்புதல் உண்டாயிருந்தது? பெந்தெகொஸ்தே, பாப்டிஸ்டு, இன்னும் மற்றெல்லா மரங்களும் துளிர்விட்டன. அவை துளிர்விடுமென்று இயேசு கூறினார். நமக்கு என்ன கிடைத்தது? பாப்டிஸ்டுகள் தங்களுக்கு 1944-ல் பத்து லட்சம் பேர் அதிகம் கிடைத்ததாக கூறினர். கத்தோலிக்கரின் தொகை எவ்வாறு அதிகரித்தது என்பதைப் பாருங்கள். எல்லா ஸ்தாபனங்களையும் பாருங்கள். பெந்தெகொஸ்தேயினரைப் பாருங்கள். நாம் என்ன செய்தோம்? நாம் ஸ்தாபன வித்துக்களை விதைத்தோம், ஸ்தாபன அறுவடையை அறுத்தோம். தேவனுடைய வித்து மாத்திரம் முன்பு விதைக்கப்பட்டிருந்தால், சபையானது இப்பொழுது தேவனுக்காக அனல் மூண்டு, அடையாளங்களும், அற்புதங்களும் நிகழ்ந்து, சபை ஒரே மனதாயும் ஒரே சிந்தையாயும் ஒன்றுபட்டு எடுத்துக்கொள்ளப் படுதலுக்கென்று சீயோன் நோக்கி அணிவகுத்து சென்று கொண்டிருக்கும். அது உண்மை. ஆனால் நாம் என்ன செய்தோம்? தேவனுடைய வார்த்தைக்குப் பதிலாக நாம் அறிவுத்திறன் கொண்ட பேச்சுகளை ஏற்றுக்கொண்டோம். வார்த்தைக்கு எதிராக நாம் யோசனையை ஏற்றுக்கொண்டோம். மற்றெல்லாவற்றையும் செய்தோம். 29 நாம் தேவனுடைய வார்த்தைக்குத் திரும்ப வேண்டும்... நாம் அதை செய்வோம்! தேவன், ''நான் முசுக்கட்டைப் பூச்சிகளும், பச்சைப் புழுக்களும் பட்சித்த வருஷங்களின் விளைவை உங்களுக்கு திரும்ப அளிப்பேன்'' என்று கூறியுள்ளார், (யோவேல். 2:25) அது சாயங்கால நேரத்தில் விளையப்போகின்றது. ஒருவர் ஒரு செய்தியுடன் வருவார். அவர் பிள்ளைகளுடைய இருதயத்தை - பிள்ளைகளுடைய விசுவாசத்தை பிதாக்களின் விசுவாசத்துக்குத் திருப்புவார். அவர் அவ்வாறு செய்வதாக மல்கியா 4-ல் வாக்களித்துள்ளார் - அவைகளைத் திருப்புவதாக. அது வேதத்தில் கூறப்பட்ட எலியாவாகிய யோவான் ஸ்நானன் அல்ல. இயேசு மத்தேயு 11-ல், ''நீங்கள் ஏற்றுக் கொள்ள மனதாயிருந்தால், வருகிறவனாகிய எலியா இவன்தான்'' என்று யோவான் ஸ்நானனைக் குறிப்பிட்டார். (மத் 11:14) அது, “இதோ, நான் என் தூதனை அனுப்புகிறேன்'' என்று மல்கியா 3-ல் உரைக்கப்பட்டதன் நிறைவேறுதல். அதை நீங்கள் மல்கியா 3:1-ல் காணலாம். 30 ஆனால் ஞாபகம் கொள்ளுங்கள், மல்கியா 4-ல் உரைக்கப்பட்ட தூதன் மூலம் செய்தி வருகிறது. “இதோ, கர்த்தருடைய பெரிதும் பயங்கரமுமான நாள் வந்து பூமியைச் சுட்டெரிக்கும். நீதிமான்கள் துன்மார்க்கருடைய சாம்பலை மிதிப்பார்கள். இது யோவான் ஸ்நானனுக்குப் பின்பு உடனடியாக நிகழவில்லை. அப்படி நிகழ்ந்திருந்தால், வேதம் தனது பிழையற்ற தன்மையை இழந்திருக்கும், நடக்காத ஒன்றை அது கூறினதாக ஆகிவிடும். யோவான் ஸ்நானனின் காலம் முதல் இரண்டாயிரம் ஆண்டுகள் சென்றுவிட்டன. ஆனால் உலகம் இன்னும் சுட்டெரிக்கப்படவில்லை. இல்லவே இல்லை, நீதிமான்களும் துன்மார்க்கரின் சாம்பலின் மேல் நடக்கவில்லை. நாம் அதற்காக காத்திருக்கிறோம். ஏதோ ஒன்று விசுவாசத்தை எடுத்து, பிள்ளைகளுடைய விசுவாசத்தை, முசுக்கட்டை பூச்சிகள் தின்றுபோட்ட - ரோம முசுக்கட்டை பூச்சிகள் - அந்த மூல பெந்தெகொஸ்தே மரத்துக்கு திருப்பும். அவர்களுடைய ஸ்தாபனங்களும் கோட்பாடுகளும் அந்த மரத்தை காலந்தோறும் அழித்து போட்டன. தேவன், ''கடைசி நாட்களில் அதை திரும்ப அளிப்பேன்” என்று வாக்களித்துள்ளார். அது திரும்ப அளிக்கப்படும்! நடப்பட்ட வார்த்தையின் மேல் தேவன் தமது பரிசுத்த ஆவியை அனுப்புவார், அது அதை திரும்ப அளிக்கும். தேவனுடைய வார்த்தையானது, விதைக்கிறவன் புறப்பட்டு சென்று விதைக்கும் விதைக்கு ஒப்பாயிருக்கிறது. 31 இப்பொழுது, உடன்படிக்கை நிபந்தனையின்றி அளிக்கப்பட்டது. ஆனாலும் மாம்சத்தின்படி சந்ததியாரான இஸ்ரவேல் ஜனங்கள், யாத்திராகமம் 19-ல் அதை வேறொன்றுக்கு மாற்றிக் கொண்டு, கிருபையை நீக்கி அதன் இடத்தில் நியாயப்பிரமாணத்தை அளிக்கும் அவசரமான செயலைப் புரிந்தனர். இஸ்ரவேல் ஜனங்கள் அவசரப்பட்டு, எப்படிப்பட்ட தவறைப் புரிந்தனர். கவனியுங்கள்! தேவன் ஆபிரகாமுடன் உடன்படிக்கை செய்து கொண்ட பிறகு, கிருபையானது, அவர்களை எகிப்திலிருந்து மீட்டெடுத்து, ஆபிரகாமின் வார்த்தையை நிறைவேற்ற ஒரு தீர்க்கதரிசியை தந்தருளினது. எரிகிற முட்செடியின் அருகிலிருந்த மோசேயை நினைவு கூருங்கள். தேவன், ''என் ஜனங்கள் இடுகிற கூக்குரலைக் கேட்டேன், என் வாக்குத்தத்தத்தை நினைவு கூருகிறேன்'' என்றார். நியாயப்பிரமாணம் இருந்ததற்கு முன்பே, கிருபை அதை அளித்தது. கிருபை அவர்களுடைய குற்றத்துக்காக ஒரு ஆட்டுக்குட்டியை அளித்தது. கிருபை உடன்டிக்கை, விருத்தசேதனம் ஆகியவைகளை இவைகளுக்கு முன்பே ஏற்கனவே அளித்துவிட்டது. அவர்களை வழி நடத்த கிருபை அவர்களுக்கு ஒரு அக்கினி ஸ்தம்பத்தை அளித்து, அவர்கள் தீர்க்கதரிசியை பின் தொடர்ந்தனர். தீர்க்கதரிசி அவர்களுக்கு உண்மையைக் கூறினான், அவன் தேவனுடைய வார்த்தையையே அவர்களுக்கு எடுத்துரைத்தான் என்பதை உறுதிபடுத்தும் விதத்தில் அக்கினி ஸ்தம்பம் இருந்தது. தேவன் அதை வாக்குத்தத்தம் செய்துள்ளார் என்பதை அவர்கள் அறிந்திருந்தனர், அதை உறுதிப்படுத்த அக்கினி ஸ்தம்பம் அங்கிருந்தது. என்னே ஒரு இரட்டிப்பான உறுதி! ஆமென். கிருபை அதை செய்தது! ஆனால் அவர்களோ தாங்கள் செய்வதற்கு தங்களுக்கென ஒன்றை விரும்பினர். அவர்கள் தங்கள் சொந்த கோட்பாடுகளையும் ஸ்தாபனங்களையும் உடையவர்களாய், பரிசேயர்களையும் சதுசேயர்களையும் ஏற்படுத்திக்கொண்டு, தாங்கள் செய்வதற்கு தங்களுக்கென ஒன்றை விரும்பினர். மனிதன் எப்பொழுதுமே தன்னை தான் இரட்சித்துக்கொள்ள விரும்புகிறான். நீங்கள் அதை செய்யமுடியாது! தேவன் அதை ஏற்கனவே செய்துவிட்டார். நீங்கள் அதை ஏற்றுக் கொண்டு விசுவாசிக்க மாத்திரம் செய்யவேண்டும். 32 அவர்களை ஒரு பாதையில் வழிநடத்த அக்கினி ஸ்தம்பம். சத்துருக்களை ஆக்கினைக்குட்படுத்தி, இவர்களை விடுதலையாக்குவதற்கென கிருபையானது வல்லமையை அளித்திருந்தது. வல்லமை ஏற்கனவே அளிக்கப்பட்டிருந்தது. அவர்கள் சிவந்த சமுத்திரத்தைக் கடந்தனர். அவர்கள் பார்வோனை நிர்மூலமாக்கினர். கிருபையைக் கொண்டு இந்த எல்லா காரியங்களையும் செய்தனர். ஆனால் இவையனைத்துக்கும் பிறகு, அவர்கள் கிருபைக்கு பதிலாக நியாயப்பிரமாணத்தை ஏற்றுக் கொண்டனர். ஆனால் இதற்கும் ஆபிரகாமின் ராஜரீக சந்ததிக்கும் ஒரு சம்பந்தமுமில்லை. ராஜரீக சந்ததியும் இதையே செய்ய முயன்று, கிருபையையும் வார்த்தையையும் ஏற்றுக் கொண்டு விசுவாசிப்பதற்கு பதிலாக, ஒரு விதமான கோட்பாட்டின் கீழ் சென்றது. அவர்கள் அவ்வாறு சென்றனர். ஆனால் ஒரு ராஜரீக சந்ததி வரும். சிறிது கழிந்து அதற்கு நாம் வருவோம். 33 இப்பொழுது நாம் ஆதியாகமம் 12-ம் அதிகாரத்துக்கு செல்வோம். தேவன் ஆபிரகாமை கிருபையினால் அழைத்தார். அவன் வித்தியாசமான ஒருவனாய் இருந்தான் என்பதனால் அல்ல. அவன் வெறும் ஆபிரகாமாக, சாதாரண மனிதனாக இருந்தான். அவன் ஒரு ஆசாரியன் அல்லது கீர்த்தி வாய்ந்தவன் என்பதனால் அல்ல. அவன் ஒரு விவசாயி. அவன் தன் தகப்பனுடன் பாபிலோன் கோபுரமிருந்த நகரத்தை விட்டுப் புறப்பட்டு கல்தேயருடைய பட்டினமாகிய ஊர் என்னுமிடத்துக்கு சென்றான். அவன் ஒரு விவசாயி. ஒருக்கால் அவன் பகல் நேரத்தில் விவசாயம் செய்து பயிரிட்டிருப்பான். அவன் தனக்கு ஒன்றுவிட்ட சகோதரியாகிய சாராளை விவாகம் பண்ணினான், அவர்களுக்குப் பிள்ளையில்லை. தேவன் ஆபிரகாமை அழைத்தபோது, அவனுக்கு எழுபத்தைந்து வயது, சாராளுக்கு அறுபத்தைந்து வயது. தேவன் ஆபிரகாமை அழைத்த போது, ''உன்னை ஜாதிகளுக்குத் தகப்பனாக்குவேன்'' என்றார். அவர் சாராளின் மூலம் அவனுக்கு ஒரு பிள்ளையைக் கொடுப்பதாக வாக்களித்தார். அவனுடைய சரீரம் செத்துப் போயிருந்தது. அவளுக்கு அறுபத்தைந்து வயது. ஸ்திரீகளுக்குள்ள வழிபாடு அவளுக்கு நின்றுபோய் பத்து அல்லது பதினைந்து ஆண்டுகள் ஆகியிருந்தன. அவன் தன் ஒன்றுவிட்ட சகோதரியான அவளுடன், அவளுக்கு ஏறக்குறைய பதினாறு அல்லது பதினெட்டு வயது ஆன முதற்கே வாழ்ந்து வந்தான். இத்தனை ஆண்டு காலமாக, அவனுக்கு எழுபத்தைந்து வயது ஆகும் வரைக்கும் அவளுக்கு அறுபத்தைந்து வயது ஆகும் வரைக்கும், அவன் அவளுக்கு கணவனாக வாழ்க்கை நடத்தி வந்தான். அதன் பிறகு தேவன் இறங்கி வந்து, “அவள் மூலமாய் உனக்கு ஒரு பிள்ளையைத் தரப் போகிறேன்'' என்கிறார். அவன் தேவனுடைய வாக்குத்தத்தத்தைக் குறித்து அவிசுவாசமாய் சந்தேகப்படாமல், அதை முழு நிச்சயமாக நம்பினான். 34 எழுபத்தைந்து வயது நிரம்பிய ஒரு கிழவனும், அறுபத்தைந்து வயதான ஒரு ஸ்திரீயும் மருத்துவரிடம் சென்று, ''மருத்துவரே, மருத்துவமனையை நீங்கள் ஆயத்தமாக வைக்க வேண்டும். நாங்கள் எந்த இரவு நேரத்திலும் உம்மை அழைக்கக் கூடும். ஏனெனில் எங்களுக்கு ஒரு பிள்ளை பிறக்கப்போகின்றது'' என்று கூறுவதை உங்களால் கற்பனை செய்ய முடிகிறதா? மருத்துவர், ''சரி, ஐயா. நீங்கள்... உ, உ, உ!'' என்று கூறி விட்டு, அவர்கள் சென்றவுடன், “அவர்களைப் போய் பார்த்து விட்டு வா. அவர்களுக்கு ஏதோ மூளைகோளாறு ஏற்பட்டுள்ளது'' என்பார். தேவனுடைய வாக்குத்தத்தத்தை ஏற்றுக்கொண்டு விசுவாசிக்கும் எவனையும் உலகம் பைத்தியக்காரன் என்று கருதுகிறது. பவுல், “இவர்கள் மதபேதம் (heresy) என்று சொல்லுகிற மார்க்கத்தின்படியே எங்கள் முன்னோர்களின் தேவனுக்கு ஆராதனை செய்கிறேன்'' என்றான். (அப் 24:14) ”மதபேதம்'' (heresy) என்பது “பைத்தியக்காரத்தனம்” (crazy) என்று நாமறிவோம். அது மாம்ச சிந்தைக்கு முட்டாள்தனமாக உள்ளது. விசுவாசமும் அதைக் கொண்டிருப்பவனும் தேவனைத் தவிர மற்றெல்லாருக்கும் பைத்தியக்காரத்தனமாக காணப்படுகின்றனர். அது உண்மை. 35 தேவன் ஆபிரகாமுக்கு வாக்குத்தத்தம் செய்தார், ஆபிரகாம் அதை விசுவாசித்தான். அவன், ''தேவனே, அது எப்படி முடியும்?'' என்று கேட்கவில்லை. அவன், “சரி தேவனே, அதை நான் விசுவாசிக்கிறேன்'' என்றான். அவன் வீட்டுக்குச் சென்று, ''சாராளே, நாம் கடைக்கு சென்று பல கெஜம் கம்பளி நூலையும், அதை பின்னுவதற்கு ஊசிகளையும், காலுறைகளையும் வாங்கி வருவோம். நமக்கு குழந்தை பிறக்கப் போகின்றது'' என்று கூறுவதை என்னால் காணமுடிகிறது. ஓ, என்னே! முதல் முப்பது நாட்கள் கடந்துவிட்டன. இல்லை இருபத்தெட்டு நாட்கள். “அன்பே, உனக்கு எப்படியிருக்கிறது?'' ''ஒரு வித்தியாசமும் இல்லை''. ''கர்த்தருக்கு ஸ்தோத்திரம், நாம் எப்படியும் அதை பெறப் போகின்றோம்.'' ''உங்களுக்கு எப்படி தெரியும்?'' “தேவன் அவ்வாறு கூறினார்.'' நம்மில் சிலருக்கு ஒரு இரவு ஜெபம் ஏறெடுக்கப்படுகின்றது. கூட்டத்தில் அமர்ந்துள்ளபோது பரிசுத்த ஆவி விழுகின்றது. ஆனால் அடுத்த நாள் காலை நமக்கு உடல்நிலை சரியில்லையென்றால், “எனக்கு இன்னும் வயிற்றில் சிறிது கோளாறு உள்ளது. என்னால் கைகளை அசைக்கவே முடியவில்லை'' என்றெல்லாம் கூறுகிறோம். ஆபிரகாமின் சந்ததியே, தேவனுடைய வாக்குத்தத்தத்தை அவிசுவாசமாய்ச் சந்தேகப்படாமல் விசுவாசியுங்கள். 36 சபையில் ஏதாவதொன்று தோன்றி, பிசாசு ஒரு கூட்டம் மக்களிடையே புகுந்து அந்த சபையோரை துன்புறுத்தக்கூடும். முதலாவதாக நடப்பது என்ன தெரியுமா? அவர்களில் சிலர், “இந்த பழமையான காரியத்தை விட்டு விலகப்போகின்றேன். துவக்கத்திலிருந்தே அதில் ஒன்றுமில்லை'' என்கின்றனர். நீங்கள் ஆபிரகாமின் சந்ததியா? பிசாசு முதன்முறையாக ஒரு சிறு குறையை உங்களுக்கு காண்பிக்க நேரிட்டால், நீங்கள் விலகிவிடுகிறீர்கள். நீங்கள் துவக்கத்திலேயே அதை விசுவாசிக்கவில்லை என்பதை அது காண்பிக்கிறது. இயேசு, “பரலோக ராஜ்யம், ஒரு மனிதன் வலையை எடுத்துக்கொண்டு கடலுக்குச் சென்று அதை கடலில் போட்டதற்கு ஒப்பாயிருக்கிறது. அவன் வலையை இழுத்தபோது, எல்லாவற்றையும் வாரிக் கொண்டான்'' என்றார். (மத் 13:47) அது உண்மை. ஒரு எழுப்புதல் அதைத்தான் செய்கிறது. அது எல்லாவற்றையும் வலையில் பிடிக்கிறது. வலையில் என்ன இருக்கிறது? தவளைகள், சிலந்திகள், ஆமைகள், பாம்புகள், மீன்கள்- ஆகிய அனைத்தும். சில நாட்கள் கழித்து ஆமை, ''இது என்னுடைய இடமல்ல'' என்று சொல்லிவிட்டு சோற்றுக்குள் சென்றுவிடுகிறது. தண்ணீர் சிலந்தியும் சுற்று முற்றும் பார்த்துவிட்டு, ''ஊ! எனக்கு இங்கு சீட்டு விளையாட்டு இல்லை'' என்று சொல்லிவிட்டு சேற்றுக்கு திரும்பிவிடுகிறது - பன்றி தான் முன்பிருந்த சேற்றுக்கு திரும்புவதைப் போலவும், நாய் தான் கக்கினதைத் தின்பது போலவும், அது உண்மை. இவர்கள் ஆபிரகாமின் சந்ததியா? ஓ, என்னே! பெருத்த அவமானம்! ஆபிரகாமின் சந்ததி தேவனுடைய வார்த்தையை விசுவாசிக்கும். 37 அங்கு உட்கார்ந்து கொண்டு, “கர்த்தருக்கு ஸ்தோத்திரம், நான் பெந்தெகொஸ்தேயினன்'' என்று கூறிவிட்டு, யாராகிலும் ஒருவர் தேவனுடைய வார்த்தையின் பேரில், அங்கு எழுதப்பட்டுள்ள விதமாகவே, தெளிவாக பிரசங்கம் செய்தால், ”அல்லேலூயா, அதை நான் விசுவாசிக்க மாட்டேன், இல்லை, ஐயா“ என்று கூறினால், அது ஆபிரகாமின் சந்ததியா? ஊ! அது ஏதாவது அர்த்தமற்ற ஒன்றாயிருக்குமானால் நீங்கள் அதை விசுவாசிக்கக் கூடாது தான். ஆனால் அது வார்த்தையாயிருக்குமானால், அது சத்தியம்! அது உண்மை. ஆபிராகாமின் சந்ததி அந்த வார்த்தையை இறுகப்பற்றிக் கொள்ளுமேயன்றி வேறொன்றையும் அல்ல. 38 இன்னுமொரு மாதம் கடந்து சென்றது. “சாராளே, இருதயத்துக்கு இனியவளே, இப்பொழுது உனக்கு எப்படியிருக்கிறது?இன்னுமொரு இருபத்தெட்டு நாட்கள் கடந்துவிட்டன. உனக்கு எப்படியிருக்கிறது”? “அன்பே ஒரு வித்தியாசமுமில்லை.'' ''தேவனுக்கு மகிமையுண்டாவதாக! அது கடந்த மாதத்தைக் காட்டிலும் இப்பொழுது நடக்குமானால், அது இரண்டு மாதங்களில் உண்டாகும் இன்னும் பெரிய அற்புதம்.'' “ஒரு ஆண்டு கடந்து விட்டது. நான் சிறு காலுறைகளை எறிந்து விடட்டுமா? “வேண்டாம். அங்கேயே வைத்திரு. நாம் அந்த குழந்தையைப் பெறப் போகின்றோம்.'' ''அதைப் பெறப்போவதாக உங்களுக்கு எப்படி தெரியும்?'' ''தேவன் அவ்வாறு கூறினார். அத்துடன் அது முடிவு பெற்றுவிட்டது.'' இருபத்தைந்து ஆண்டுகள் கடந்தன. “சாராளே, உனக்கு எப்படியிருக்கிறது?'' ''ஒரு வித்தியாசமும் இல்லை.'' “தேவனுக்கு மகிமை! இப்பொழுது இருபத்தைந்து ஆண்டு கடந்து நடக்கப்போகும் அற்புதம் இது''. அவன் தேவனுடைய வாக்குத்தத்தத்தைக் குறித்து அவிசுவாசமாய்ச் சந்தேகப்படாமல், தேவனுடைய வார்த்தையை இறுகப்பற்றிக் கொண்டு விசுவாசத்தில் வல்லவனாகி இல்லாதவைகளை இருக்கிறவைகள் போல் அழைத்தான். ஏன்? தேவன் அவ்வாறு கூறினார். ஓ என்னே!. 39 இன்றைய ஆபிராகாமின் சந்ததி - ஆபிரகாமின் சந்ததியென்று தங்களை அழைப்பவர் - தீனி உண்ணாமல் பலவீனமடைந்துள்ள கோழிக் குஞ்சிலிருந்து உண்டாக்கப்பட்ட குழம்பைக் காட்டிலும் பலவீனமுள்ளவராயிருக்கின்றனர். ஆம், ஐயா. மரித்தாலும் பிழைத்தாலும், தேவனுடைய வார்த்தையை ஏற்றுக் கொள்ளும் கரடுமுரடான கிறிஸ்தவர்களே தேவனுக்கு வேண்டும். அது ''தேவன் அவ்வாறு கூறினார்'' என்னும் அதே காரியம். ஆமென். அதுதான் ஆவியினாலும் தேவனுடைய வார்த்தையினாலும் பிறந்த ஆபிரகாமின் சந்ததி. அதுதான் நிலைநிற்கும். “வானமும் பூமியும் ஒழிந்து போம், என் வார்த்தைகளோ ஒழிந்து போவதில்லை. அது தான். தேவன் வாக்குத்தத்தம் பண்ணினதை நிறைவேற்ற வல்லவராயிருக்கிறார். தேவன் தவறுவதில்லை. அவரால் தவற முடியாது. தேவனால் ஒன்றை மாத்திரம் செய்ய முடியாது. அது தவறுவது. அவரால் தவறவே முடியாது. அவரால் செய்ய முடியாத ஒன்றே ஒன்று அதுதான். தேவன்அதை வாக்குத்தத்தம் செய்திருந்தால், அது சத்தியம். அது என்றென்றைக்கும் நிலை நிற்கும். அது என்றென்றைக்கும் முற்றிலும் முடிவு பெற்ற ஒன்று. தேவன் ஒரு வார்த்தையை பேசுவாரானால், அது ஏற்கனவே முடிவு பெற்றுவிட்டது. 40 தேவனுடைய ஒரே வார்த்தையினாலே இவ்வுலகம் சிருஷஷ்டிக்கப்பட்டது. அவர் “உண்டாகக்கடவது'' என்றார். அது உண்டானது. ஆமென். இன்றிரவு நீங்கள் எந்த தூசின் மேல் உட்கார்ந்து கொண்டிருக்கிறீர்களோ, எந்த மரத்தின் மேல் உட்கார்ந்து கொண்டிருக்கிறீர்களோ, இவையனைத்தும் தேவனுடைய வார்த்தை பிரத்யட்சமகுதலே அன்றி வேறொன்றுமல்ல. அல்லேலுயா! நான் ஆபிரகாமைக் குறித்து சிந்திக்கும் போது, நாம் ஆபிரகாமின் சந்ததியாய் இந்த வாக்குதத்தங்கள் அனைத்துக்கும் சுதந்தரவாளியாய் ஆகிவிடுறோம் என்று அறிந்தவனாய், பக்தி பரவசப்படுகிறேன். இந்த வாக்குத்தத்தங்களை உறுதியாக்க, தேவனே தமது கரங்களையுயர்த்தி, அதை செய்வதாக தம்மில் தாமே ஆணையிட்டார். எந்த ஒரு உடன்படிக்கையும் ஒரு ஆணையினால் உறுதிப்பட வேண்டும். ஆணையிடுவதற்கு தம்மை விட உயர்ந்தவர் யாரும் இல்லாதபடியினால், அதை செய்வதாக தேவன் தம்மில் தாமே ஆணையிட்டுக் கொடுத்தார். அப்படியிருக்கும் போது, நமக்கு என்ன நேர்ந்தது? அப்படிப்பட்ட ஒரு வாக்குத்தத்தத்தை நாம் பெற்றுள்ளோமே! அப்படிப்பட்ட ஒன்றை ஆதாரமாகக் கொண்டு கட்டப்படும் விசுவாசம்! கடைசி நாட்களில் இவை சம்பவிக்கும் என்று தேவனுடைய வார்த்தை வாக்களித்து, அது நமது முன்னிலையில் நிறைவேறுவதை நாம் கண்கூடாகக் கண்ட பிறகும் சந்தேகப்படுகிறோம். இதுவா ஆபிரகாமின் சந்ததி? ஓ, என்னே! நீங்கள் “ஆபிரகாமின் சந்ததி” என்பதை இறுகப் பற்றிக் கொள்ள விரும்புகிறேன். 41 ஆதியாகமம்:12, தேவன் ஆபிரகாமிடம் எதிர்பார்த்தது முழுவதுமான வேறுபிரிதல். இன்றைக்கு அவர்கள் எல்லோரிடமும் நன்றாக பழகுபவர்களை (mixers) விரும்புகின்றனர். “ஓ, நாங்கள் தேர்ந்தெடுக்கும் போதகர் சுருண்ட தலைமயிர் உள்ளவராக இருக்க வேண்டும். அவர் ஹாலிவுட் முறையை அனுசரிப்பவராய், இனிய முறையில் ஆ ஆ ஆ ஆ ”ஆமென்“ என்று சொல்லவேண்டும். அவர் மிகவும் சிறந்த உடைகளை உடுத்தி விலையுயர்ந்த ”காடிலாக்“ காரை ஓட்டுபவராக இருக்கவேண்டும். அவர் எல்லோரிடமும் நன்றாக பழக வேண்டும். அவர் இதை செய்யவேண்டும். அவர் எங்களுடன் இணங்குகிறார் என்பதைக் காண்பிக்க எப்பொழுதாவது ஒருமுறை சிறிது மது அருந்தவேண்டும். அவர் பெண்களின் சீட்டுக் கச்சேரிக்கு வரவேண்டும். அவர்கள் தைப்பதையும், குமாரி இன்னார் இன்னாரைப் பற்றி பேசுவதையும் கேட்கவேண்டும். இவர் இப்படிப்பட்டவராய், எல்லோரோடும் பழகுகிறவராய் இருக்கவேண்டும்''. 42 தேவனோ, ''பவுலையும் பர்னபாவையும் எனக்காக பிரித்து விடு'' என்கிறார். ஆமென்! பிரித்தல்! ''அவர்களை விட்டுப் பிரிந்து போய் அசுத்தமானதைத் தொடாதிருங்கள்''. தேவன் வேறுபிரிதலை விரும்புகிறார், பாவத்திலிருந்து முழுவதுமாக நீக்கப்படுதல் அதுதான் இன்றைய தொல்லை. நாம் ஆபிரகாமின் சந்ததியாய் இருக்க முடியாததன் காரணம், கிறிஸ்தவ மார்க்கம் என்று தன்னை அழைத்துக் கொள்ளும் கொள்கைகளினின்றும் கோட்பாடுகளினின்று நம்மை பிரித்துக்கொண்டு ஜீவனுள்ள வார்த்தைக்கு வர முடியாமையே. உங்கள் அவிசுவாசத்தினின்று உங்களை பிரித்துக்கொண்டு, தேவனுடைய வார்த்தையை விசுவாசியுங்கள். தேவன் அதை உங்களுக்கு வெளிப்படுத்தித் தருவார். உண்மை. ஆதியாகமம்:12-ல் தேவன் ஆபிரகாமிடம், ''நீ உன் இனத்தார் அனைவரையும் உன்னைச் சுற்றிலுமுள்ள மற்றெல்லாவற்றையும் விட்டு பிரிந்து வா'' என்றார். ஓ, என்னே நம்மால் சீட்டு விளையாட்டை விட்டு பிரிந்து வரமுடியவில்லை. ஊ! 43 இன்று நான் ஒரு உணவு விடுதிக்கு சென்றிருந்தேன், அங்கு சகோதரரும் வந்திருந்தார். அங்கு வந்த போதை மருந்து உட்கொள்ளும் வாலிபன் ஒருவனைக் கவனித்தேன். நானும் மனைவியும் உணவு உண்டு கொண்டிருந்தோம். நான், “தேவனுக்கு ஸ்தோத்திரம்! தேனே , யாராகிலும் இங்கு வருவதற்கு முன்பு நாம் விரைந்து வெளியே சென்றுவிடுவோம்” என்றேன். அப்பொழுது இந்த வாலிபன் ஆடிக் கொண்டு வந்தான். இருட்டில் அவனைச் சந்திக்க நான் பயப்படுவேன். அவன் 'பூகி ஓகி' இசை பதிவு செய்யப்பட்டிருந்த இசைத்தட்டை ஒன்றை போட்டு, இப்படி ஆடி, இப்படி தன்னை அடித்துக் கொண்டான், நான், “தேவன் இரக்கம் பாராட்டுவாராக'' என்றேன். மேடா, ''உணவுக்கான பணம் செலுத்த நீங்கள் என்னை விட்டு செல்ல வேண்டாம். நானும் உங்களுடன் வருகிறேன்'' என்றாள். அவள் பயந்து போனாள். 44 இன்று நாம் பெற்றுள்ள இத்தகைய காரியங்களை, ஒரு கிறிஸ்தவ தேசத்தில் பெற்றுள்ளோம். ஓ, என்ன ஒரு காரியம்! பிரிவினை அவர்களில் தொண்ணூறு சதவிகிதம் சபை பாடல் குழுக்களில் பாடுகின்றனர் - எல்விஸ் பிரஸ்லி, பாட் பூன், பீபடி எர்னி. அவர்கள் ஏதோ அப்படி ஒரு பெயரால் அழைக்கின்றனர். அது யூதாஸ்காரியோத்தைக் காட்டிலும் மோசமானது. யூதாஸ்காரியோத் விற்று முப்பது வெள்ளிக் காசுகளைப் பெற்றான். ஆனால் எல்விஸோ அவனை மிஞ்சிவிட்டான். இவன் பல 'காடிலாக்' கார்களையும் அதிக புகழையும் சம்பாதித்துவிட்டான். இந்த சிறுவர்கள் அவன் செய்வதைக் கண்டு, ''அவன் மிகுந்த பக்தியுள்ளவன்'' என்கின்றனர். அது பிசாசு! முற்றிலுமாக! அப்படிப்பட்ட காரியங்களை தேவன் பொறுத்துக் கொள்வதில்லை. அது குருட்டுத்தனம். நீங்கள் கடைசி நாட்களில் இருக்கின்றீர்கள். வார்த்தைக்குத் திரும்புங்கள். ''நீங்கள் தேவனுக்கு விரோதமான காரியங்களிலிருந்து உங்களைப் பிரித்துக் கொண்டு, அசுத்தமானதைத் தொடாதிருங்கள். அப்பொழுது நான் உங்களை ஏற்றுக்கொள்வேன்''. (2 கொரி 6:17-18). 45 நாம் சுவிசேஷத்தை வெறும் கையுடன் கையாள வேண்டும். மத சம்பந்தமான கையுறைகளை (gloves) போட்டுக் கொண்டு யாராகிலும் ஒருவரை முதுகில் தட்டிக் கொடுக்கக் கூடாது. அது கூட்டில் அழுகின முட்டைகளை நிறைத்து விடும். நீங்கள் யாரையாகிலும் மாகாண பிரதிநிதியாகவும், குருவானவராகவும், பேராயராகவும், அல்லது வேறெதாவதாகவும் செய்து விடுகிறீர்கள். அது என்ன... நீங்கள் மதிப்பை பெறும் போது; நீங்கள் ஒருவரிடத்திலிருந்து மற்றவர் கனத்தைப் பெறும் போது, உங்களுக்கு எப்படி விசுவாசம் இருக்கும்? நாம் தேவனை மாத்திரமே -நோக்குகின்றோம். கனம் தேவனிடத்திலிருந்து வருகிறது. கனத்தை அளிப்பவர் அவர் ஒருவரே. நாம் அவருடைய வார்த்தையை தீவட்டியாக பிடித்து, தேவனுக்கு முன்பாக மனிதனும் ஸ்திரீயுமாய் நடப்பதன் மூலம் அவரை நாம் கனப்படுத்துகிறோம். (ஒலி நாடாவில் காலி இடம் - ஆசி) ஆற்றைக் கடந்து தேசத்திற்குள் சென்றான். தேவன், ''ஆபிரகாமே, இவையெல்லாவற்றையும் உனக்கு இப்பொழுது தருவேன். ஆனால் நீ இன்னும் முழுவதுமாக எனக்குக் கீழ்ப்படியவில்லை'' என்றார். 46 முதலாவதாக நடந்தது என்ன தெரியுமா, அங்கு மந்தை மேய்ப்பவர்களிடையே சிறு வாக்குவாதம் ஆதியாகமம் 13-ல் ஏற்பட்டது. (என்ன நடந்தது?) லோத்துடைய மந்தை மேய்ப்பருக்கும் ஆபிரகாமுடைய மந்தை மேய்ப்பருக்கும் வாக்குவாதம் உண்டாயிற்று. ஆபிரகாமின் சகோதர செயலை கவனியுங்கள். அவன், “நமக்குள்ளே வாக்குவாதம் வேண்டாம். நாம் சகோதரர்” என்றான். லோத்து வெதுவெதுப்பான சபைக்கு எடுத்துக்காட்டாயிருக்கிறான். ஆபிரகாம் லோத்தை நோக்கி, ''உன் கண்களை ஏறெடுத்துப் பார். உனக்கு எது வேண்டுமோ, நீ போய் அதை எடுத்துக்கொள். நீ கிழக்கே சென்றால், நான் மேற்கே செல்கிறேன். அல்லது, நீ மேற்கில் சென்றால், நான் கிழக்கே செல்கிறேன், நீ வடக்கே சென்றால், நான் தெற்கே செல்கிறேன், உனக்கு வேண்டியதை நீ தெரிந்து கொள்'' என்றான். லோத்து ஏற்கனவே எகிப்தில் இருந்தவன்; அவனுடைய பார்வை சிறிது கீர்த்தியின் மேல் இருந்தது, அவனுடைய ஜேபியில் சிறிது பணம் இருந்தது. 47 அங்கு தான் சபை தவறு செய்தது. சகோதரரே, இதை நான் பயபக்தியுடன் கூறுகிறேன். பெந்தெகொஸ்தே சபையானது இந்த பெரிய ஆலயங்களிலும் சவக்கிடங்குகளிலும் இன்று உபயோக மற்றதை பெற்றுக் கொண்டு வாழ்வதைக் காட்டிலும், தெரு மூலைகளில் பழமை நாகரீகம் கொண்ட ஆண்களுடனும் பெண்களுடனும் கையில் கஞ்சிராவை வைத்துக் கொண்டு நிற்பது அவர்களுக்கு நலமாயிருக்கும். அது உண்மை. அவர்கள் மற்றவர்களைப் போலவே நடந்து கொள்ள விரும்புகின்றனர். அங்கு தான் அதை நாம் பெற்றுக்கொண்டோம். நீங்கள் முன்பிருந்த விதமாகவே, தேவன் உங்களை துவக்கின விதமாகவே, நீங்கள் ஏன் இருக்கவில்லை?நீங்கள் எதைக் குறித்து வாக்குவாதம் செய்தீர்களோ, அதற்கே திரும்பி அதைச் செய்து கொண்டிருக்கிறீர்கள்... லோத்தும் அதையே செய்தான். அவன் எகிப்துக்குச் சென்றான். முதலாவதாக நடந்தது என்னவெனில், அவன் தன் பார்வையை எகிப்தின் மேல் வைத்தான். அதன் பிறகு அவன் கண்களை ஏறெடுத்து சோதோமைப் பார்த்தான் - சுகபோகம், எல்லாவற்றையும் சுலபமாக எடுத்துக் கொள்ளுதல். அவன் கிழக்கு நோக்கி சென்றான்... ஞாபகம் கொள்ளுங்கள், அவன் ஆபிரகாமுடன் மேற்கே செல்வதற்கு பதிலாக கிழக்கே சென்றான். அவன் கிழக்கே சென்ற காரணம் என்னவெனில், அது சுகபோக வழியாயிருந்தது. அவன் கிழக்கு நோக்கி சென்றான். 48 இன்றைக்கு சபையும் அவ்வாறே செய்துள்ளது. பாருங்கள், அது பின்நோக்கிச் சென்றது. நான் நேற்றிரவு கூறினது போன்று, சூரியன் கிழக்கில் உதித்து மேற்கே செல்கின்றது. தேவனுடைய குமாரன் முதலில் கிழக்கில் விஜயம் செய்து, மேற்கு நோக்கி சென்றார். இரண்டாயிரம் ஆண்டுகளாக அவர்கள் கடந்து வந்தனர். ''ஆனால் சாயங்காலத்திலே வெளிச்சம் உண்டாகும்'' என்று இந்த தீர்க்கதரிசி கூறியுள்ளான். (சகரியா 14:7) அவர்கள் குமாரன் (Son) செல்லும் திசையை நோக்கி செல்வதற்குப் பதிலாக குமாரன் (Son) முன்பிருந்த இடத்துக்கு செல்கின்றனர். இன்றைக்கு நீங்கள் தெய்வீக சுகமளித்தல், தீர்க்கதரிசனம், ஒன்பது ஆவியின் வரங்கள் ஆகியவைகளைக் குறித்து பேச நேர்ந்தால், அவர்கள், ''நாம் பின்சென்று மூடி என்ன சொன்னார், சாங்கி என்ன சொன்னார், நாக்ஸ் என்ன சொன்னார், கால்வின் என்ன சொன்னார் என்று பார்ப்போம்'' என்கின்றனர். இவர்களெல்லாரும் அந்த நாளிலே குமாரன் (Son) அங்கே பிரகாசித்துக் கொண்டிருந்த போது வாழ்ந்தனர். நாமோ பரிபூரணத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறோம். 49 முன்னூறு ஆண்டுகளுக்கு முன்பு பிரான்சு நாட்டைச் சேர்ந்த ஒரு விஞ்ஞானி, கோளத்தைச் சுற்றி ஒரு பந்தை உருட்டி, ''யாராகிலும் மணிக்கு முப்பது மைல் வேகத்தில் செல்வார்களானால், புவிஈர்ப்பு சக்தி அவர்களை பூமியிலிருந்து மேலே கொண்டு சென்றுவிடும்'' என்றார். அதை அவர் விஞ்ஞான பூர்வமாக நிரூபித்தார். இக்காலத்தில் விஞ்ஞானம் அதைக் குறிப்பிடும் என்று நினைக்கிறீர்களா? இல்லை, ஐயா! இப்பொழுது அவர்கள் மணிக்கு இரண்டாயிரம் மைல் வேகம் செல்கின்றனர். அதைக் காட்டிலும் அவர்கள் வேகமாக செல்ல முயன்று கொண்டிருக்கின்றனர். அவர்கள் பின்நோக்கி அதை பார்ப்பதில்லை . ஆனால் போதகர்களோ, “நாம் பின் நோக்கிப் பார்த்து மூடி என்ன சொன்னார், சாங்கி என்ன சொன்னார் என்று பார்ப்போம்'' என்கின்றனர். அங்கு தான் குமாரன் (Son) இருந்தார். இன்று அவர் இங்குள்ளார். அது சாயங்கால நேரத்தில் மேற்கு கடற்கரையில் இருந்துகொண்டு, அல்லேலூயா, சாயங்கால வெளிச்சத்தை தந்து கொண்டிருக்கிறது. லூத்தரின் நீதிமானாக்கப்படுதலுக்கோ அல்லது வெஸ்லியின் பரிசுத்தமாக்கபடுதலுக்கோ திரும்பி செல்வதில்லை. நாம் சாயங்கால வெளிச்சம் பிரகாசித்துக் கொண்டிருக்கும் கடைசி நாளில் இருக்கிறோம். குமாரனை (Son) பின்தொடர்ந்து செல்லுங்கள். ஆனால் லோத்து பின் சென்றான். ஏனெனில் அது சுலபமான, சுகபோகமான ஒன்றாயிருந்தது. திருமதி லோத்தை, அவள் அங்கு சென்ற போது கவனியுங்கள். அவள் நகரத்திலிருந்த சங்கங்களுக்கெல்லாம் ராணியாக இருந்திருப்பாள். லோத்து நகராண்மைத் தலைவரானான். ஓ, சகோதரனே, அவர்களுக்காக அது உண்டாக்கப்பட்டது. அப்படித்தான் ஜனங்கள் இன்று திருமதி லோத்தை பெற்றுள்ளனர். இன்று நமது ஜனங்கள் நடந்து கொள்ளும் விதத்தைப் பாருங்கள். சபைகளிலுள்ள நமது ஜனங்களை பாருங்கள். நமது பெண்களை இன்று பாருங்கள். 50 அண்மையில் நான் ஹாலிவுட்டில் இல்லை, லாஸ் ஏஞ்சஸில் இருந்தேன். அங்கு சகோ. ஆர்கன்பிரைட் வருவதற்காக நான் காத்துக் கொண்டிருந்தேன். அங்கு ஒரு பெண் வந்தாள். அவளைக் கண்ட போது நான் தள்ளாடி விழப்போனேன், நான் அவளை உற்றுப் பார்த்தேன். “நான் ஒரு மிஷனரி. நான் 'பிளேக்' வியாதியை கண்டிருக்கிறேன், நான் தொழு நோயை கண்டிருக்கிறேன். ஆனால் இப்படிப்பட்ட ஒன்றை நான் கண்டதில்லை'' என்று எண்ணினேன். அவள் 'வாட்டர் ஹெட்' சிகை அலங்காரம் செய்து கொண்டிருந்தாள். உங்களுக்குத் தெரியுமல்லவா, நீங்கள் 'வாட்டர் ஹெட்' என்று அழைப்பது முதல் சீமாட்டி, ஆம் யேசேபலைப் போன்று, அது போல். அவள் ஊதா, பச்சை வர்ணம் தீட்டியிருந்தாள். அவள் காண்பதற்கு அழகான பெண்ணாக இருந்திருப்பாள், ஆனால் அவள் தீட்டியிருந்த வர்ணம், அவளை ஆப்பிரிக்கப் பழங்குடி பெண் போல் தோற்றமளிக்கச் செய்தது. நான் அவளிடம் நடந்து சென்று அவளுக்காக ஜெபம் செய்யப்போனேன். நான், ''பெண்ணே, உனக்கு ஆட்சேபனை இல்லையென்றால், நான் வியாதியஸ்தருக்காக ஜெபிப்பவன். இப்படிப்பட்ட ஒன்றை நான் இதுவரை கண்டதில்லை. அது என்னவென்று என்னிடம் சொல்'' என்று அவளைக் கேட்கலாமென்று எண்ணினேன். ஆனால் அந்த சமயத்தில் வேறொருவள் அவளிடம் வந்து பேசினாள். அவளும் அதே விதமாக காணப்பட்டாள். ஓ என்னே!. ஓ, நீங்கள், ''அது பிரஸ்பிடேரியன்'' என்கிறீர்கள். பெந்தெகொஸ்தேயினரும் கூட. நிச்சயமாக. 51 “ஒரு ஸ்திரீ தன் தலைமயிரைக் கத்தரித்துக் கொள்வது கனவினமான செயல் என்று வேதம் கூறுகின்றது. அவள் அப்படி செய்தால் தன் தலையை கனவீனப்படுத்துகிறாள். அவள் தூதனை, வெளிச்சத்தின் தூதனை (The angel of Light) கனவீனப்படுத்துகிறாள். ஏழு சபை காலங்களின் தூதர்கள், வெளிச்சத்தைக் கொண்டு வருபவர். வார்த்தையில் நிலைநிற்பவர். கனவீனமான செயல்... அவள் தலையில் மயிரை வைத்திருக்க வேண்டும். என்னே, அப்படிப்பட்ட செயல் அவர்கள் தலைமயிரைக் கத்தரிப்பது தவறென்று முன்பு கருதப்பட்டது. முதலாம் பெந்தெகொஸ்தேயின் காலத்தில் அப்படி செய்தால் அது தவறாகும். என்ன நடந்தது? நீங்கள் நன்றாக ஓடினீர்களே, என்ன நடந்தது? சில பெந்தெகொஸ்தே பெண்கள் உடுத்தும் உடைகள் மிகவும் இறுக்கமாக, உள்ளேயுள்ளதை மறைக்க மேலேயுள்ள தோலைப் போன்றுள்ளது. அவர்கள் இப்படி உடுத்தி வெளியே சென்று... அது உண்மை! நான் இதை நகைச்சுவைக்காக கூறவில்லை. இங்கு நகைச்சுவைக்கு இடமில்லை. இது பிரசங்க பீடம். நான் அவர்கள் எப்படி உடுத்துகின்றனர் என்பதை ஒரு இரவு கூறினபோது, சில பெண்கள் என்னிடம், ''நான் குட்டை கால் சட்டை எடுப்பதில்லை, நான் நீளமான கால் சட்டையை தான் உடுத்துகிறேன்'' என்றனர். நான், “அது அதைவிட மோசமானது. புருஷரின் உடைகளைத் தரிக்கும் ஸ்திரீ தேவனுடைய பார்வைக்கு அருவருப்பானவள் என்று தேவன் கூறியுள்ளார்” என்றேன். (உபா - 22:5) அது உண்மை! அவ்வாறு உடுத்திக்கொண்டு வெளியே செல்லும் வாலிப ஸ்திரீயே, உன்னிடம் ஒன்றை நான் கூறட்டும். நியாயத்தீர்ப்பின் நாளில் விபச்சாரம் செய்த குற்றத்துக்காக நீ பதில் சொல்லியாக வேண்டும். நீ, ''நான் லீலிப் புஷ்பத்தைப் போல் தூய்மையானவள்“, எனலாம். 52 ஆம், ஆனால் இயேசு, ''ஒரு ஸ்திரீயை இச்சையோடே பார்க்கிற எவனும் தன் இருதயத்தில் அவளோடு விபச்சாரஞ் செய்தாயிற்று'' என்று கூறியுள்ளார். (மத் 5:28) நீ அந்த செயலில் ஈடுபடாமல் இருந்திருக்கலாம். ''தன் சகோதரனை நியாயமில்லாமல் கோபித்துக் கொள்பவன் அவனை ஏற்கனவே கொலை செய்து விட்டான்''. (மத். 5:22) பாருங்கள், அதை நீங்கள் செய்தாலே போதும். பாவி ஒருவன் நீங்கள் உடுத்தியுள்ள விதத்தை பின்னால் தள்ளிக் கொண்டும் முன்னால் உள்ளே சென்றும், அப்படிப்பட்ட உடையை உடுத்திக் கொண்டு நீங்கள் வெளியே செல்லும் போது - கவனியுங்கள், இது தாமஷ் அல்ல. இது சுவிசேஷம்! நீங்கள் அப்படி செய்யும் போது, பாவி ஒருவன் உங்களைக் காண்பானானால்... யாராகிலும் ஒரு பாவி உங்களைக் கண்டு இச்சித்தால், நியாயத்தீர்ப்பு நாளில் விபச்சாரம் செய்த குற்றத்துக்காக அவன் பதில் கூறும் போது, அதற்கு காரணமாயிருந்தது யார்? நீங்கள் தான். அந்த விதமாக உங்களைக் காண்பித்த காரணத்தால் நீங்கள் அதற்கு பதில் சொல்லியாக வேண்டும். 53 நீங்கள் “அவர்கள் வேறு விதமான உடைகளைத் தயாரிப்பதில்லை'' எனலாம். ஆனால் அவர்கள் தையல் மெஷின்கள் தயாரிக்கின்றனர், இப்பொழுதும் துணிகளை விற்கின்றனர். எனவே சாக்கு போக்குக்கு இடமேயில்லை! நீங்கள் தேவனுடைய வார்த்தையிலிருந்து விலகிவிட்டதால் அப்படி செய்கிறீர்கள். இது எல்லோராலும் ஏற்றுக் கொள்ளப்படக் கூடிய உபதேசமல்ல, இது கடினமானது. புகழ் வாய்ந்த போதகர் ஒருவர் அன்றொரு நாள் என்னிடம் வந்து, அவர் கைகளை என் மேல் வைத்து, “என் கைகளை உம்மேல் வைத்து பொல்லாத ஆவியைத் துரத்தப் போகின்றேன்,'' என்றார். நான், ''என்ன?“, என்றேன். அவர், “நீங்கள் பெண்களைக் குறித்து இழிவாக பேசுகிறீர்களே? ஜனங்கள் உங்களை தீர்க்கதரிசி என்று கருதுகின்றனர் என்றார். ''நான் தீர்க்கதரிசியல்ல'' என்று பதிலளித்தேன். அவர், ''சகோ. பிரன்ஹாமே, அவர்கள் அப்படி கருதுகின்றனர். ஆவிக்குரிய ஆசீர்வாதங்களைப் பெறுவது எப்படியென்று நீங்கள் பெண்களுக்கு கற்பித்துக் கொடுப்பதற்கு பதிலாக, அவர்கள் தலைமயிரைக் கத்தரித்துக் கொள்வதைக் குறித்தும், இன்னும் அது போன்ற மற்றவைகளைக் குறித்தும் சும்மா சொல்லிக் கொண்டிருக்கிறீரே. அவர்கள் அதற்கு செவி கொடுக்க மாட்டார்கள்'' என்றார். ''எனக்குத் தெரியும்'' என்றேன். அவர், ''அவர்களுக்கு இதை காட்டிலும் மேலான காரியங்களை நீர் ஏன் போதிக்கக் கூடாது?'' என்றார். நான், “அவர்களுக்கு மொழியின் முதலெழுத்துக்களே தெரியாமல் இருக்கும் போது,- சாதாரண நாணயமே என்னவென்று அறியாமலிருக்கும் போது - அவர்களுக்கு அல்ஜீப்ரா போன்ற கணிதத்தை எப்படி என்னால் கற்பிக்க முடியும்?'' என்று கேட்டேன். 54 உங்கள் ஸ்திரீகள் அப்படி நடந்துகொள்ள அனுமதிக்கும் மனிதரே, நீங்கள் கிறிஸ்தவர்கள் என்பதைக் குறித்து எனக்கு மதிப்பு இல்லை. ஆபிரகாமின் சந்ததியா இது! ஆமென்! இதை இத்துடன் விட்டுவிடுவது நல்லது. இல்லையென்றால் நீங்கள் எல்லொரும் எழுந்து வீட்டுக்குச் செல்லும்படி நான் செய்து விடுவேன். சரி. இந்நாட்களில் ஒன்றில் நீங்கள் மேலே ஒன்றைக் காணத் தவறிவிடப் போகின்றீர்கள். ''அதனால் ஒரு வித்தியாசமுமில்லை'' என்று நீங்கள் கூறலாம். ஆனால், பவுலுக்கு அது வித்தியாசத்தை உண்டு பண்ணினது. ஏதேன் தோட்டத்தில் அது தேவனுக்கு வித்தியாசத்தை உண்டு பண்ணினது. பெண்களுக்கு நீண்ட தலைமயிர் இருக்கவேண்டுமென்று வேதம் கூறுகின்றது. அதுவில்லாமல் நீங்கள் எந்நிலையில் இருக்கிறீர்கள்?''அதனால் ஒரு வித்தியாசமுமில்லை'' என்று நீங்கள் கூறலாம். ஆனால் வித்தியாசம் உண்டு, என்று வேதம் கூறுகின்றது, பிசாசு உங்களிடம் விவாதித்து ''அது நவீனமானது, அதனால் பாதகமில்லை'' என்று கூற அனுமதியாதேயுங்கள். அதனால் பாதகமுண்டு. நீங்கள் “இதை நான் முன்பு அறிந்திருக்கவில்லை'' எனலாம். இப்பொழுது அதை அறிந்து கொண்டீர்கள். பாருங்கள்? நீங்கள் ஆராய்ந்து பார்த்து அது சரியாவென்று அறிந்து கொள்ளுங்கள், இதை இத்துடன் விட்டுவிடுகிறேன், பாருங்கள். சரி. 55 ஆதியாகமம்:13, நவீனம், உ, ஊ! குமாரன் முன்பிருந்த இடத்துக்கு செல்லுதல், இப்பொழுதுள்ள இடத்துக்கு அல்ல. லோத்தின் மனைவி எவ்வாறு சமுதாயத்தில் நுழைந்தாள் என்பதை கற்பனை செய்து பார்க்கிறேன். நாமும் கூட அப்படித்தான் சமுதாயத்தில் நுழைந்துவிட்டோம். பெந்தெகொஸ்தேயினராகிய நாம் அப்படித்தான் நுழைந்துவிட்டோம். நாம் இங்கு ஒரு சிறு ஸ்தாபனம் ஏற்படுத்திக் கொண்டு, ஒன்றுக்கு விரோதமாய் மற்றொன்று செயல்பட்டு, அவர்கள்... நீங்கள் எதையுமே ஏற்றுக் கொண்டீர்கள். அது முற்றிலும் உண்மை. 56 இஸ்ரவேல் ஜனங்கள் தங்களுக்கு ஒரு ராஜா வேண்டுமென்று கேட்டுக்கொண்ட போது - சவுலைத் தங்கள் மேல் ராஜாவாக நியமிக்க வேண்டுமென்று கேட்டுக்கொண்டபோது - சாமுவேல் என்ன கூறினான்? சாமுவேல் அவர்களிடம் வந்து, ''நான் எப்பொழுதாகிலும் என் ஜீவனத்துக்காக உங்கள் பணத்தை எடுத்துக் கொண்டேனா? கர்த்தருடைய நாமத்தில் நான் கூறின ஏதாகிலும் இதுவரை நிறைவேறாமல் போனதுண்டா?'' என்று கேட்டான். அவர்கள், “ஓ, நீர் தேவனுடைய தீர்க்கதரிசி என்பது உறுதி. நீங்கள் எங்களுக்கு உண்மையே கூறி வந்தீர். நீர் கூறின யாவும் நிறைவேறினது. இருந்தாலும், எங்களுக்கு ஒரு ராஜா வேண்டும்'' என்றனர். நீங்கள் சத்தியத்துக்கு உங்கள் வாசலை அடைத்து இதை, அதை உள்ளே வர அனுமதித்து, அவை உள்ளே நுழைந்த போது, நீங்கள் நவீனமாகிவிட்டீர்கள். இன்று சபையானது மற்றவர்களைப் போலவே உள்ளது. நமக்குத் தேவை பெந்தெகொஸ்தே, வீடு சுத்திகரிப்பு அது முற்றிலும் உண்மை. ஆமென். ஒரு பாப்டிஸ்டு இதை உங்களிடம் கூற வேண்டியுள்ளது அவமானமே, இல்லையா? ஆனால் அது உண்மை, நான் வேதத்தை விசுவாசிக்கிறேன், தேவனுடைய வார்த்தை உண்மையென்று விசுவாசிக்கிறேன். சரி. 57 ஆபிரகாம், பிறகு ஆபிரகாம்... 13-ம் அதிகாரம் 14-ம் வசனத்தில், லோத்து அவனை விட்டுப் பிரிந்து சென்று, ஆபிரகாம் தேவனுக்கு முற்றிலுமாக கீழ்ப்படிந்தபோது, தேவன் அவனிடம் வந்தார். இப்பொழுது தேவன் அவனை ஆசீர்வதிக்க ஆயத்தமாயுள்ளார். அவ்வாறே பெந்தெகொஸ்தே சபை தனது கோட்பாடுகள், கொள்கைகள் அனைத்தையும், உலகத்தைப் போல் நடந்து கொண்டு, காண்பதற்கு உலகத்தைப் போல் உள்ளதையும், உலகத்தைப் போல் பேசுவதையும், புதன் இரவு ஜெபகூட்டத்துக்கு வருவதற்கு பதிலாக வீட்டில் தங்கி நாங்கள் சுசியை நேசிக்கிறோம் (We love Susie) என்னும் தொலைகாட்சி நிகழ்ச்சி காண்பதையும், வானொலி நிகழ்ச்சியில் நீங்கள் நிற்கும் சத்தியத்தை ஏளனம் செய்யும் போதகருக்கு உங்கள் தசம பாகத்தை அனுப்புவதும், பெந்தெகொஸ்தே என்னும் பெயரால் செய்யப்படும் இவையனைத்தையும் விட்டு விலகினாலொழிய! இது அவமானம். 58 நான் உலகெங்கிலுமுள்ள கிறிஸ்தவ வர்த்தகர் குழுக்களில் பிரசங்கம் செய்கிறேன். அவர்களில் அநேகர் இப்பொழுது இங்கு அமர்ந்துள்ளனர். ஒரு ஆண்டுக்கு முன்பு நான் ஜமய்க்காவுக்கு சென்றிருந்தேன். ஒரு இரவு அந்த தீவிலுள்ள பெரிய மனிதர் அனைவரும் அங்கு வந்திருந்தனர். இந்த பெந்தெகொஸ்தே ஜனங்கள் எழுந்து நின்று, “தேவனுக்கு மகிமை! நான் மூலையில் ஒரு சிறு வர்த்தகனாக இருந்தேன். அல்லேலுயா, இப்பொழுது நான் நான்கு 'காடிலாக்' கார்களை வைத்திருக்கிறேன், தேவனுக்கு மகிமை!'' என்று சாட்சி பகர்ந்தனர். அன்றிரவு நான் ஃபிளமிங்கோ விடுதிக்கு மீண்டும் சென்றேன். அங்கு நான் நின்று கொண்டு, “உங்களைக் குறித்து நான் வெட்கப்படுகிறேன். கிறிஸ்துவின் பிரதிநிதிகளாகிய நீங்கள் ஒரு வர்த்தகரிடம், உங்களிடம் எவ்வளவு உள்ளதென்று கூற முயல்கின்றீர்கள். உங்களிடம் உள்ளதைக் காட்டிலும் அல்லது இனி இருக்கப்போவதைக் காட்டிலும் அவரிடம் அதிகம் உள்ளது என்றேன். முதலாம் பெந்தெகொஸ்தேயினர் தங்களுக்கிருந்த எல்லாவற்றையும் விற்று ஏழைகளுக்குப் பகிர்ந்து கொடுத்துவிட்டு, சென்று சுவிஷேத்தைப் பிரசங்கித்தனர். உண்மை. 59 சிக்காகோவிலுள்ள ஒரு ஸ்வீடன் நாட்டு பாடகர்; அவருடைய பெயரை நான் கூறப்போவதில்லை. அவர் என் விலையேறப்பெற்ற சகோதரன். அவர் எழுந்து நின்று, “சகோ. பிரன்ஹாமே, நீர் தீர்க்கதரிசியென்று நாங்கள் விசுவாசிக்கிறோம். ஆனால் இப்பொழுது உம்மிடம் நீர் தவறு என்று கூறப் போகின்றேன்'' என்றார். நான், “சகோதரனே, எங்கு தவறென்று என்னிடம் கூறும் ”என்றேன். அவர், “நல்லது, அந்த மக்கள் தங்களுக்குண்டான எல்லாவற்றையும் விற்று அப்போஸ்தலருடைய பாதங்களில் வைத்து, அதைப் பகிர்ந்து கொடுத்தனர். அதுவே அவர்கள் செய்த மிக மோசமான செயல்'' என்றார். நான், “பரிசுத்த ஆவியானவர் தவறான செயலைப் புரிகிறார் என்றா நீங்கள் என்னிடம் கூறுகின்றீர்கள்?'' என்றேன். அவர், “அது தவறு. அதை உங்களுக்கு நான் நிரூபிப்பேன்” என்றார். நான், “ஏன்” என்றேன். அவர், ''அவர்களுக்கு துன்புறுத்தல் அதிகமானபோது போக இடமின்றி எல்லாவிடங்களிலும் அலைந்து திரிந்தனர்“ என்றார். நான், “அது முற்றிலுமாக தேவனுடைய சித்தத்தில் அமைந்திருந்தது. அவர்கள் சென்றவிடமெல்லாம் சுவிஷேத்தைப் பிரசங்கித்தனர், அவர்கள் திரும்பி வர இடமில்லை'' என்றேன். தேவன் தவறு செய்வதில்லை, உண்மை! ஓ, அது என்ன வித்தியாசம்; அது தான் பெந்தெகொஸ்தேவாக இருந்தது, அதுவே இப்பொழுதுள்ள பெந்தெகொஸ்தேவும். ஆம், அதுதான் அது. 60 ஆபிரகாம் லோத்தை விட்டுப் பிரிந்து விட்டபிறகு; அதைத் தான் தேவன் அவனிடம் செய்யக் கூறினார். ''நம்மைச் சுற்றி நெருங்கி நிற்கிற பாவத்திலிருந்து பிரிந்து, எல்லாவற்றையும் எடுத்துப்போடுதல். அப்பொழுது தேவன் ''ஆபிரகாமே, இப்பொழுது நீ எல்லாவற்றிற்கும் சுதந்தரவாளி. கிழக்கே பார், மேற்கே பார், வடக்கே பார், தெற்கே பார். தேசத்தின் வழியாக நடந்து போ. அதெல்லாம் உனக்கே'' என்றார். ஆமென். நீங்கள் பாவத்தினின்று, அவிசுவாசத்தினின்று பிரிந்து வாருங்கள். ஒரே ஒரு பாவம் தான் உண்டு, அது தான் அவிசுவாசம். விபச்சாரம் செய்வது பாவமல்ல, மது அருந்துவது பாவமல்ல. இவையாவும் அவிசுவாசத்தின் தன்மைகள். நீங்கள் விசுவாசத்திருந்தால், இவைகளைச் செய்திருக்க மாட்டீர்கள். நிச்சயமாக. இயேசு, ''என் வசனத்தைக் கேட்டு, என்னை அனுப்பினவரை விசுவாசிக்கிறவனுக்கு நித்திய ஜீவன் உண்டு'' என்று யோவான் 5:24 ல் கூறியுள்ளார், அந்த 'சோ' (Zoe), பரிசுத்த ஆவி, ஏனெனில் அவன் விசுவாசித்தான். சரியாக. நீங்கள் அதைப் பெற்றுக் கொள்ளும் வரைக்கும், நீங்கள் பாவனை விசுவாசியே. நீங்கள் அந்த கூட்டத்தைச் சேர்ந்தவர்கள். ஆனால் அவர்கள் உண்மையாக விசுவாசித்து தங்களை பிரித்துக் கொள்ளும் போது; நீங்கள் உங்கள் எல்லா அவிசுவாசத்தினின்றும் உங்களை பிரித்துக்கொண்டு, தேவனை விசுவாசித்து நேர்மையாக நடந்து, அவருடைய கட்டளைகளைக் கைக்கொண்டு, சரியான எல்லாவற்றையும் செய்து வருவீர்களானால், அப்பொழுது தேவன், “வேத புத்தகத்திலுள்ள ஒவ்வொரு வாக்குத்தத்தமும் உங்களுடையதே'' என்பார். ஆமென், அவையனைத்தும் உங்களுடையதே. நீங்கள் ஆதியாகமத்திலிருந்து வெளிப்படுத்தின விசேஷம் முடிய வேதபுத்தகத்தை திருப்புங்கள். அவையனைத்தும் உங்களுடையதே. ஆமென். ''நீங்கள் என்னிலும் என் வார்த்தைகள் உங்களிலும் நிலைத்திருந்தால், நீங்கள் கேட்டுக்கொள்வதெதுவோ, அது உங்களுக்குச் செய்யப்படும்'' (யோவான் 15:7) என்ன? நீங்கள் முதலாவதாக உங்களை உங்கள் அவிசுவாசத்தினின்று பிரித்துக் கொள்ள வேண்டும். 61 நீங்கள், “சகோ. பிரன்ஹாமே, நீங்கள் அதை மிகவும் நெருக்கமாக்குகின்றீர்கள்?” எனலாம். இயேசு, “நோவாவின் நாட்களில் எட்டு பேர் மாத்திரமே இரட்சிக்கப்பட்டனர். நோவாவின் நாட்களில் நடந்தது போல, மனுஷகுமாரன் வரும் காலத்திலும் நடக்கும்'' என்றார். “அப்படியானால் எத்தனை பேர், சகோ. பிரன்ஹாமே?'' அது எட்டாயிரமாக இருக்கலாம், எண்பது லட்சமாக இருக்கலாம். அது என்னவென்று எனக்குத் தெரியாது. ஆனால் அது சிறுபான்மையினராக இருக்கும் -லட்சத்தில் ஒருவர் என்பது போன்று, என்று நான் கூறமுடியும். சரி. 62 மறுபிறப்பின் அனுபவம் பெறாமல், மனோதத்துவ விசுவாசம், சிந்தையிலெழுந்த விசுவாசம், உணர்ச்சிவசப்படுதல், மத சம்பந்தமான கோட்பாடுகள் உண்மையான பரிசுத்த ஆவி அங்கு இருக்குமானால், அது வார்த்தையை ஆமோதிக்கும். அந்த வார்த்தையும், அது எப்படி ஜீவிக்கும் என்று கூறப்பட்டுள்ளதோ, அவ்வாறே ஜீவிக்கும். ஏனெனில் அதை உரைத்த அதே ஆவி இப்பொழுது உங்கள் மூலமாக உரைக்கிறார், எனவே அது ஜீவிக்க வேண்டும், நிச்சயமாக, அது ஜீவிக்க வேண்டும். பேசுகிறது நீங்கள் அல்ல, உங்களில் வாசமாயிருக்கிற பிதாவானவரே பேசுகின்றார். சரி. 63 ஆபிரகாம், சர்வத்துக்கும் சுதந்தரவாளி. உங்களைப் போல் நான் பரிசுத்த ஆவியில் நிரப்பப்பட்ட போது, நான் நடந்து செல்ல ஆவல் கொண்டேன். உதாரணமாக, ஒரு பெரிய கடையிலுள்ள எல்லாமே எனக்கு சொந்தமானது, அதிலுள்ள அனைத்துக்கும் நான் சுதந்தரவாளியாகும்போது, எனக்கு என்ன உள்ளது என்று அறிய ஆவல் கொள்வேன். அது போன்று நான் கிறிஸ்தவனான போது, எனக்கு என்னவெல்லாம் சொந்தமாயிற்று என்று நான் அறிய விரும்பினேன். எனவே கடைக்கே நான் சொந்தமாகும் போது, நான் அங்கு சென்று, எல்லாவற்றையும் திறந்து பார்த்து, என்ன உள்ளது என்று காண்பேன். நான் இங்கு பார்ப்பேன், அங்கு பார்ப்பேன். ஏதோ ஒன்று உயரத்தில் இருந்தால், நான் ஏணியைப் போட்டு அதன் மேலேறி, அது என்னவென்று காண்பேன். ஏதாவதொன்று எனக்கு எட்டாத உயரத்தில் இருக்குமானால், நான் அதற்கு எழும்பும் வரைக்கும் முழங்காலில் நின்று ஜெபம் செய்வேன். அது எனக்கு சொந்தம்! தேவன் அதை வாக்குதத்தம் செய்துள்ளார் - தெய்வீக சுகம் பெறுதல், தேவனுடைய வல்லமை, இந்த அற்புதங்கள், அடையாளங்கள் அனைத்தும் அவர் வாக்களித்துள்ளார். ''சகோ. பிரன்ஹாமே, இவை எப்படி கிரியை செய்கின்றன?'' என்று கேட்கலாம், தேவனுடைய வாக்குத்தத்தினால். ஆமென். ஆபிரகாமின் சந்ததி மகிமை! எனக்கு நல்லுணர்வு தோன்றுகின்றது. நான் பைத்தியக்காரனைப் போல் காணலாம், பைத்தியக்காரனைப் போல் நடந்து கொள்ளலாம், என்னை தனியே விட்டுவிடுங்கள். மற்ற வழியைக் காட்டிலும் இந்த வழி எனக்கு நல்லதாக தோன்றுகின்றது. பாருங்கள்?. 64 14-ம் அதிகாரம். நாம் ஆபிரகாமுக்கு செல்கின்றோம். 14-ம் அதிகாரத்தில் என்ன நடந்ததென்று நாம் காண்கிறோம், ராஜாக்கள் தேசத்தின் பல்வேறு பாகங்களிலிருந்தும் வந்து, சோதோமின் ராஜாவின் மேல் படையெடுத்து, சோதோமைக் கைப்பற்றி லோத்தை கொண்டு சென்றனர். கர்த்தருக்குள் ஆபிரகாமின் சகோதரன், அவனுடைய வெது வெதுப்பான ஸ்தாபன சகோதரன், கொண்டு செல்லப்பட்டான். தேவன் அப்பொழுதுதான் ஆபிகாமிடம், தேசத்திலுள்ள அனைத்தும் அவனுடையது என்று கூறியிருந்தார் என்பதை ஞாபகம் கொள்ளுங்கள். “சாந்த குணமுள்ளவர்கள் பூமியைக் சுதந்தரித்துக் கொள்வார்கள்''. நமக்கென்ன பைத்தியம் என்று கூறுகிறீர்களா? பூமியைச் சுதந்தரித்துக் கொள்வதா, பூமியில் என்ன உள்ளது? நிச்சயமாக நாம் அதை சுதந்தரிக்கப் போகின்றோம். சாத்தானைப் பாருங்கள். அவன் இயேசுவிடம், ''நீர் என்னைத் தாழ விழுந்து பணிந்து கொண்டால், இந்த உலகத்தை உமக்குத் தருவேன் என்றான். ராஜ்யங்கள் அனைத்துமே பிசாசின் ஆதிக்கத்தில் உள்ளன - அவை ஒவ்வொன்றும். அவ்வாறு இயேசு கூறினார். வேதம் அதை உரைத்துள்ளது. ஒவ்வொரு தேசமும் ஒவ்வொரு ராஜ்யமும் பிசாசின் ஆதிக்கத்தில் உள்ளது. சாத்தான், “இவையனைத்தும் எனக்குச் சொந்தம். நீர் என்னைப் பணிந்து கொண்டால், இவைகளை உமக்குத் தருவேன்'' என்றான். ஆயிரவருட அரசாட்சியில் இவையனைத்துக்கும் தாம் சுதந்தரவாளியாவார் என்று இயேசு அறிந்திருந்தார். எனவே அவர், ''அப்பாலே போ சாத்தானே'' என்றார். அவர் சுதந்தரவாளி என்பதை அறிந்திருந்தார். 65 இன்றைக்கு பைத்தியக்கார ஜனங்கள் கர்த்தரை வழிபடுகின்றனர் என்று ஜனங்கள் கூறி, மறுபிறப்பு அடைவதைக் குறித்து இழிவாக பேசுகின்றனர். 'மறுபடியும் பிறத்தல்' என்பதைக் குறித்து அவர்கள் பயப்படுகின்றனர். அந்த கருத்தே அவர்களுக்குப் பிடிக்கவில்லை, அதற்குப் பதிலாக அவர்கள் வேறெதையெல்லாமோ ஏற்றுக் கொண்டுள்ளனர். அவைகளில் ஒன்று கைகுலுக்குதல், மற்றொன்று சிறிது தண்ணீர் தெளித்தல், மற்றொன்று நாவை வெளியே நீட்டி ரொட்டித் துண்டைப் பெற்றுக் கொள்ளுதல், மற்றொன்று தரையில் சுற்றி நடனமாடுதல். அது ஒரு பிறப்பு! நான் அன்றிரவு கூறினது போன்று, ''பிறப்பு என்பது அசுத்தமான நிலையே (mess). அது எங்கு நடந்தாலும், எனக்குக் கவலையில்லை. அது பன்றித் தொழுவத்திலோ அல்லது மருத்துவமனை அறையிலோ, எங்கு நடந்தாலும், அது பிறப்புதான், அது அசுத்தம் புது பிறப்பும் அவ்வாறேயுள்ளது. அது உங்களை கிழித்துப் போடுகின்றது. ஆனால் அந்த அசுத்தத்திலிருந்து புது ஜீவன் தோன்றுகிறது. ஆமென். ஆம். 66 ஆபிரகாம் எல்லாமே தனக்கு சொந்தம் என்பதை அறிந்திருந்தான். எனவே லோத்து கொண்டு செல்லப்பட்டான் என்று அவன் கேள்விப்பட்டபோது, “ஒரு நிமிடம் பொறுங்கள்” என்றான். லோத்து சத்துருவின் கொடூரமான கரங்களால் சிறைபிடித்து கொண்டு செல்லப்பட்டான். ஆபிரகாம், ''அவன் என் சகோதரன், அவனைப் பின் தொடர்வேன்'' என்றான். ஞாபகம் கொள்ளுங்கள், அங்கு ஏழு அல்லது எட்டு ராஜாக்கள் ஒன்று சேர்ந்து படையெடுத்து, எல்லாவற்றையும் துடைத்தெடுத்துக் கொண்டு சென்றுவிட்டனர். அவர்கள் சென்ற பிறகு, ஆபிரகாம் தன் வேலையாட்களை கூட்டிக்கொண்டு, இழந்து போன தன் சகோதரனை மீட்டுக்கொண்டு வர, அவனைப் பின் தொடர்ந்தான். அவன் தான் உண்மையான கிறிஸ்தவன் - இழந்து போன தன் சகோதரனின் பின்னால் செல்பவன் அவனைக் கண்டுபிடித்த போது அவன் என்ன செய்தான்? அவன் ராஜாக்களை சங்கரித்து, யுத்தத்துக்குப் பிறகு, தன் சகோதரனை கூட்டிக் கொண்டு திரும்பி வந்தான். 67 கவனியுங்கள், அவன் திரும்பி வரும் போது, அவனைச் சந்திக்க ஒரு ராஜா புறப்பட்டு வந்தான் - மெல்கிசேதேக். இவன் தகப்பனும் தாயும் இல்லாதவன். இவன் பிறக்கவுமில்லை, இவன் மரிக்கப் போவதுமில்லை. இவன் நாட்களின் துவக்கமும் ஜீவனின் முடிவுமில்லாதவன். அவன் பிறக்கவும், அவன் மரிக்கவுமில்லை, தகப்பனும் இல்லை, தாயும் இல்லை. (அது தேவனுடைய குமாரன் அல்ல. ஏனெனில் அவருக்குத் தகப்பனும் தாயும் இருந்தனர். அவர் பிறந்து, மரித்து, பின்பு உயிரோடெழுந்தார்). இந்த மனிதனுக்கோ தகப்பனும் தாயும் இல்லை. அது தேவன்! நிச்சயமாக. அவர் ஒருவர் மாத்திரமே நித்தியமானவராயிருக்கிறார். யுத்தம் முடிந்த பிறகு அவர் ஆபிரகாமைச் சந்தித்தார். அது ஆபிரகாமின் சந்ததிக்கு எதைக் காண்பிக்கிறதென்றால், நாமும் விழுந்து போன நமது சகோதரனின் பின்னால் சென்று, யுத்தம் முடிந்த பிறகு... மெல்கிசேதேக்கு ஆபிரகாமுக்கு கொடுத்தது என்ன? திராட்சரசமும், அப்பமும், இராப்போஜனம். ஆமென். யுத்தம் முடிந்தவுடனே, சகோதரனே! அவன் இழந்து போன சகோதரனைக் கூட்டிக் கொண்டு திரும்பி வருகிறான், அவனை மீண்டும் அந்த இடத்திற்கு திரும்பக் கொண்டு வருகிறான். யுத்தம் முடிந்தவுடனே, மெல்கிசேதேக்கு ஆபிரகாமைச் சந்தித்து இராப்போஜனம் கொடுப்பதைக் காண்கிறோம். இயேசு, ''இது முதல் இந்த திராட்சரசத்தை நவமானதாய் உங்களோடே கூட என் பிதாவின் ராஜ்யத்திலே நான் பானம்பண்ணும் நாள் வரைக்கும் இதைப் பானம் பண்ணுவதில்லை, புசிப்பதுமில்லை'' என்று கூறினார். (மத் 26:29) ஆம், ஐயா. இப்பொழுது யுத்தம் முடிந்துவிட்டது, ஆபிரகாம் திரும்பி வந்துவிட்டான். 14-ம் அதிகாரம்; வெற்றியடைந்தவர் அவனைச் சந்திக்கிறார். 68 இப்பொழுது ஆதியாகமம்: 15, நாம் முடிவுக்கு முன்பாக. இது முடிக்கவேண்டிய நேரம். நாம் போவதற்கு முன்பு இன்னும் ஒரு காரியத்தைக் கவனியுங்கள். இதை நான் மறுபடியும் நாளை இரவு எடுத்துக் கொள்ள வேண்டும். ஏனெனில் நான் இன்னும் யேகோவா -யீரே என்னும் என் பொருளுக்கே வரவில்லை. கர்த்தருக்கு சித்தமானால், நாளை அதைக் குறித்து பேச விரும்புகிறேன். இப்பொழுது 15-ம் அதிகாரத்தில், ஆபிரகாமுக்கு உடன்படிக்கை உறுதிப்படுத்தப்பட்டதாக இங்கு காண்கிறேன் - உடன்படிக்கை உறுதிப்படுதல். வேறு விதமாகக் கூறினால், தேவன் ஆபிரகாமுக்கு ஆணையிட்டுக் கொடுத்ததை உறுதிப்படுத்துகிறார். 15-ம் அதிகாரத்தில் தேவன் கொடுத்த அந்த ஆணை உறுதிப்படுவதை நாம் காண்கிறோம். ஆபிரகாம் தேவனிடம், ''தமஸ்கு ஊரானாகிய இந்த எலியேசர் இப்பொழுதும் எனக்குச் சுதந்தரவாளியாய் இருக்கிறான்“ என்றான். தேவன் ஆபிரகாமை நோக்கி, “இவன் உனக்குச் சுதந்திரவாளியல்ல, உன் கர்ப்பப் பிறப்பாயிருப்பவனே உனக்குச் சுதந்திரவாளியாவான்'' என்றார். “இதை நான் எப்படி அறிவேன்?'' 69 ஓ, இப்பொழுது சகோதரரே, உங்களை உறக்கத்தினின்று எழச் செய்ய இதோ ஒன்று அவரைக் கவனியுங்கள். அவர், ''மூன்று வயதுக் கிடாரியையும், மூன்று வயது வெள்ளாட்டையும், மூன்று வயது ஆட்டுக்கடாவையும், ஒரு காட்டுப்புறாவையும், ஒரு புறாக் குஞ்சையும் என்னிடத்தில் கொண்டு வா“ என்றார். ஆபிரகாம் அவைகளைக் கொண்டு வந்தான். இப்பொழுது காட்டுப் புறாவும் புறாக் குஞ்சும் எடுத்துக் காட்டாய் உள்ளன; அல்லாமலும் மூன்று வயதுடைய மிருகங்கள் மூன்று இருந்தன. அவர் உடன்படிக்கையை உறுதிப்படுத்தப் போகின்றார். இப்பொழுது கூர்ந்து கவனியுங்கள், இதை காணத்தவற வேண்டாம். கர்த்தருக்கு சித்தமானால், நாளை இரவு அவர் அவனை இங்கு சந்தித்ததை மறுபடியும் எடுத்துக்கொண்டு பேசுவோம். கவனியுங்கள். அவர், ''மூன்று வயதுக் கிடாரியையும், மூன்று வயது வெள்ளாட்டையும், மூன்று வயது ஆட்டுக்கடாவையும், ஒரு காட்டுப் புறாவையும், ஒரு புறாக்குஞ்சையும் என்னிடத்தில் கொண்டு வா“ என்றார். ஆபிரகாம் சென்று அந்த மிருங்களைக் கொண்டுவந்து, அவைகளை நடுவாகத் துண்டித்து, துண்டங்களை ஒன்றுக்கொன்று கிடத்தினான். ஆனால் காட்டுப்புறாவையும் புறாக்குஞ்சையும் அவன் துண்டிக்கவில்லை. காட்டுப்புறாவும் புறாக்குஞ்சுவும் ஒரே இனத்தைச் சேர்ந்தவை. அது தெய்வீக சுகமளித்தலுக்கு எடுத்துக் காட்டாய் உள்ளது. இரண்டு உடன்படிக்கைகளிலும் விசுவாசத்தின் மூலமே அவர்கள் சுகம் பெறுகின்றனர் - ஒன்றிலிருந்து மற்றொன்று. பழைய உடன்படிக்கையிலேயே தெய்வீக சுகமளித்தல் அடங்கியிருக்குமானால், இந்த ஒன்று அதைக் காட்டிலும் எவ்வளவு அதிகமாக அதை பெற்றிருக்க வேண்டும்? பாருங்கள், பழைய பலியிலேயே சுகமளித்தல் இருக்குமானால், அதை விட மேலான இந்த ஒன்றைக் குறித்தென்ன பாருங்கள்?. 70 அவன் இங்கு என்ன செய்தான் என்பதைக் கவனியுங்கள். அவன் இந்த மூன்று மிருகங்களையும் எடுத்து அவைகளைத் துண்டங்களாக்கி, ஒவ்வொரு துண்டாகக் கிடத்தினான். அதன் பிறகு ஆபிரகாம் சென்றுவிட்டான். அது பலி. சூரியன் அஸ்தமிக்கும் வரைக்கும் அவன் கவனித்துக் கொண்டிருந்தான். ஆபிரகாம் படைத்த பலியின் மேல் ஆகாயத்து பறவைகள் -பருந்துகள் - இறங்கின. அவைகளை ஆபிரகாம் துரத்தினான், 'ஷ்' என்று துரத்தினான். இது எதற்கு முன்னடையாளமாயுள்ளது? கடைசி நாளில் ஆபிரகாமின் சந்ததி பலியிலிருந்து பிசாசுகளை துரத்துவதற்கு இது முன்னடையாளமாயுள்ளது. தேவன் பலியை -நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராயிருக்கிற கிறிஸ்துவை - நமக்கு வாக்குத்தத்தம் செய்தார். அவிசுவாசிக்கும் ஆவிகள் அனைத்தும் அதை விழுங்கப் பார்க்கின்றன. தேவனுடைய மனிதன், ஆபிரகாமின் சந்ததி, அங்கு நின்று கொண்டு, பிசாசுகளை அதை விட்டு துரத்திக் கொண்டிருக்கிறார். இப்பொழுது உடன்படிக்கையை உறுதிப்படுத்தி ஆபிரகாமின் சந்ததிக்கு காண்பித்தல்... நான் விசுவாசமுள்ள ராஜரீக சந்ததியைக் குறிப்பிடுகின்றேன். ஞாபகம் கொள்ளுங்கள், மாம்சப் பிரகாரமான சந்ததி கிருபையின் வார்த்தைக்குப் பதிலாக நியாயப் பிரமாணத்தை ஏற்றுக் கொண்டு தோல்வியடைந்தது. அதுபோன்றே, இந்தக் கடைசி நாளிலும் புறஜாதியார் தோல்வியடைந்தனர். ஆனால் வார்த்தையை ஏற்றுக் கொண்டு, அதற்கு உண்மையாயிருந்து, பிசாசுகளைத் துரத்தி, மகத்தான அற்புதங்களையும் அடையாளங்களையும் நடப்பித்து, வார்த்தையிலிருந்து எல்லா அவிசுவாசத்தையும் அகற்றி, பலியைச் சுத்தமாக வைத்து, வார்த்தையை பரிசுத்தமாக வைத்து, அதை பயபக்தியோடு கைக்கொண்டு, அதனுடன் எதையும் சேர்க்காமல், எதையும் கூட்டாமல், அப்படிப்பட்டவைகளை அப்புறப்படுத்தி, எதுவும் அதை தொடாமல் காவல் காக்கும் ராஜரீக சந்ததி வார்த்தையோடு இருக்கின்ற ராஜரீக சந்ததி ஒன்றுன்டு. 71 இப்பொழுது கவனியுங்கள், ஆபிரகாமுக்கு அயர்ந்த நித்திரை வந்தது - மரணம். அந்த அயர்ந்த நித்திரைக்கு பிறகு அவன் அக்கினிச் சூளையைக் கண்டான். அது நரகம். அது புகைந்து கொண்டிருக்கிறது. ஒவ்வொரு பாவியும் அங்கு செல்ல வேண்டியவனாயிருக்கிறான். ஆனால் அதற்கு முன்னால் ஒரு சிறு வெள்ளை ஜூவாலை சென்றது. அந்த வெள்ளை ஜூவாலையைக் கவனியுங்கள். அது பலியாக வைக்கப்பட்டுள்ள துண்டங்களின் நடுவே கடந்து சென்றது. ஆபிரகாமின் சந்ததி மூலம் தேவன் என்ன செய்யப் போகின்றார் என்பதை உறுதிப்படுத்துகின்றார். தேவன் ஒருவரே என்று யூதர்கள் எக்காலத்தும் நம்பி வந்தனர். தேவன் ஒருவரே. ஆனால் தேவன் இந்த மூன்று சுத்தமான பலிகளின் மூலம், தேவனுடைய திரித்துவம் தேவத்துவத்தின் பரிபூரணமாக சரீரப் பிரகாரமாக ஒருவரில் காணப்படும் என்பதை தெரியப்படுத்துகிறார். 72 இப்பொழுது கவனியுங்கள், பண்டைய காலத்தில், கிழகத்திய நாடுகளில் ஒரு உடன்படிக்கை செய்யும் போது, அவர்கள் இப்படித்தான் செய்வது வழக்கம். அவர்கள் ஒரு மிருகத்தைக் கொன்று அதை இரண்டாக துண்டிப்பார்கள். உடன்படிக்கை செய்து கொள்பவர்கள் துண்டங்களின் நடுவே நின்று உடன்படிக்கையை எழுதுவார்கள். சீனாவில்... ஜப்பானில் உடன்படிக்கை செய்து கொள்ளும் போது, அவர்கள் உப்பை கையிலெடுத்துக்கொண்டு நின்று ஆணையிட்டு, அதை ஒருவர் மேல் ஒருவர் எறிவார்கள். உப்பை எறிந்துதான் அவர்கள் ஜப்பானில் உடன்படிக்கை செய்து கொள்வது வழக்கம். உப்பு சார மேற்றும் பொருள், பாருங்கள். அவர்கள் ஒருவர் மேல் ஒருவர் உப்பை எறிவார்கள், அது தான் உடன்படிக்கை. அமெரிக்காவில் நாம் உடன்படிக்கை செய்யும் முறையாதெனில், நாம் வெளியே உணவு விடுதிக்குச் சென்று, உணவு அருந்தி விட்டு, கை குலுக்கி, ''உங்கள் கையை கொடுங்கள். அது ஒத்துக் கொள்ளப்பட்டு விட்டதா?'' என்று கேட்க மற்றவர், ''அது ஒத்துக் கொள்ளப்பட்டுவிட்டது'' என்கிறார். அது உடன்படிக்கை. 73 ஆனால் பண்டைய காலங்களில், ஆபிரகாமின் காலத்தில், அவர்கள் உடன்படிக்கை செய்து கொள்ளும் முறை என்னவெனில், அவர்கள் ஒரு பலியைக் கொன்று அதன் நடுவே நிற்பார்கள். பிறகு அந்த உடன்படிக்கையை அவர்கள் ஆட்டுக் குட்டியின் தோலில் எழுதி, அதை கிழிப்பார்கள் (சகோ. பிரன்ஹாம் உதாரணப்படுத்த ஒரு காகிதத்தை கிழிக்கிறார் - ஆசி). ஒருவர் ஒரு துண்டையும், மற்றவர் மற்ற துண்டையும் எடுத்துச் செல்வார். இந்த உடன்படிக்கை உறுதிப்படுத்தப்பட்டு, இவ்விரு துண்டுகளும் ஒன்றாக இணைக்கப்படும் போது, யாரும் அதை பாவனை செய்ய முடியாது. பாருங்கள், அவையிரண்டும் அது எழுதப்பட்ட விதமாகவே, எழுத்துக்கு எழுத்து புறாவின் சிறகுகள் போல ஒன்றாக இணைய வேண்டும். இந்த துண்டின் நியாயமான உரிமையாளருக்கு ஒரு பாகம் உண்டென்றும், அது அதே உடன்படிக்கையென்றும், இவையிரண்டும் அதே விதமாக ஒன்றாக இணைய வேண்டுமென்றும் அது காண்பிக்கிறது. 74 அங்கு தேவன் ஆபிரகாமுக்கு, அவனுடைய சந்ததியில் தேவனே மாம்சத்தில் வெளிப்பட்டு கல்வாரியில் துண்டிக்கப்படுவார் என்பதைக் காண்பித்துக் கொண்டிருந்தார். கிறிஸ்து பூமியில் தேவனாயிருந்து துண்டிக்கப்பட்டார். தேவன் ஆபிரகாமின் ராஜரீக சந்ததியாகிய அவரை இரண்டாக கிழித்து, அவருடைய ஜீவனை அவரிலிருந்து எடுத்துக்கொண்டார். பிறகு அவர் அந்த சரீரத்தை உயிரோடெழுப்பி, பரலோகத்தில் சிங்காசனத்தில் உட்காரவைத்து, அவருடைய ஆவியை சபைக்குத் திரும்பவும் அனுப்பி, சபை கிறிஸ்துவிலிருந்த அதே ஆவியை பெற்றுக்கொண்டு, ஒன்றாக இணையும்படி செய்து, கிறிஸ்துவை நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராகச் செய்து, உடன்படிக்கையை உறுதிப்படுத்தினார். தேவன் உடன்படிக்கையை உறுதிப்படுத்துதல். தேவன் தம்முடைய குமாரனாகிய கிறிஸ்துவிலிருந்து ஜீவனை கிழித்தெடுத்து, அவரிலிருந்து ஆவியை எடுத்துக் கொண்டார் -அவர் மிருகங்களை இரண்டாக துண்டித்து அவைகளின் நடுவில் நிற்பது போல் ஜூவாலையாகிய தேவன் தாமே அவைகளின் நடுவே சென்று, அவர் சரீரத்தை - ராஜரீக சந்ததியை - பிரித்தெடுத்தார் என்பதைக் காண்பித்தார். அவர் ஆவியை எடுத்து சபையின் மேல் மறுபடியும் அனுப்பினார். கிறிஸ்துவை சந்திப்பதற்காக செல்லப்போகும் இன்றைய சபை அவர் பெற்றிருந்த ஆவியை உடையதாயிருக்க வேண்டும். ஏனெனில் அது எழுத்துக்கு எழுத்து, வார்த்தைக்கு வார்த்தையாய் இருக்க வேண்டும். அவரே வார்த்தை! இயேசு, ''என்னை விசுவாசிக்கிறவன் - தனிப்பட்ட பிரதி பெயர்சொல் (personal pronoun) நான் செய்கிற கிரியைகளைத் தானும் செய்வான்“ என்றார். கிறிஸ்துவுக்குள் இருந்த ஜீவன் சபைக்குள் -ஆபிரகாமின் ராஜரீக சந்ததிக்குள், இருக்குமென்று உடன்படிக்கையை உறுதிப்படுத்துகிறார். 75 சகோதரரே, பெந்தெகொஸ்தேவைக் குறித்து ஒரு நிமிடம். அவர்கள் மேலறையில் கூடியிருக்கையில்... நீங்கள் எப்பொழுதாகிலும் அங்கு சென்றிருந்து அதன் வரைப்படத்தை - அது வரையப்பட்டுள்ள விதத்தை - கண்டிருந்தால், அவர்கள் வெளிப் புறத்திலுள்ள படிகளின் வழியாக மேலறையை அடைந்தனர். ஒலிவ எண்ணெயினால் எரிந்து கொண்டிருக்கும் சிறு விளக்குகள் அங்கிருந்தன. அவர்கள் கதவுகளை அடைத்துக் கொண்டு, இரவும் பகலும் பத்து நாட்கள் மேலறையில் இருந்தனர். அப்பொழுது பலத்த காற்று அடிக்கிற முழக்கம் போல், வானத்திலிருந்து சடுதியாய் ஒரு முழக்கமுண்டாகி, அவர்கள் உட்கார்ந்திருந்த வீடு முழுவதையும் நிரப்பிற்று. அல்லாமலும் அக்கினி மயமான நாவுகள் போலப் பிரிந்திருக்கும் நாவுகள் வீட்டை நிரப்பி, அவர்கள் ஒவ்வொருவர் மேலும் வந்து அமர்ந்தது. அவர்களெல்லாரும் பரிசுத்த ஆவியினாலே நிரப்பப்பட்டு, வெளிப் பிரகாரத்துக்கு ஓடிவந்து வெவ்வேறு பாஷைகளிலே பேசத் தொடங்கினார்கள்.'' கவனியுங்கள், இந்த பிரிந்திருக்கும் அக்கினி என்ன? அது அக்கினி ஸ்தம்பம், பரிசுத்த ஆவி, தேவன் அவர்களை வனாந்திரத்தின் வழியாக வழி நடத்தின அந்த தூதன், தேவன், அவர்களுக்கு முன்பாக வெளிப்பட்டவர். தேவன் பரிசுத்த ஆவி - தம்மை - ஜனங்களின் மத்தியில் அக்கினி மயமான நாவுகளாக பிரித்துக் கொண்டார். நாம் ஒருமித்து ஜீவனுள்ள தேவனுடைய சபையாயிருக்கிறோம். ஒரு உடன்படிக்கை! ''ஆபிரகாமுக்கும் அவனுக்குப் பின் வரும் சந்ததிக்கும் - ராஜரீக சந்ததிக்கும் கிறிஸ்துவுக்குள் இருந்த அந்த ஜீவன் சபையில் வாசம் செய்து, கிறிஸ்து செய்த அதே கிரியைகளை செய்து வருகிறது. ஆமென். நண்பர்களே, எவ்வளவு அற்புதமான காரியம்! 76 நேரமாகிவிட்டது. இப்பொழுது நான் முடிக்கவேண்டும். ஆம், இல்லையென்றால் அதிக தாமதமாகிவிடும். நான்... நாளை இரவு இன்று விட்டதிலிருந்து தொடர்ந்தால் சரியா?நான் யேகோவா - யீரேவுக்கு உடனே வரவேண்டுமென்று விரும்புகிறேன். ஆனால் சகோதரரே, இது என்னவென்று நீங்கள் அறிந்துக் கொள்ளவேண்டுமென்று விரும்புகிறேன். அதாவது கிறிஸ்தவர்கள் என்று அழைத்துக் கொள்பவர்கள்; சபையானது அந்நிலைக்கு வருவதற்கு நேரமாகிவிட்டது... தேவன் இந்த வாக்குத்தத்தங்களை செய்திருப்பாரானால், அவை உண்மையாயுள்ளன. அவை நிறைவேற வேண்டும். சற்று நேரம் நாம் தலை வணங்குவோம். இது மிகவும் கடினமானது. இது வெட்டுகின்றது. அப்படியே செய்ய எனக்குப் பிரியமில்லை. இந்த போதகர் என்னிடம், ''சகோ. பிரன்ஹாமே, ஏன் இன்னினது, இதை செய்யுங்களேன்?'' என்றார். நான், ''எனக்கு தொலைகாட்சி நிகழ்ச்சிகளோ, வானொலி நிகழ்ச்சிகளோ ஒழுங்கு செய்து தரப்படவில்லை. நான் இவ்வாறு சென்று கொண்டிருக்கிறேன்- நான் எங்கு செல்லக் கூடுமோ, அவ்விடங்களுக்கெல்லாம். அவர்களுக்கு யார் இதை உரைப்பது? அதை உரைப்பதற்கு எங்காவது ஒரு சத்தம் இருக்கவேண்டும்'' என்றேன். 77 நண்பர்களே, தேவன் இங்கிருக்கிறார், நீங்கள் உங்களை ஆபிரகாமின் சந்ததி என்று அழைத்துக் கொண்டு, அவ்வாறு கருதினால்... கவனியுங்கள். இது உங்கள் ஆத்துமா, நண்பர்களே. இது உங்கள் ஆத்துமா. எனவே தருணத்தை இழக்க வேண்டாம். ஒருக்கால் இன்றிரவு உங்களுக்குக் கிடைக்கப் பெறும் கடைசி தருணமாக இருக்கக்கூடும். நீங்கள் தேவனுடைய பிள்ளை என்று உங்களை அழைத்துக் கொண்டு, நீங்கள் வாழ்ந்து வந்த வாழ்க்கையைக் குறித்து அவமானம் கொண்டு, தேவனுடைய வார்த்தை உண்மையென்று விசுவாசித்து, நீங்கள் தவறென்று அறிந்திருந்தால், நீங்கள் சற்று நேரம் ஜெபித்து, உங்கள் வாழ்க்கையை ஆராய்ந்து பார்க்க தேவனிடம் கேட்கும்படி விரும்புகிறேன். (சகோ. பிரன்ஹாம் அமைதியாயிருக்கிறார் -ஆசி). ஜெபியுங்கள். 78 பரலோக பிதாவே, எங்களில் பலருக்கு இது கடைசி இரவாக இருக்கக்கூடும். சில இரவுகளுக்கு முன்பு லாஸ் ஏஞ்சலிஸில் நடந்ததை நினைவு கூருகிறோம். அங்கு எழுபது வயதுடைய வயோதிப ஸ்திரீ உட்கார்ந்து கொண்டிருந்தார்கள். அவர்கள் பீடத்துக்கு வந்து தங்கள் வாழ்க்கையை கிறிஸ்துவுக்கு அர்ப்பணித்தார்கள். அன்றிரவே படுக்கையில் மரித்து போனார்கள். கடைசி மணி நேரத்தில், தேவனுடைய கிருபை! அவரை அறியாமலே அத்தனை ஆண்டு காலம் வாழ்ந்த பிறகு, கடைசி மணி நேரத்தில் அவர் அவர்களை அழைத்தார். ஆச்சரியமான கிருபை. பிதாவாகிய தேவனே, இன்றிரவு இருதயங்களோடு பேசும். இதன் நோக்கம் என்னவென்று நீர் அறிவீர். பிதாவே, உமக்குத் தெரியும், ஏதாவதொன்று செய்ய வேண்டிய நேரம் வரவேண்டியுள்ளது. நாங்கள் நிலைமையைக் காண்கிறோம். அது மோசமாகிக் கொண்டே வருகிறது. இந்த கடைசி நாட்களின் பெந்தெகொஸ்தே சபையின் காலம், லவோதிக்கேயா சபையின் காலமென்றும் இந்த காலத்தில் மாத்திரம் தான் கிறிஸ்து சபைக்கு வெளியே தள்ளப்பட்டு அவர் வெளியே நின்று கொண்டு கதவைத் தட்டி, உள்ளே வர முயன்று கொண்டிருக்கிறார் என்றும் நாங்கள் உணருகிறோம். ஓ தேவனே, இரக்கமாயிரும். 79 கர்த்தாவே, இன்றிரவு நான் எங்கள் சகோதரர்களை கடிந்து கொண்டேன். ஆதியிலே ஏவாள் தான் அதை தொடங்கினாள் என்பதை அவர்கள் அறிந்து கொள்வார்களாக, அது மறுபடியும் இங்குள்ளது. சுவிசேஷம் வார்த்தையின் மூலம் வந்தது. அவள் தன் புத்தியைக் கொண்டு யோசித்து என்ன செய்தாள் (இன்றைக்கு பாருங்கள்). அவள் தாயைப் பாருங்கள், அதே வேதாகமம் வித்தியாசமானதென்றும் அவள் நினைத்தாள். தேவனே, எங்கள் சகோதரரிடம் நான் கடுமையாக பேச வேண்டியதாயிருந்தது. நான் அவர்களுக்காக பக்தி வைராக்கியம் கொண்டிருக்கிறேன், அவர்களை நான் நேசிக்கிறேன். கர்த்தாவே, நான் நேசிக்கிறேன் என்பதை நீர் அறிந்திருக்கிறீர். அவர்களுக்காக நான் முப்பத்தொன்று ஆண்டுகள் கழித்திருக்கிறேன். உம்முடைய வார்த்தையை நீர் உறுதிபடுத்தி வந்திருக்கிறீர், மற்றெல்லாவற்றையும் கர்த்தாவே, நீர் செய்திருக்கிறீர். வேறென்ன செய்ய வேண்டுமென்று எனக்குத் தெரியவில்லை. ஆனால் நான் நேசிக்கும் சபையை நான் பார்க்கும் போது - எனக்குத் துணை நின்று என்னை ஆதரித்த பெந்தெகொஸ்தே சபையை - தேவனே, கிறிஸ்தவ அன்பு மாத்திரமே, அவர்களிலிருந்து பொல்லாங்கை களைந்து போடும்படி நம்மைத் தூண்டுகிறது. நான் ஜனங்களிடம், ''அங்கு செல்லாதீர்கள், அதை செய்யாதீர்கள்'' என்று கூற முயல்கிறேன். கதவுகள் மூடப்பட்டு, நாங்களும் சபையில் கொண்டு வரப்பட்ட வெவ்வேறு கோட்பாடுகளின் மூலம் குஞ்சு பொரித்து, அற்புதங்களின் நாட்களினின்றும், தெய்வீக சுகமளித்தலினின்றும், சரியான முறையில் நடந்து உடுத்துக் கொள்ளும் விதத்தினின்றும் விலகிவிட்டோம். 80 நீர் ஆதாமுடன் ஒரு உடன்படிக்கையையும், ஏவாளுடன் ஒரு உடன்படிக்கையையும், இவ்வாறு வித்தியாசப்பட்ட இரு உடன்படிக்கைகளை செய்து, மனிதனைப் போல் ஸ்திரீ நடந்து கொள்ளுதல் தவறென்று கூறினர். அவள் பெண்மைத்தனம் கொண்டவளாக இருக்க வேண்டுமே தவிர ஆண்மைத்தனம் கொண்டவளாக அல்ல. ஆனால் இன்றைக்கோ அவள் ஆண்மைத் தனம் கொண்டவளாகவும், மனிதன் பெண்மைத்தனம் கொண்டவனாகவும் இருக்க முயல்கின்றனர். கர்த்தாவே, கடைசி நாட்களில் இந்த இடத்தில் இந்த மேற்கு கரையில், இந்த இடத்தில் நாகரீகத்தின் முடிவில் ஸ்திரீகள் ஆதியில் செய்த அதே தவறை செய்கின்றனர். அது நமது சகோதரிகளிடையே புகுந்துவிட்டது. ஓ. தேவனே, அது என் இருதயத்தைப் பிளக்கிறது, கர்த்தாவே, பாவியாகிய எனக்கே அத்தகைய உணர்ச்சி ஏற்படுமானால், அது தேவதையாகியுள்ளதைக் காண உமக்கு எப்படியிருக்கும்? நம்ப முடியாத இந்த ஹாலிவுட்டின் பகட்டான பாவம்! முன்பெல்லாம் படக்காட்சிகளுக்குப் போவது பாவமென்று கருதப்பட்டது. ஆனால் இப்பொழுதோ பிசாசு அதை தொலைகாட்சி பெட்டிகளின் மூலம் வீட்டிலேயே கொண்டு வந்துவிட்டான் - தணிக்கை செய்யப்படாத நிகழ்ச்சிகள், தெருக்களின் காணும் மோசமான காட்சிகள். ஓ, தேவனே, இது பைத்தியம் பிடித்துவிட்ட காலம். இது நரம்புக் கோளாறு ஏற்பட்டுள்ள காலம். இது மனிதன் நின்று செவி கொடுத்து, தன்னை ஆராய்ந்து பார்க்காத காலம். அவர்கள் உணர்ச்சிக்கு கீப்பட்டு, தாங்கள் ஆபிராகமின் சந்ததியென்று இன்னும் உரிமை கோருகின்றனர். தேவனே, கடைசி நாட்களில் ஆவிகள் ஒன்றுக்கொன்று எப்படி அருகாமையில் இருந்து ஆள் மாறாட்டங்கள் நடந்து, கூடுமானால் அது தெரிந்து கொள்ளப்பட்டவர்களையும் வஞ்சிக்கும் என்று நீர் கூறினர். அது இப்பொழுது இங்குள்ளது, தேவனே, இந்த ஜனங்கள் விழாதபடிக்கு, அவர்கள் ஒருவராவது அப்படி செய்யாதபடிக்கு பார்த்துக் கொள்ளும். தயவுசெய்து, பிதாவே. இவர்கள் ஒவ்வொருவருக்காகவும் நான் வேண்டிக் கொள்கிறேன். கர்த்தராகிய இயேசுவின் நாமத்தில் இதை அருளும். 81 இப்பொழுது நாம் தலைவணங்கியுள்ள இந்நேரத்தில், நான் எதை வேண்டுமானாலும் உங்களுக்குச் செய்வேன். நான் நீசத்தனமாக இருக்கவேண்டும் என்பதற்காக, ஜனங்களை நோக்கி உரக்க சத்தமிட்டால், தேவன் என்னோடு கூட இருக்கவே மாட்டார். நான் இங்கிருக்க தகுதியில்லை. நான் எங்காவது மரம் வெட்டிக் கொண்டிருக்கவோ, அல்லது வெறெதாவதொன்றைச் செய்து கொண்டிருக்க மாத்திரமே தகுதியுள்ளவனாயிருப்பேன். ஆனால் நண்பர்களே, நான்உங்களுக்கு எடுத்துரைத்தது சத்தியம். நீங்கள் ஆராய்ந்து பார்த்து, அது வேதத்தில் உள்ளதா என்பதைக் கண்டு கொள்ளுங்கள். இது கடைசி நாட்களில் வெளிப்பட வேண்டியதாயுள்ளது. நீங்கள் போதுமான அளவுக்கு உத்தமாயிருக்கிறீர்களா? உங்கள் வெளிப்புறதோலின் கீழ், உங்களைக் குறித்த உண்மையான, உத்தமமான ஒன்று வாசம் செய்து, நீங்கள் தவறென்று ஒத்துக் கொள்ள தயாராயுள்ளதா? ஒவ்வொரு தலையும், ஒவ்வொரு இருதயமும், ஆழ்ந்த பயபக்தியுடன் வணங்கியிருக்கும் இந்நேரத்தில், உங்கள் கைகளையுயர்த்தி, ''சகோ. பிரன்ஹாமே, எனக்காக ஜெபியுங்கள். நான் தவறாயிருந்து வந்துள்ளேன். தேவனுடைய கிருபையால் அதை நேராக்கப் போகின்றேன்'' என்று கூறுவீர்களா? தேவன் உன்னை ஆசீர்வதிப்பாராக, உன்னை, உன்னை, உன்னை. அது உண்மை. உங்கள் கையையுர்த்துங்கள். அவர் அதைக் காண்கிறார். மாடியின் முன் பக்கத்தில் உள்ளவர்களே, தேவன் உங்களைக் காண்கிறார். உங்கள் கைகளையுயர்த்துங்கள். நீங்கள் பின்வாங்கிப் போயிருக்கிறீர்களா?. 82 இங்கு ஸ்திரீகளாகிய உங்களில் சிலர் குட்டை தலைமயிருடன் உட்கார்ந்து கொண்டு, உங்கள் கையையுயர்த்தாமலிருக்கின்றீர்கள். நீங்கள் தவறாயிருக்கின்றீர்கள்! இந்நிலையில் நீங்கள் தேவனைச் சந்திக்க முயலவேண்டாம். இந்த பிரசங்க பீடத்தில் நான் நின்று கொண்டிருப்பது எவ்வளவு உறுதியோ, அவ்வளவு உறுதியாக நீங்கள் ஆக்கினைக்குட்படுவீர்கள். பெந்தெகொஸ்தே சபை இந்நிலையை அடைந்து, அதன் தவறை ஒத்துக்கொள்ள அவ்வளவு இருதயக் கடினம் கொண்டுள்ளது என்றா கூறுகிறீர்கள்? அப்படி செய்யாதீர்கள். தேவன் உங்களிடம் இரக்கம் பாராட்டுவாராக. நான் விசுவாசிக்கிறேன். நீங்கள் விசுவாசமுள்ளவர்களாயிருங்கள். நான் மறுபடியும் காத்திருக்கட்டும். தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. அந்த இடத்திலுள்ள தேனே, உன்னையும். சகோதரியே, தேவன் உன்னை ஆசீர்வதிப்பராக. அது நல்லது. கையை உயர்த்துங்கள்... அது... தேவன் உன்னை ஆசீர்வதிப்பாராக. அது உண்மை. இப்பொழுது தவறை ஒத்துக்கொள்ளுதல் நல்லது; நாளை காலை ஒருக்கால் அதிக தாமதமாகியிருக்கக் கூடும். இப்பொழுதிலிருந்து ஒரு மணி நேரம் கழித்து ஒருக்கால் அதிக தாமதமாகியிருக்ககூடும். தேவன் உன்னை ஆசீர்வதிப்பாராக. அது உத்தமம். தேவன் உன்னை ஆசீர்வதிப்பாராக. ''நான் தவறு என்று கூறுங்கள். தவறை ஒத்துக் கொள்ள உண்மையான நபரால் மாத்திரமே முடியும். அது உத்தமமான ஒன்று. தேவன் உன்னை ஆசீர்வதிப்பாராக, ஸ்திரீயே. தேவன் உன்னை ஆசீர்வதிப்பாராக, ஸ்திரீயே. தேவன் உன்னை ஆசீர்வதிப்பாராக. அது உண்மை. ஆம், ஜெபித்துக் கொண்டிருங்கள். தேவன் உன்னை ஆசீர்வதிப்பாராக. உங்கள் கையை நான் காணத் தவறலாம், ஆனால் அவர்காணத் தவறுவதில்லை. உங்கள் மனதிலுள்ள ஒவ்வொரு எண்ணத்தையும் அவர் அறிந்திருக்கிறார். அது முற்றிலும் உண்மை. தேவன் உன்னை ஆசீர்வதிப்பாராக, உன் கையை நான் காண்கிறேன். அது நல்லது, தேவன் உன்னை ஆசீர்வதிப்பாராக. வாலிபப் பெண்ணே, தேவன் உன்னை ஆசீர்வதிப்பாராக. சகோதரியே, அது நல்லது. அங்குள்ள உன்னை தேவன் ஆசீர்வதிப்பாராக, வாலிப் பெண்ணே. ஆம் வாழ்க்கையின் பாதையில் திருப்பம், முன்பு பழைய காரியங்கள் உன் இளம் இருதயத்தை கடினப்படுத்தியிருந்தன. இப்பொழுது தேவனிடத்திற்கு திரும்பு, தேனே. அது உண்மை. அப்படி செய். உன் வயதுள்ள பெண் ஒருவள் எனக்கு இருக்கிறாள். தேவன் உன்னை ஆசீர்வதிப்பாராக, தேனே. தேவன் உன்னை ஆசீர்வதிப்பாராக. ஆம், தேவன் உன்னை ஆசீர்வதிப்பாராக, சகோதரியே. 83 உன்னைக் குறித்தென்ன, சகோதரனே? உன் மனைவி அவ்வாறு நடந்து கொள்ளவும், குட்டை கால்சட்டை அணியவும், அப்படி உடுத்திக்கொண்டு தெருவில் செல்ல அனுமதிப்பதும் உனக்கு அவமானம். உன்னைத் தேவனுடைய குமாரன் என்று அழைத்துக் கொள்கிறாயே, உனக்கு அவமானமாயில்லையா? தேவன் உன்னை ஆசீர்வதிப்பாராக. தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக, ஐயா. தேவன் உன்னை ஆசீர்வதிப்பாராக. அது உண்மை. உன் தவறை ஒப்புக்கொள். ஆம் நீ... ''தன் பாவங்களை மறைக்கிறவன் வாழ்வடையமாட்டான். அவைகளை அறிக்கை செய்து விட்டுவிடுகிறவனோ இரக்கம் பெறுவான்'', (நீதி 28:13). தேவன் உன்னை ஆசீர்வதிப்பாராக. வேறு யாராகிலும் உண்டா? மாடியின் முன்பாகத்தில் பின்னால் உள்ளவர்கள்? மாடியின் முன்பக்கத்தில் உள்ளவர்கள்? மேலே உள்ள உங்களை அவர் காண்கிறார். உங்கள் இருதயத்திலுள்ள ஒவ்வொரு சிந்தையும் அவர் அறிந்திருக்கிறார். உங்கள் தலைகளை ஒரு நிமிடம் உயர்த்துங்கள். இந்த அறையிலுள்ளவர்களில் ஏறக்குறைய ஐம்பது அல்லது அறுபது பேர்கள் - வாலிபரும் வயோதிபரும் -தங்கள் கரங்களையுயர்த்தினர் என்று நான் கூறுகிறேன். உங்களுக்கு நன்றி. அது உண்மையிலேயே சீமாட்டித் தன்மையும் பெரிய மனிதத் தன்மையும். உங்களை நான் மெச்சுகிறேன். உங்கள் தவறை ஒப்புக் கொள்ள நீங்கள் விரும்பும் போது, உங்களுக்கு நம்பிக்கையுள்ளது. 84 நான் பீட அழைப்பு கொடுப்பதற்கு முன்பாக இந்த உறுமால்களுக்காக ஜெபிக்கப் போகின்றேன். பரலோகப் பிதாவே, இந்த உறுமால்கள் வியாதியஸ்தருக்கும், காத்துக்கொண்டிருக்கும் தாய்மார்களுக்கும் தகப்பன்மார்களுக்கும், பிள்ளைகளுக்கும் எடுத்துக்காட்டாய் உள்ளன. ஒரு முறை அவர்கள் பரி. பவுலின் சரீரத்திலிருந்து உறுமால்களையும் கச்சைகளையும் எடுத்து வியாதியஸ்தர் மேல் போட்டதாக நாங்கள் வேதாகமத்தில் போதிக்கப்பட்டுள்ளோம். ஜனங்கள் அவனைக் கண்டு, அவன் மேல் தேவனுடைய ஆவி தங்கியிருந்ததை அறிந்துக்கொண்டனர். எலிசா சூனேமியாளிடம், இல்லை கேயாசியிடம், ''இந்த தடியைக் கொண்டு போய் பிள்ளையின் மேல் வை'' என்று சொன்னதை பவுல் நினைவு கூர்ந்தான், அவன் தொட்டதெல்லாம் ஆசீர்வதிக்கப்பட்டது என்று அறிந்திருந்தான். பவுலின் சரீரத்திலிருந்து உறுமால்களையும் கச்சைகளையும் கொண்டு வந்து வியாதிக்காரர் மேல் போட, வியாதிகள் அவர்களை விட்டு நீங்கிப் போயின. பொல்லாத ஆவிகளும் அவர்களை விட்டுப் புறப்பட்டன. (அப் 19:12) கர்த்தாவே, நாங்கள் பரி. பவுல் அல்ல. ஆனால் நீர் இன்னும் தேவனாயிருக்கிறீர், அதே தேவனாயிருக்கிறீர். ஒருநாள் இஸ்ரவேல் ஜனங்கள் தங்கள் கடமையின் பாதையில் வாக்குதத்தம் பண்ணப்பட்ட தேசத்துக்குச் சென்று கொண்டிருந்தனர். அவர்கள் அங்கு செல்லாதபடிக்கு ஒன்று தடை செய்தது - சிவந்த சமுத்திரம். ஒரு எழுத்தாளர், “தேவன் அக்கினி ஸ்தம்பத்தின் வழியாக கோபங்கொண்ட கண்களுடன் கீழே நோக்கிப் பார்த்தார், அப்பொழுது அந்த சமுத்திரம் பயந்து போய், தன் மதில்களை சுருட்டிக்கொண்டு, இஸ்ரவேல் ஜனங்கள் கடந்து வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட தேசத்தை அடைவதற்கென உலர்ந்த பாதையை திறந்து கொடுத்தது'' என்று எழுதியுள்ளார். தேவனே, உறுமால்கள் வியாதியஸ்தரிடமும் துன்பப்படுகிறவர்களிடமும் கொண்டு செல்லப்படும் போது, பரலோகத்தின் தேவன் தாமே தமது சொந்த குமாரனின் இரத்தத்தின் வழியாக கீழே நோக்கிப் பார்ப்பாராக. வியாதிப்பட்ட இந்த ஜனங்களை பீடித்திருக்கும் பிசாசு, வார்த்தையும் சத்தியமும் நிறைவேற்றப்பட்ட இன்றிரவு கூட்டத்தின் அடையாளங்களாக அளிக்கப்பட்ட உறுமால்கள் போடப்படும் போது, பயந்து போய் விலகிச் செல்வானாக; வியாதியஸ்தரும் துன்பப்படுகிறவர்களும் சுகமடைவார்களாக; இருதயங்கள் நொறுங்கிப் போய், குயவனின் வீட்டுக்குப் போக வேண்டிய நிலையில் உள்ளவர்களுக்கு; பிசாசு இவர்களை விட்டு நீங்கி, ஜனங்கள் தேவன் அவர்களுக்கு வாக்களித்துள்ள நல்ல சுகம் என்னும் அந்த தேசத்துக்கு கடந்து செல்வார்களாக. இந்த உறுமால்களை அந்த நோக்கத்திற்கென்று இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால் அனுப்புகிறேன். ஆமென். 85 தேவன் உங்கள் இருதயத்தை அறிவார். அவர் உங்கள் நிலைமையை அறிவார். ஒன்றைக் காண்பிக்க உங்களிடம் இதை கூறட்டும். இங்குள்ள அநேகர் கைகளையுயர்த்தியிருக்க வேண்டியவர்கள், ஆனால் அவர்கள் கைகளையுயர்த்தவில்லை, உங்களை இந்த மேடையிலிருந்து நான் கூப்பிட்டு, நீங்கள் யாரென்று கூறினால், அது உங்களுடைய மனதைப் புண்படுத்திவிடும். அவ்வாறு நான் செய்வதை நீங்கள் கண்டிருக்கிறீர்கள். இயேசு, ''களைகளையும் கோதுமையையும் ஒன்றாக வளரவிடுங்கள். தூதர்கள் வந்து களைகளைக் கட்டி அதை முதலில் நெருப்பிலே போடுவார்கள்“ என்று கூறினாரென்று நான் கண்டுகொண்டேன். இப்பொழுது களைகளைக் கட்டும் நேரம். அவர்கள் ஒவ்வொருவருமே - ஸ்தாபனங்கள் அனைத்தும் - சபைகளின் சங்கத்துக்குள் சென்று கொண்டிருக்கின்றன. அது உண்மை. ஒவ்வொரு ஸ்தாபனமும் உலக சபைகள் ஆலோசனை சங்கத்துக்குள் நுழைந்து கொண்டிருக்கிறது. அந்த பெரிய காரியம் இப்பொழுது நடந்து கொண்டிருக்கிறது. அங்கு வாக்களிக்கப்பட்டுள்ள விதமாகவே அவர்கள் எல்லோருமே ரோமாபுரிக்கு திரும்பச் சென்று “மிருகத்துக்கு ஒரு சொரூபத்தை உண்டாக்குகின்றனர்; ஒரு வல்லமை, சபைகளின் சங்கம் என்ன என்ன நிறைவேற்றுமென்று தேவன் வாக்களித்துள்ளாரோ, அது அப்படியே நிறைவேறுகின்றது. அதோ அவர்கள் நீங்கள் போக அனுமதித்து, இப்படி செய்வது சரியென்று உங்களிடம் கூறி, அவர்கள் ஆகாரச் சீட்டு போய்விடுமே என்னும் பயத்தினால் அதைக் குறித்து எதையும் கூற பயப்படுகின்றனர். 86 என் சகோதரனே, சகோதரியே உங்களிடம் நான் ஒன்றைக் கூறட்டும். நான் உங்களை நேசிக்கிறேன் என்று தேவன் உங்களுக்கு வெளிப்படுத்தி தருவாராக. நான் வித்தியாசமாயிருக்க வேண்டும் என்பதினால் அல்ல; உத்தமமாயிருக்கவே. நீங்கள் தருணத்தை இழக்க வேண்டாம். உங்கள் சரீரத்தை அழித்துக் கொள்ளக் கூடாது என்பதனால், சிகப்பு வெளிச்சத்தைக் கண்டு தண்டவாளத்தை கடக்கமாட்டீர்கள். அப்படியானால் உங்கள் ஆத்துமாவைக் குறித்தென்ன? தேவனுடைய சிகப்பு வெளிச்சத்தைக் கண்டு கடக்காதீர்கள். உங்களில் சிலர் வியாதியாயிருக்கிறீர்கள். உங்கள் முழு இருதயத்தோடும் விசுவாசியுங்கள். யாராவது ஏதாவதொன்றைக் குறித்து பதறியிருந்தால், நீங்கள் விசுவாசமுள்ளவர்களாயிருங்கள். அவர் உண்மையாகவே, அது உண்மையா இல்லையாவென்று உங்களுக்குக் காண்பிக்கிறேன். அந்த தூதன் ஆபிரகாமிடம் வந்து என்ன செய்தானென்று உங்களுக்கு நினைவிருக்கிறதா? அதே காரியம் சம்பவிக்கிறதா என்று பாருங்கள். 87 இங்கு ஒரு ஸ்திரீ உட்கார்ந்து கொண்டிருக்கிறாள், இந்த இடத்தில்அவளுக்கு புற்று நோய் உள்ளது. அவளுக்கு சிறு நீர் பை வீக்கம் உள்ளது. அவளுக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட வேண்டும், அவள் இப்பொழுது என்னையே நோக்கிக் கொண்டிருக்கிறாள் - கழுத்தில் சிகப்பு மணிகள் அணிந்துள்ளவள். நீ போர்ட்லாந்திலிருந்து வருகிறாய். நீ மாத்திரம்... அது உண்மையானால், உன் கையையுயர்த்து. அது உண்மை. பாருங்கள்? உன்னை எனக்குத் தெரியாது, நாம் அந்நியர்கள். ஆனால் நான் கூறினது உண்மை. கிறிஸ்துவின் வஸ்திரத்தை தொடுவதற்கு போதிய விசுவாசம் கொண்டவளாய் இங்கு நீ உட்கார்ந்து கொண்டிருப்பதனால், அந்த வெளிச்சத்தின் தூதன் (The Angel of Light) உன் மேல் வந்தார். அது தேவனுடைய கிருபை அல்லவா? ஸ்திரீயே, அதை ஏற்றுக்கொள். அதை விசுவாசி. அதை மாத்திரமல்ல, முழு சுவிசேஷத்தையும் விசுவாசி. இங்கு ஒரு ஸ்திரீ பின்னால் உட்கார்ந்து கொண்டிருக்கிறாள். ஸ்திரீயே, இங்கு பார். அவள் பெருங்குடல் கோளாறினால் அவதியுறுகிறாள். உன் முழு இருதயத்தோடும் விசுவாசி. ஆம் உன்னை எனக்குத் தெரியாது. உன் முழு இருதயத்தோடும் விசுவாசித்து சுகமடைவாயாக. 88 உனக்குப் பக்கத்தில் ஒரு மனிதன் உட்கார்ந்து கொண்டிருக்கிறார். அவர் வீட்டுக்குச் செல்லவேண்டும். அதிக நேரம் அவரால் இருக்க முடியாது. அவருக்கு காதுகளில் கோளாறு ஏற்பட்டுள்ளது. அவருக்கு மேலும்... அவருக்கு ஜலதோஷம் பிடித்திருந்து, அது இருமலை உண்டாக்கினது, அது அவரை விட்டுப் போகவில்லை. அதன் விளைவாக உடலில் நிறைய சிக்கல்கள் ஏற்பட்டது. அது உண்மையா, ஐயா. நீர் ஏவுகணைகள் உண்டாக்கும் தொழிற்சாலையில் பணிபுரிகிறீர். நீர் இப்பொழுது வேலைக்கு செல்லவேண்டும். நான் உமக்கு அந்நியர். இவை உண்மையானால் உமது கையையுயர்த்தும். சரி, கர்த்தராகிய இயேசுவைத் தொடுவதற்கு உமக்கு போதிய விசுவாசம் இருக்கும்போது, நீர் ஏன் உண்மையுள்ள மனிதனாயிருந்து, உமது முழு இருதயத்தோடு விசுவாசிக்கக் கூடாது? ஒரு ஸ்திரீ பின்னால் உட்கார்ந்து கொண்டிருக்கிறாள். அவளுக்கு கைகளின் மேல் ஒருவிதமான சரும நோய் உள்ளது. அது என்னவென்று அவளுக்கே தெரியவில்லை, மருத்துவருக்கும் தெரியவில்லை. அநேக ஆண்டுகளாக அவளுக்கு அது உள்ளது. ஓ, அவள் அதை இழக்கப்போகிறாள். உலகம் உள்ளது எவ்வளவு உறுதியோ, அவ்வளவு உறுதியாக. திருமதி. டானியேல்ஸ், மக்டானியல். அதுதான். ஐடா மக்டானியல்ஸ், உன் முழு இருதயத்தோடும் விசுவாசி. அவளை எனக்குத் தெரியாது, அவளை முன்பு கண்டதில்லை. அந்த ஒளி அவள் மேல் உள்ளது. 89 அது என்ன? அவர் உங்களை அறிந்திருக்கிறார். நீங்கள் தவறாயிருக்கின்றீர்கள் என்றும் அவருக்குத் தெரியும். இந்த விதமாக என் மூலம் பேசிக் கொண்டிருக்கும் அதே தேவன், வார்த்தையின் மூலம் என் மூலம் பேசுகிறார். தேவனுடைய சமுகத்தை அடையாளம் கண்டு கொண்டு, நீங்கள் தவறென்று அறிந்துகொள்ள ஒவ்வொருவரும் பீடத்தண்டை இப்பொழுது வாருங்கள், ஒரு நிமிடம் இங்கு வாருங்கள், உங்களுக்காக நான் ஜெபிக்கட்டும். நீங்கள் தவறென்று அறிந்து, அதை அறிக்கை செய்ய விரும்பி, இப்பொழுது முதல் உண்மையான கிறிஸ்தவராயிருக்க விரும்பினால், இங்கு வந்து பீடத்தை சுற்றிலும் நில்லுங்கள். உங்கள் பெயரை நான் அழைக்க விரும்பவில்லை, அது கிறிஸ்தவத் தன்மையாயிருக்காது. மாடியின் முன் பக்கத்தில் இருப்பவர்களே, கீழே இறங்கி வாருங்கள். இதுவே உங்கள் தருணம். இப்பொழுதே இறங்கி வாருங்கள்! பீடத்தண்டை வந்து, “ஆண்டவரே, நான் வருகிறேன்'' என்று சொல்லுங்கள். பாவியே, பீடத்தண்டை வா. இதுவே உன் கடைசி தருணமாக இருக்கக்கூடும். இப்பொழுது வர மாட்டாயா... ஆர்கன் அழகாக, ''நான் வருகிறேன் ஆண்டவரே, இப்பொழுது உம்மண்டை வருகிறேன்” என்னும் பாடலை இசைத்துக் கொண்டிருக்கிறது. சரி, நாமெல்லாரும் சேர்ந்து இப்பொழுது பாடுவோம். நான் வருகிறேன், ஆண்டவரே! இப்பொழுது உம்மண்டை வருகிறேன்! 90 நீங்கள் வரமாட்டீர்களா? மாடியின் முன் பக்கத்திலிருந்து கீழே இறங்கி வாருங்கள். கிறிஸ்தவர்களென்று, ஆபிரகாமின் சந்ததியென்று, அழைத்துக் கொள்ளும் உங்களைக் குறித்தென்ன? ஸ்திரீகளே, தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. ஆம் என் சகோதரிகளே, தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. ஆம் தேவன் உங்களை நிச்சயம் கனப்படுத்துவார். நீங்கள் உண்மையுள்ளவர்கள். உங்கள் போதகர் உங்களுக்கு அதைக் கூறத் தவறியிருப்பார். வீடு சென்று வேதாகமத்தை எடுத்து, அது சரியா இல்லையாவென்று கண்டுபிடியுங்கள். நான் ஒன்றைக் கூறுவதற்கு முன்னமே அது சரியென்று உங்களுக்கு தெரியும். பெந்தெகொஸ்தே பெண்களாகிய நீங்கள், நீங்கள் எக்காரணத்தைக் கொண்டும் அழகு படுத்தும் பொருட்களை உபயோகிப்பதேயில்லை. வேதாகமத்தில் அழகு படுத்தும் பொருட்களைக் குறித்து ஒன்றும் கூறப்படவில்லை; யேசபேல் மாத்திரமே தன் முகத்தை வர்ணத்தினாலும் மற்ற பொருட்களினாலும் அழகுப்படுத்திக் கொண்டாள். ஆனால் நீங்கள் நீண்ட தலைமயிர் வைத்துக் கொள்ள வேண்டுமென்று வேதாகமத்தில் கூறப்பட்டுள்ளது. ஒரு ஸ்திரீ தன் தலைமயிரைக் கத்தரித்துக் கொண்டு ஜெபம் செய்வது வழக்கத்திற்கு மாறான செயலாகும். “உனக்கு...” தேவனுடைய சமுகம் இங்குள்ள போதே, நீ தேவனிடம் சரியாக வேண்டுமென்று விரும்புகிறாயா? வா எழுந்து நில், அவருக்காக உறுதியாக நில்! நீ எழுந்து, இங்கு வந்து, ''நான் வெளிப்படையாய் காண்பிக்க விரும்புகிறேன். நான் தவறென்று முழு உலகமும் அறிய விரும்புகிறேன். நான் தேவனுக்கு முன்பாக சரியாக வேண்டுமென்று விரும்புகிறேன்'' என்று சொல். இப்பொழுது வா!. நான் வருகிறேன், ஆண்டவரே! இப்பொழுது உம்மண்டை வருகிறேன்! என்னைக் கல்வாரியில் பாய்ந்த இரத்தத்தால் என்னைக் கழுவி சுத்தமாக்கியருளும். மறுபடியும் எல்லோரும் சேர்ந்து! நான் வருகிறேன்..... (வாருங்கள். அங்கு இன்னும் அதிகம் பேர் இருக்கின்றனர். ஆம், அது உண்மை) ......கல்வாரியில் பாய்ந்த இரத்தத்தால் என்னைக் கழுவி சுத்தமாக்கியருளும். 91 ஜனங்கள் இன்னும் வந்து கொண்டிருக்கின்றனர். ஜெபித்துக் கொண்டேயிருங்கள். இப்பொழுது, நண்பர்களே, வற்புறுத்த என்னால் முடியாது. வார்த்தை புறப்பட்டு இங்கு செல்லும் போது, அது தன் கிரியையை செய்கிறதென்று நான் நம்புகிறேன். பரிசுத்த ஆவியை துக்கப்படுத்தாதிருங்கள். இதுவே உங்களுக்குக் கிடைக்கப் பெறும் கடைசி தருணமாய் இருக்கக்கூடும். அது அப்படி இல்லையென்று நம்புகிறேன். நீங்கள் தவறென்று ஒப்புக் கொள்ளும் போது அது என்ன செய்கிறதென்று நீங்கள் அறிந்திருக்கிறீர்கள். அங்கு உண்மையான ஒன்று உள்ளதென்றும், நீங்கள் உண்மையில் சரியானதையே செய்ய விரும்புகிறீர்கள் என்றும் அது என்னிடம் கூறுகிறது. உங்களுக்கு விருப்பமானால், நான் பேசிக் கொண்டிருக்கும் போது, ஆர்கனுடன் சேர்ந்து மெல்ல பாடுகள். வாருங்கள், ஜனங்களே, வாருங்கள். நீங்கள் வந்து கொண்டிருக்க வேண்டுமென்று விரும்புகிறேன். இந்த ஜனங்கள் என்ன செய்தனர் என்று உங்களுக்குத் தெரியுமா? இவர்களின் பலர் தங்களுக்கென ஏற்படுத்திக் கொண்ட சபையின் அங்கத்தினர்கள். நான் உண்மையைக் கூறினேன் என்று அவர்கள் அறிவார்கள். நான் அல்ல. மோசே கீழே சென்று ஜனங்களிடம் கர்த்தரைக் குறித்து கூறினபோது, கர்த்தர் அக்கினி ஸ்தம்பத்திலிருந்து கொண்டு வார்த்தையை உறுதிப்படுத்தி, அது உண்மையென்று காண்பித்தது போல; அதே அக்கினி ஸ்தம்பம் இங்கு நம்முடன் இருக்கிறது. அதே கிறிஸ்து புறஜாதியாரின் காலத்தில், அவர் வாக்களித்த பிரகாரம், அதே காரியத்தை செய்து கொண்டிருக்கிறார். 92 நீங்கள் இருதயத்தில் உத்தமமாயிருக்கிறீர்கள் என்று எது என்னை விசுவாசிக்கச் செய்கிறது?உங்களைச் சுற்றிலும் ஏதோ ஒன்று இருந்து கொண்டு, ''நீங்கள் தவறு'' என்று கூறினது. அது தேவன். நீங்கள்அறிக்கை செய்த பிறகு, ஜனங்களின் முன்னால் நிற்க உங்களில் சிலர் கூச்சப்படுகின்றீர்கள். ஆனால் இந்த உண்மையான ஒன்று, ''நீங்கள் தவறு என்று காண்பித்தது. அது சிந்தனைகளைப் பகுத்தறிதலின் மூலம், வார்த்தையுடன் கூட வருகிறது. இந்த வரங்கள் எதற்காக சபைக்கு அனுப்பப்பட்டன? முதலாம் வரம் எது?முதலாவது காரியம் எது? அப்போஸ்தலர் (அது மிஷனரிமார்கள்), தீர்க்கதரிசிகள், போதகர்கள், மேய்ப்பர்கள், சுவிசேஷகர்கள், சபை சீர்பொருந்தும் பொருட்டு அவர்கள் ஒருமித்து ஊழியம் செய்கின்றனர். 93 கர்த்தருடைய வார்த்தை எங்கு, யாரிடம் வருகிறது? அது எப்பொழுதும் தீர்க்கதரிசியிடம் வருகின்றது. கேள்விக்கு இடமேயில்லை. அது தீர்க்கதரிசியின் வரம் அல்ல. தீர்க்கதரிசன வரம் என்பது ஒருவர் மேல் இருக்கிறது. பின்பு வேறொருவர் மேல் வருகிறது. ஆனால் தீர்க்கதரிசியோ தேவனால் முன்குறிக்கப்பட்டு தீர்க்கதரியாகவே பிறக்கிறான். இயேசு கிறிஸ்து முன் குறிக்கப்பட்ட தேவனுடைய குமாரன் ஏசாயா யோவான் ஸ்நானனைக் குறித்து, அவன் பிறப்பதற்கு ஏழுநூற்று பன்னிரண்டு ஆண்டுகட்கு முன்னரே, ''அவன் வனாந்தரத்தில் கூப்பிடுகிறவனுடைய சத்தம்'' என்று முன்னுரைத்தான். தேவன் எரேமியாவிடம், ''நான் உன்னைத் தாயின் வயிற்றில் உருவாக்கும் முன்னே, உன்னை அறிந்தேன்: நீ கர்ப்பத்திலிருந்து வெளிப்படுமுன்னே நான் உன்னைப் பரிசுத்தம் பண்ணி, உன்னை ஜாதிகளுக்கு தீர்க்கதரியாகக் கட்டளையிட்டேன்'' என்றார். தீர்க்கதரிசிகள் தோன்றுவதை நீங்கள் காணும் போது, நியாயத்தீர்ப்பு சமீபமாயுள்ளது என்பதை அறிந்து கொள்ளுங்கள். 94 நியாயத்தீர்ப்பு தேவனுடைய வீட்டில், தேவனுடைய ஜனங்களிடத்தில், துவங்குகிறது. நாம் தவறாயிருக்கிறோம்! நாம் தவறு செய்திருக்கிறோம். இங்குஉட்கார்ந்து கொண்டிருக்கிறவர்களில் ஆபிரகாமின் சந்ததியார் மீது தேவனுடைய வெளிச்சம் பிரகாசிக்க வேண்டுமென்று அவர்கள் உண்மையில் முன் குறிக்கப்பட்டுள்ளனர் என்று நான் விசுவாசிக்கிறேன். வெளிச்சம் அவர்கள் மேல் படும்போது, அவர்கள் எழுந்து நிற்கின்றனர். ஏதாவதொன்று நிகழ வேண்டும், அதன் விளைவாக அவர்கள் நின்று கொண்டிருக்கின்றனர். இப்பொழுது நீங்கள் இங்கிருக்கின்றீர்கள். நாம் தலை வணங்கி நமது தவறுகளை அறிக்கை செய்வோம். பாவியாகிய நண்பனே, இந்த கூட்டத்தில் நீ நின்று கொண்டிருப்பாயானால்; சிலருக்கு அது அவமானம், ஆனால் உனக்கோ அது இப்பொழுது ஆசீர்வாதம். அதை நீ ஏற்றுக்கொண்டு, உன் முழு இருதயத்தோடும் விசுவாசித்துவிட்டாய். கிறிஸ்தவர்களே, அறிந்துள்ள, பெண்களே, நீங்கள் நல்ல பெண்கள் என்று நான் நம்புகிறேன். தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. அதை நான் விசுவாசிக்கிறேன். என் இருதயத்தின் உணர்ச்சியை தேவன் உங்களுக்கு வெளிப்படுத்தித் தர முடியும். சகோதரியே, உன்னிடம் நான் நீசத்தனமாக இருக்க விரும்பவில்லை. எனக்கும் மனைவியும் இரண்டு வாலிப குமாரத்திகளும் உள்ளனர். உன்னை நான் சகோதரியாக நேசிக்கிறேன். சகோதரனே, உன் மனதைப் புண்படுத்த நான் விரும்பவில்லை. ஆனால் சில நேரங்களில் வார்த்தையைக் கொண்டு சிறிது குலுக்குதல் உனக்கு உதவி செய்கிறது. 95 நாம் தவறாயிருப்போமானால், நாம் தவறென்று ஒப்புக் கொள்ளுவோம். இன்றிரவு நமக்காக கிருபை அபரிமிதமாய் உள்ளது. தன் தவறுகளை அறிக்கை செய்கிறவனுக்கு இரக்கம் காத்திருக்கிறது. ஆனால் தன் பாவத்தை மறைக்கிறவன் வாழ்வடையமாட்டான். உன் பாவம் என்ன? உன் அவிசுவாசம். அதை நீ மறைத்து, ''நல்லது, மற்றவர்களைப் போல் நானும் நல்லவன்'' என்று கூறுவாயானால், நீ தவறு செய்கிறாய். நீ ஒருக்காலும் முன்னேறவே மாட்டாய். நீ இப்படியே இருப்பாய். அந்த வேலியைக் கடந்து அதை சரிபடுத்தாமல் போனால், நீ முன் னேறவே முடியாது, அப்படி செய்ய முடியாது என்பதை ஞாபகம் கொள். நீ தேவனுடைய வார்த்தையின் மேல் நடக்கவேண்டும். உன் வாழ்நாள் முழுவதும் இதை எப்பொழுதும் ஞாபகம் கொள். நீ நீண்ட காலம் வாழ நேரிட்டால், இன்றிரவை ஞாபகம் வைத்துக்கொள். நான் உங்களிடம் கர்த்தர் உரைக்கிறதாவது! என்பதைக் கூறுகிறேன்,'' என்று ஞாபகமிருக்கட்டும். இன்று பிற்பகல் நான் காட்டில் உட்கார்ந்து கொண்டு ஜெபம் செய்து கொண்டிருந்தேன். அவர் இங்குள்ளவைகளைக் குறித்து என்னிடம் பேசி, “அதை அறிவித்து, அழைப்பு கொடு. நான் ஒன்றை உனக்குச் செய்வேன்” என்றார். இதோ அது நிறைவேறிவிட்டது. 96 இப்பொழுது ஜெபம் செய்வோம். பரலோகப் பிதாவே, இந்த கூட்டத்தில் இப்பொழுது பாவிகள் பயபக்தியாயும் உத்தமமாயும் நின்று கொண்டிருக்கின்றனர். அவர்கள் அறிக்கை செய்வதற்கெனவே தங்கள் இருக்கைகளை விட்டு எழுந்து இங்கு நடந்து வந்துள்ளனர். கிறிஸ்தவர்களும் கூட தங்கள் அறிக்கையை செய்து இங்கு வந்துள்ளனர். வெளிச்சம் தங்கள் மேல் பிரகாசித்த விலையேறப் பெற்ற சகோதரிகளும் இங்குள்ளனர். அவர்களுடைய இருதயத்தின் ஆழத்தில் அவர்கள் தவறென்றும், வேதம் இவைகளைப் போதிக்கிறதென்றும் அறிந்துள்ளனர். இவையனைத்தும் விட்டு விட அவர்கள் ஆயத்தமாயுள்ளனர். இங்கு சகோதரர்கள் நின்று கொண்டிருக்கின்றனர், விலையேறப் பெற்ற சகோதரர்கள், ஜீவனுள்ள தேவனுடைய குமாரர்கள். இவர்கள் கோட்பாடுகளின் காரணமாகவும், வெதுவெதுப்பான நிலையின் காரணமாகவும், இவ்வுலகில் அலைந்து திரிந்தனர். பிதாவே, இன்றிரவு அவர்கள் திரும்பி வருகின்றனர். அவர்கள் திரும்பி வருகின்றனர். அவர்கள் இதோ இங்குள்ளனர். 97 பிதாவே, அவர்கள் காலூன்றி எழுந்து நின்றபோது அவர்கள் எல்லா விஞ்ஞானிகளின் கருத்துக்களையும் முறித்துப்போட்டனர். நீங்கள் மேலே நகர முடியாது, நீங்கள் கீழே இழுக்கப்பட்டிருக்கின்றீர்கள் என்று அவர்கள் கூறுகின்றனர். ஆனால் அவர்கள் கைகளையுயர்த்தி இந்த வழியாக நடந்து வந்த போது, தீர்மானம் செய்ய அவர்களுக்குள் ஒரு ஆவி இருந்தது என்பதை அவர்கள் நிரூபித்தனர். அவர்கள் கிறிஸ்துவுக்காக அதை செய்தனர். இயேசுவே, இதோ உம்முடைய சொந்த வார்த்தைகள். நான் அவைகளை மட்டும் உமக்கு மேற்கொள் (Quote) காட்டிப் போகின்றேன். இன்றிரவு, உம்முடைய ஊழியக்காரன் என்னும் முறையில், இந்த ஜனங்களை உமக்களிக்கிறேன். இன்று காட்டில் நீர் எனக்கு கட்டளையிட்ட விதமாகவே நான் செய்தேன். என்ன நடக்கும் என்று நீர் கூறின விதமாகவே அப்படியே இங்கு நடந்தது. அவைகளுக்கு சாட்சிகள் இங்கு நின்று கொண்டிருக்கின்றனர். உமது பிரசன்னத்தை நிரூபிக்க நீர் கூட்டத்தில் சென்று, ஜனங்களிடம் அவர்கள் யாரென்றும், அவர்கள் என்ன செய்தனரென்றும், அவர்களுடைய பெயரையும், அவர்களுக்கிருந்த கோளாறையும் அறிவித்தீர். 98 நீர் உம்முடைய வார்த்தையில், ''மனுஷர் முன்பாக என்னை அறிக்கை பண்ணுகிறவன் எவனோ, அவனை நானும் பரலோகத்திலிருக்கிற என் பிதாவின் முன்பாகவும் பரிசுத்த தூதர்களின் முன்பாகவும் அறிக்கை பண்ணுவேன். மனுஷர் முன்பாக என்னைக் குறித்து எவன் வெட்கப்படுகிறானோ, அவனைக் குறித்து நானும் என் பிதாவுக்கு முன்பாகவும் பரிசுத்த தூதர்களுக்கு முன்பாகவும் வெட்கப்படுவேன்'' என்று கூறியிருக்கிறீர். (மத் 10:32, லூக் 9:26) இந்த சகோதரிகளும் சகோதரர்களும் இன்றிரவு அவர்களுடைய அங்கத்தினர்கள், போதகர்கள், அன்பார்ந்தவர்கள் ஆகியோருக்கு முன்பாக நின்றுவிட்டனர். அவர்கள் உம்மைக் குறித்து வெட்கப்படவில்லை. அவர்கள் நடந்து கொண்ட விதத்தைக் குறித்து வெட்கப்படுகின்றனர். கர்த்தாவே, நீர் அவர்களை மன்னிப்பீரென்று நிச்சயமுடையவனாயிருக்கிறேன். அதை நீர் வாக்கருளியிருக்கிறீர். நீர், “தன் பாவங்களை அறிக்கை செய்கிறவன் இரக்கம் பெறுவான்'' என்று கூறியிருக்கிறீர். அவர்கள் அதை அறிக்கை செய்கின்றனர், எனவே அவர்கள் இரக்கம் பெறுவார்கள். வியாதியஸ்தரை சுகப்படுத்தக் கூடிய நீர், ''உன் பாவங்கள் மன்னிக்கப்பட்டது என்று சொல்வதோ, எழுந்து நடவென்று சொல்வதோ, எது எளிது?'' என்று கேட்டிருக்கிறீர். (மத் 9:5) 99 இவர்களை நான் உரிமை கோருகிறேன். கர்த்தாவே, இவர்கள் ஒவ்வொருவரையும் நான் உரிமை கோருகிறேன். இத்தனை ஆண்டு காலமாக நான் உமக்காகவும் உமது வார்த்தைக்காகவும் நிற்க பிரயாசப்பட்டு வந்திருக்கிறேன். இன்றிரவு அவர்கள் உமக்காக நின்றிருக்கின்றனர், அவர்களை நான் உரிமை கோருகிறேன். கர்த்தராகிய இயேசுவே, இவர்களை உலகத்தின் வாயிலிருந்து விடுவித்து, உம்மிடம் சமர்ப்பிக்கிறேன், அவர்கள் இன்றிரவின் செய்தியின் - தேவனுடைய வார்த்தையின் -விருதுகளாயுள்ளனர். சர்வ வல்லமையுள்ள தேவனே, உமது பரிசுத்த வல்லமையினால் அவர்களைக் காத்துக் கொள்ளும், அவர்கள் வளரட்டும், தேவனுடைய வெளிச்சம் அவர்களுடைய வாழ்க்கையில் பிரகாசிக்கட்டும். கர்த்தாவே, இந்த மனிதரும் ஸ்திரீகளும் பரிசுத்த ஆவியின் வல்லமையிலும் பெலனிலும் வளரத் தொடங்குவார்களாக. அவர்களுடைய சபைகள் அனைத்தையும் அவர்கள் வாழ்ந்து வரும் சுற்றுப்புறம் அனைத்தையும் மாற்ற ஏதாவதொன்று நடக்கட்டும். ஆண்டவரே, இதை அருள்வீராக. இவர்களை உமக்குத் தருகிறேன். இவர்கள் உம்முடையவர்கள். இன்றிரவு நடந்த கூட்டத்தில் பிரசங்கிக்கப்பட்ட வார்த்தையின் விருதுகளாக இவர்கள் விளங்குகின்றனர், இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் அவர்களுடைய ஜீவியத்தை நான் உரிமை கோருகிறேன். அவர்களை நான் மறுபுறம் சந்திக்க விரும்புகிறேன். அப்பொழுது அவர்கள் என்றும் அழியாதவர்களாய், வாலிப மனிதராகவும் ஸ்திரீகளாகவும் மாறி, என்றென்றைக்கும் இளமையாகவும் அழகாகவும் இருப்பார்கள். பிதாவே, இவர்கள் உம்முடையவர்கள். இவர்கள் தேவனுடைய பிரசன்னத்தின் வல்லமையினாலும், தேவனுடைய வார்த்தையினாலும் தேவன் தம்முடைய குமாரனாகிய கிறிஸ்து இயேசுவுக்கு அளித்த விருதுகள். பிதாவே, இவர்கள் உம்முடையவர்கள். இவர்களை இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால் உமக்களித்து, இங்கு நின்று கொண்டிருக்கும் ஒவ்வொருவருடைய ஜீவியத்தை நான் உரிமை கோருகிறேன். ஒவ்வொரு பாவமும் மன்னிக்கப்பட்டது. 100 இங்கு நின்று கொண்டிருக்கும் ஒவ்வொருவரும் சரியானதை செய்வதற்கும், இந்த பகட்டான உலகத்தில், இந்த அந்தகார நேரத்தில் அவர்களுக்குதவி செய்வதற்கும், பரிசுத்த ஆவியின் பெலனை அவர்களுக்குள் தந்தருள வேண்டுமாய் ஜெபிக்கிறேன். ஓ, தேவனே, நாளை இரவு இதை சுத்தமாகவும் தெளிவாகவும் அவர்களுக்களிக்க, எனக்குதவி புரியும், கர்த்தாவே, இந்த உலகத்தின் பகட்டினின்று அவர்களை விலக்கி, கிறிஸ்துவின் வருகையின் போது அவரைச் சந்திக்க இவர்கள் ஆயத்தமாயிருக்கட்டும். பிதாவே, இதை அருள்வீராக. உம்மை நாங்கள் இப்பொழுது விசுவாசிக்கிறோம். நாம் தலை வணங்கியிருக்கும் இந்நேரத்தில், 101 நின்று கொண்டிருக்கும் நீங்கள் ஒவ்வொருவரும், என்ன நடக்கிறதென்று வேடிக்கை பார்க்க இங்கு வரவில்லையென்று நம்புகிறேன். ஏனெனில் நீங்கள் கரடு முரடான கடினமான, வெட்டும் சுவிசேஷப் பிரசங்கத்தின் விளைவாக இங்கு வந்திருக்கிறீர்கள். இயேசு, ''என் பிதா ஒருவனை இழுத்துக்கொள்ளாவிட்டால், அவன் என்னிடத்தில் வரமாட்டான். பிதாவானவர் எனக்குக் கொடுக்கிற யாவும் என்னிடத்தில் வரும்“ (யோவான் 6:44) என்று கூறியுள்ளதை நீங்கள் விசுவாசிக்கிறீர்கள். அது உறுதிப்படுத்தப்பட்ட தேவனுடைய வார்த்தை. அவர் ஆபிரகாமுக்கு வாக்களித்து, அதை ஒரு ஆணையினாலே உறுதிப்படுத்தினார். இன்றிரவு அதன் அடிப்படையில் தோன்றின தேவனுடைய சத்தத்தை நீங்கள் கேட்டீர்கள். நீங்கள் மன்னிக்கப்பட வேண்டும்! அதை ஏற்றுக்கொண்டு, தேவன் உங்கள் தவறுகளை மன்னிக்கிறார் என்பதை விசுவாசித்து, இன்றிரவு முதற்கொண்டு தேவனுடைய கிருபையினால் நீங்கள் எஞ்சியுள்ள உங்கள் வாழ்க்கை பூராவும் அவருக்காகவே வாழ்வீர்கள் என்றும், நீங்கள் செய்யவேண்டுமென்று வேதம் போதிக்கும் அனைத்தையும் நீங்கள் செய்வீர்கள் என்றும், தேவன் முன் காலத்தில் நீங்கள் செய்ததை மன்னித்து, அதை செய்ய கிருபையளிக்கிறார் என்றும் விசுவாசிப்பவர், உங்கள் கரங்களையுயர்த்தி, ''என் முழு இருதயத்தோடும் விசுவாசிக் கிறேன்'' என்று சொல்லுங்கள். தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. 102 இவர்களுக்காக பெருமிதம் கொள்ளும் அங்குள்ள கிறிஸ்தவர்களாகிய நீங்கள் அனைவரும், ''இவர்களுக்காக தேவனைத் துதிக்கிறேன்'' என்று கூறுங்கள். (சபையார் “இவர்களுக்காக தேவனை துதிக்கறேன்'' என்கின்றனர் - ஆசி). நாம் மறுபடியும் அதை கூறுவோம் (சகோ. பிரன்ஹாமும் சபையோரும் சேர்ந்து இவர்களுக்காக தேவனைத் துதிக்கிறேன்'' என்கின்றனர்). இப்பொழுது நாம் எல்லோரும் எழுந்து நிற்போம். “நான் அவரை நேசிக்கிறேன்' என்னும் பாடலுக்கு எனக்கு சுருதி வேண்டும். நேசிக்கிறேன் நேசிக்கிறேன் முந்தி அவர் என்னை நேசித்ததால் சம்பாதித்தார் என் இரட்சிப்பை கல்வாரி மரத்தில் இப்பொழுது நாமெல்லாரும் கைகளையுயர்த்தி, ஒன்று சேர்ந்து இந்த பாடலைப் பாடுவோம். சரி. நேசிக்கிறேன் நேசிக்கிறேன் முந்தி அவர் நேசித்ததால் சம்பாதித்தார் என் இரட்சிப்பை கல்வாரி மரத்தில். 103 நீங்கள் உண்மையில் தேய்த்துக் கழுவப்பட்ட உணர்ச்சியை பெற்றிருக்கிறீர்கள் அல்லவா? வார்த்தையானது உங்களைத் தேய்த்துக் கழுவி உங்களுக்கு மேலான உணர்ச்சியை கொடுத்துள்ளது அல்லவா? நான் போலியென்று நீங்கள் கருதவில்லை, இல்லையா? நான் சத்தியம் என்று நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? (சபையோர் ''ஆமென்'' என்கின்றனர் -ஆசி). நான் இப்பொழுது கர்த்தருடைய தூதனை கவனித்துக் கொண்டிருக்கிறேன். அது இங்கு நின்று கொண்டிருக்கும் கூட்டதின் மேல் சிலுவை வடிவில் வட்டமிடுவதைக் காண்கிறேன். பரலோகத்திலுள்ள தேவன் அதே படம்... அந்த படத்தில் நீங்கள் காணும் அதே தூதன் இப்பொழுது இந்த கூட்டம் ஜனங்களின் மேல் அசைந்துக் கொண்டிருக்கிறார். அது இடத்துக்கு இடம் செல்வதை நான் கவனிக்கிறேன். அந்தக் கூட்டத்தில் அங்கு நின்று கொண்டிருப்பவர்களின் வியாதி அனைத்தும் போய்விட்டதென்றும் நான் நம்புகிறேன். எல்லா பாவமும் மன்னிக்கப்பட்டு விட்டதென்றும் என் முழு இருதயத்தோடும் விசுவாசிக்கிறேன். 104 நாம் “நான் அவரை நேசிக்கிறேன்'' என்னும் பாடலை பாடும் போது, ஒருவரோடொருவர் கைகுலுக்குவோம். ”கர்த்தருக்கு ஸ்தோத்திரம்“ என்று சொல்லுங்கள் (சபையோர், ”கர்த்தருக்கு ஸ்தோத்திரம்“ என்று சொல்லுகின்றனர்... ஆசி). நேசிக்கிறேன் நேசிக்கிறேன் முந்தி அவர் என்னை நேசித்ததால் சம்பாதித்தார் என் இரட்சிப்பை கல்வாரி மரத்தில் இப்பொழுது நாம் அவரை ஸ்தோத்தரிப்போம், ''கர்த்தருக்கு ஸ்தோத்திரம்! இயேசுவே, உமக்கு நன்றி என்று சொல்லுங்கள், கர்த்தாவே ஜனங்களைக் கொண்டு வந்ததற்காகவும், உமது வார்த்தைக்காகவும் நாங்கள் நன்றி செலுத்துகிறோம். அது இருபுறம் கருக்குள்ள பட்டயத்தைப் போல் கருக்கானதாய், இருதயத்தின் நினைவுகளை வகையறுக்கிறது. அது அவ்வாறு செய்ய நிச்சயம் கொண்டதாயுள்ளது. அது ஜனங்களை உலகத்தினின்றும், மாம்சத்தினின்றும், உலக காரியங்களினின்றும் விருத்தசேதனம் செய்து அவைகளை அப்புறப்படுத்தி, அவர்களை கிறிஸ்துவில் புது சிருஷஷ்டிகளாக செய்கிறது. பிதாவே, உமக்கு நாங்கள் எவ்வளவு நன்றியுள்ளவர்களாயிருக்கிறோம்! உம்மை நாங்கள் முழு இருதயத்தோடும் துதிக்கிறோம். கர்த்தாவே, இவர்களுக்காக உமக்கு நன்றி செலுத்துகிறோம். அவர்கள் ஆவியினால் நிரப்பப்படுவார்களாக, பரிசுத்த ஆவி தாமே அவர்களைத் தமது கட்டுக்குள் கொண்டு வந்து, சபைகளின் மத்தியில் பழமை நாகரீகமுள்ள எழுப்புதல் உண்டாகி, கர்த்தாவே, அது எல்லா சமுதாயங்களின் வழியாக வேகமாக பரவி, எல்லாவிடங்களிலும் தேவனுடைய வல்லமையினால் அனல் மூளட்டும், கர்த்தாவே, எங்களுக்கு உண்மையான பெந்தெகொஸ்தேவை உண்மையான தேவனுடைய வல்லமையை ஜனங்களின் வாழ்க்கையில் அனுப்பும். பிதாவே, இதை அருளும். இவர்கள் உம்முடையவர்கள். தேவனுடைய கிருபை. ஆனால், இவர்கள் உம்முடையவர்கள். இவர்கள் வாக்குத்தத்தின் படி, ஆபிரகாமின் சந்ததி. பிதாவே, இதை அருளும். இவர்கள் உம்முடைய வார்த்தையை விசுவாசிக்கின்றனர். அதற்கு முரணான எதையும் அது இல்லாதது போல் பாவிக்கின்றனர். அவர்கள் ஆபிரகாமின் சந்ததியாதலால், வார்த்தையை விசுவாசிக்கின்றனர். பிதாவே, இவர்கள் உம்முடையவர்கள். கடைசி நாட்களில் பிரகாசிக்கின்ற முன் குறிக்கப்பட்ட சபை, பிதாவே, இவர்களுக்காக உமக்கு நன்றி செலுத்துகிறேன். நேசிக்கிறேன்... (அவருக்கு துதியை செலுத்த உங்கள் கரங்களையுயர்த்துங்கள்)... நான்... (மாடியின் முன்பக்கத்தில் உள்ளவர்களும், அது சரி). முந்தி அவர் என்னை நேசித்ததால்...